Home
News

2 சிம் இருக்கா.. இனிமே 84 நாட்களுக்கு அன்லிமிடெட் கால்கள்.. ரூ.156 மாச செலவுல வருது.. உடனே இதை பண்ணுங்க!

ஏர்டெல் (Airtel) சிம் கார்டை செகண்டரியாக வைத்திருக்கும் கஸ்டமர்கள் கண்ணை மூடிக்கொண்டு ரீசார்ஜ் செய்யும்படி மாதத்துக்கு ரூ.156 செலவில் 84 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கும்படி ப்ரீபெய்ட் திட்டம் (Prepaid Plan) ஒன்று கிடைக்கிறது. இந்த நாட்களில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls), எஸ்எம்எஸ் போன்ற பல்வேறு சலுகைகளை கொடுக்கிறது. இந்த ஏர்டெல் திட்டத்தின் முழு சலுகைகளை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களில் இப்போது வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ்கள் மட்டுமே கொடுக்கும் திட்டங்கள் வந்துவிட்டன. இந்த திட்டங்கள் 2 சிம் கார்டுகளை வைத்திருக்கும் கஸ்டமர்கள் அதிகமாக ரீசார்ஜ் செய்து வருகின்றனர். ஒரு சிம் கார்டுக்கு டேட்டா திட்டங்களையும் மற்றொரு சிம் கார்டில் வாய்ஸ் கால்கள் மட்டும் போதும் என்று நினைக்கின்றனர்.

2 சிம் இருக்கா.. இனிமே 84 நாட்களுக்கு கால்கள்.. ரூ.156 மாச செலவில்!

இவர்களுக்கு 84 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ஏர்டெல் ரூ.469 திட்டம் பக்கா தேர்வாக இருக்கும், 28 நாட்கள் வீதம் மூன்று மாதங்களுக்கு இதில் வேலிடிட்டி கிடைக்கிறது. இந்த நாட்கள் முழுவதும் வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ்கள் மட்டுமல்லாமல், கூடுதலாக பல்வேறு சலுகைகள் கிடைக்கின்றன. இதற்கான மாத செலவு வெறும் ரூ.156ஆக மட்டுமே இருக்கிறது.

ஏர்டெல் ரூ.469 திட்ட விவரங்கள் (Airtel Rs 469 Plan Details): வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ்கள் மட்டுமே கொடுக்கும் திட்டங்களில் 84 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கும் திட்டமாக இது இருக்கிறது. மலிவு விலைக்கு கிடைப்பதால், அதிகமாக ரீசார்ஜ் செய்யப்படுகிறது. இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் கிடைக்கிறது.

ஆகவே, வேலிடிட்டி முழுவதும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களுடன் (Roaming Voice Calls) சிம் ஆக்டிவ் (SIM Active) கிடைக்கும். ஆகவே, செகண்டரி சிம் கார்டுக்கு மலிவு விலை திட்டமாக கிடைக்கும். மேலும், 900 எஸ்எம்எஸ்கள் மொத்தமாக கொடுக்கப்படுகிறது. இன்கம்மிங் எஸ்எம்எஸ்கள் இலவசமாக கிடைக்கிறது.

84 நாட்களுக்கு முன்பாக 900 எஸ்எம்எஸ்கள் முடிந்தால், அதன்பிறகு எஸ்எம்எஸ்களுக்கு கட்டணம் இருக்கும். அதேபோல இதில் டேட்டா சலுகை கிடையாது. இதை ரீசார்ஜ் செய்த பிறகு டேட்டா தேவைப்பட்டால், அதற்கான வவுச்சர்களை பயன்படுத்தி கொள்ளலாம். இந்த சலுகைகள் மட்டுமே முக்கியமாக கிடைக்கிறது. மற்ற சலுகைகளும் இதில் கிடைக்கின்றன.

ஆகவே, 30 நாட்களுக்கு ஒரு முறை மாற்றி கொள்ளும்படி ப்ரீ ஹலேடியூன்ஸ் (Free Hello Tunes) சலுகை இந்த திட்டத்துக்கும் கிடைக்கிறது. மேலும், கூடுதல் செலவு இல்லாமல், ஸ்பேம் கால்கள் (Spam Calls) மற்றும் ஸ்பேம் எஸ்எம்எஸ் (Spam SMS) ஆகியவற்றை அலெர்ட் செய்யும் சலுகை கிடைக்கிறது. இறுதியாக ஏஐ சாட்பாட் சந்தாவை இந்த திட்டம் கொடுக்கிறது.

பெர்ப்லெக்ஸிடி ப்ரோ ஏஐ சந்தாவும் இதில் கிடைக்கிறது. ஆனால், திட்டத்துக்கு 84 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கிடைத்தாலும், இந்த சாட்பாட் சந்தாவை 12 மாதங்களுக்கு பயன்படுத்தி கொள்ளலாம். இந்த சலுகைகளையே இந்த ஏர்டெல் ரூ.469 திட்டம் கொடுக்கிறது. இதேபோல மற்றொரு வாய்ஸ் ஒன்லி திட்டம் ஒரு மாதத்துக்கும் குறைவான வேலிடிட்டியில் இருக்கிறது.

இந்த திட்டத்தின் விலை ரூ.189ஆக இருக்கிறது. இதுவொரு ஆரம்ப விலை திட்டமாக இருக்கிறது. இதில் டேட்டாவும் கிடைக்கும். ஆனால், 1 ஜிபி மட்டுமே கிடைக்கும். அதேபோல 21 நாட்கள் வேலிடிட்டி மட்டுமே கொடுக்கும். இதில் வாய்ஸ் கால்கள் சலுகை மற்றும் 300 எஸ்எம்எஸ்கள் மற்றும் பெர்ப்லெக்ஸிடி ப்ரோ ஏஐ சந்தா கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Airtel Rs 469 Plan With 84 Days Validity Unlimited Voice Calls Check Voice Only Plan Offers
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X