2024 ஆட்டம்.. ஜன.1 முதல் Airtel திட்டங்கள்.. மாதம் ரூ.151 போதும்.. 84 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ்!
ஜியோ நிறுவனத்துக்கு நிகராக ஏர்டெல் (Airtel) வாடிக்கையாளர்களுக்கு 2024ஆம் ஆண்டில் கிடைக்கப்போகும் 84 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ப்ரீபெய்ட் திட்டங்களில் (Prepaid Plans) என்னென்ன சலுகைகள் வழங்கப்படுகிறது? ஓடிடி (OTT), 5ஜி (5G) சலுகைகள் உள்ளதா? உள்ளிட்ட முழு விவரம் இதோ.
ஏர்டெல் ரூ 455 திட்ட விவரங்கள் (Airtel Rs 455 Plan Details): இந்த திட்டத்தில் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை செய்துகொள்ளலாம். மொத்தமாக 6 ஜிபி டேட்டா கொடுக்கப்படுகிறது. இதுவொரு லம்ப்-சம் டேட்டா சலுகையாகும். ஆகவே, டெய்லி லிமிட் கிடையாது.

அதோடு 900 எஸ்எம்எஸ் சலுகை கொடுக்கப்படுகிறது. மேலும், மூன்று மாதங்களுக்கான அப்பல்லோ 24|7 சர்க்கிள் (Apollo 24|7 Circle) மெம்பர்ஷிப், வின்க் மியூசிக் (Wynk Music), ப்ரீ ஹெலோ டியூன்ஸ் (Free Hellotunes) போன்ற சலுகைகள் கிடைக்கிறது. இந்த திட்டத்துக்கு 84 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது.
ஏர்டெல் ரூ 719 திட்ட விவரங்கள் (Airtel Rs 719 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் டெய்லி டேட்டா மற்றும் 5ஜி டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது. ஆகவே, இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், நாளொன்றுக்கு 1.5 ஜிபி வீதம் மொத்தமாக 126 ஜிபி டேட்டாவை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தலாம்.
அதோடு அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் கால் சலுகை மற்றும் நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் சலுகை கொடுக்கப்படுகிறது. அதோடு ஏர்டெல் அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகையும் கிடைக்கிறது. முந்தைய திட்டத்தை போல, அப்பல்லோ 24|7 சர்க்கிள், வின்ங்க் மியூசிக், ப்ரீ ஹலோ டியூன்ஸ் மற்றும் 84 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது.

ஏர்டெல் ரூ 839 திட்ட விவரங்கள் (Airtel Rs 839 Plan Details): இந்த திட்டத்தில் டேட்டா, வாய்ஸ், எஸ்எம்எஸ் சலுகை மட்டுமல்லாமல், ஓடிடி சலுகையும் கொடுக்கப்படுகிறது. இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா வீதம் மொத்தமாக 168 ஜிபி டேட்டா கிடைக்கிறது. அதேபோல நளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களை செய்துகொள்ளலாம்.
அதோடு அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால் சலுகை கொடுக்கப்படுகிறது. அதேபோல அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகை மற்றும் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளே (Airtel Xstream Play) சலுகை கிடைக்கிறது. இதன் கீழ் 20+ ஓடிடி ஆப்களை பயன்படுத்தலாம். இந்த திட்டத்துக்கும் 84 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது.
ஏர்டெல் ரூ 869 திட்ட விவரங்கள் (Airtel Rs 869 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா சலுகை கிடைக்கிறது. அதேபோல 100 எஸ்எம்எஸ்கள் மற்றும் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை செய்து கொள்ளலாம்.
மேலும், அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகை மற்றும் அப்பல்லோ 24|7 சர்க்கிள், வின்க் மியூசிக், ப்ரீ ஹெலோ டியூன்ஸ் சலுகை கிடைக்கிறது. இந்த சலுகைகள் போக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் (Disney+Hotstar) சலுகை வழங்கப்படுகிறது. இந்த சப்ஸ்கிரிப்ஷனை 3 மாதங்களுக்கு பயன்படுத்தலாம்.
ஏர்டெல் ரூ 999 திட்ட விவரங்கள் (Airtel Rs 999 Plan Details): இந்த திட்டத்தில் முந்தைய அனைத்து திட்டங்களையும் விட கூடுதல் டேட்டா மற்றும் ஓடிடி சலுகைகள் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், நளொன்றுக்கு 2.5 ஜிபி டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது.
அதோடு அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் நளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் சலுகை வழங்கப்படுகிறது. இந்த சலுகைகள் போக அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video) சப்ஸ்கிரிப்ஷன் கொடுக்கப்படுகிறது. மேலும், அன்லிமிடெட் 5ஜி டேட்டா, ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளே, அப்பல்லோ 24|7 சர்க்கிள் மற்றும் வின்ங்க் மியூசிக் சலுகைகள் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








