Home
News

Airtel போட்ட போடு.. ரூ.100 இல்ல.. ரூ.195 இல்ல.. இனிமே ரூ.451-க்கும் வருது.. 3 மாதங்களுக்கு ஓடிடி சந்தா!

ஏர்டெல் (Airtel) கஸ்டமர்களுக்கு ரூ.100, ரூ.195 விலையில் கிடைத்து வந்ததை போலவே ரூ.451 விலையிலான ப்ரீபெய்ட் திட்டத்திலும் மூன்று மாதங்களுக்கு ஜியோஹாஸ்டார் மொபைல் (JioHotstar Mobile) சந்தா கிடைக்கிறது. இந்த புதிய திட்டத்தின் முழு சலுகைகளையும் இப்போது தெரிந்து கொள்ளலாம். அதேபோல வாய்ஸ் கால்கள், தினசரி டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகளுடன் கிடைக்கும் ஜியோஹாட்ஸ்டார் திட்டங்களையும் இங்கே பார்க்கலாம்.

ஏர்டெல் ரூ 451 திட்ட விவரங்கள் (Airtel Rs 451 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டம் டேட்டா மற்றும் ஓடிடி சலுகைகளை மட்டுமே கொடுக்கும். ஆகவே, ஏர்டெல் கஸ்டமர்களிடம் ஆக்டிவ் திட்டம் இருக்க வேண்டும். சொல்லப்போனால், இந்த திட்டம் ஜியோஹாட்ஸ்டார் சந்தாவுக்காக பிரத்யேகமாக கிடைக்கிறது. ஆகவே, இதை ரீசார்ஜ் செய்தால் 3 மாதங்களுக்கு ஜியோஹாட்ஸ்டார் கிடைக்கும்.

Airtel போட்ட போடு.. ரூ.100 இல்ல.. ரூ.195 இல்ல.. ரூ.451-க்கும் வருது!

இதில் மொபைல் சலுகைகளை கஸ்டமர்கள் பெற்று கொள்ளலாம். இந்த ஓடிடி போக 50 ஜிபி டேட்டா கிடைக்கிறது. இந்த டேட்டாவுக்கு 30 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கிடைக்கிறது. இந்த நாட்களுக்குள் முழு டேட்டாவையும் பயன்படுத்திவிட்டால், வழக்கமாக கிடைக்கும் 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா சலுகையானது, இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்காது.

ஆகவே, டேட்டா மற்றும் ஓடிடி மட்டுமே போதும் என்றால், இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்யலாம். இதைவிட மலிவான விலைக்கு ஜியோஹாட்ஸ்டார் சந்தா கிடைக்குமா என்றால், மேலும் 2 திட்டங்கள் இருக்கின்றன. இந்த திட்டங்களும் டேட்டா வவுச்சர்களாகவே இருக்கின்றன. வெறும் ரூ.100 முதல் திட்டம் தொடங்குகிறது. ஏர்டெல் ரூ 100 திட்டத்தில் 5 ஜிபி டேட்டா கிடைக்கிறது.

இந்த டேட்டாவுடன் முந்தைய திட்டத்தை போலவே 3 மாதங்களுக்கு ஜியோஹாட்ஸ்டார் சந்தா கிடைக்கிறது. இதற்கு அடுத்து ஏர்டெல் ரூ 195 திட்டம் இருக்கிறது. இந்த திட்டத்துக்கு 30 நாட்கள் வேலிடிட்டி மற்றும் 15 ஜிபி டேட்டா கிடைக்கிறது. 3 மாதங்களுக்கான ஜியோஹாட்ஸ்டார் மொபைல் சந்தா வருகிறது. டேட்டாவுக்கும் 90 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது.

ஒருவேளை உங்களுக்கு வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ்கள் மற்றும் டேட்டாவுடன் ஜியோஹாட்ஸ்டார் சந்தா வேண்டுமானால், ஏர்டெல் ரூ 310 ப்ரீபெய்ட் திட்டத்தை (Airtel Rs 301 Prepaid Plan) ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். இதில் 28 நாட்கள் வேலிடிட்டி மற்றும் அந்த நாட்களில் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) வருகிறது.

மேலும், இதில் லம்ப்-சம் டேட்டா கிடையாது, நாளொன்றுக்கு 1 ஜிபி டேட்டாவும் அதற்கு பிறகு 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டாவும் (Post Data) கிடைக்கிறது. 100 எஸ்எம்எஸ்கள், அப்பல்லோ 24/7 சர்க்கிள், ப்ரீ ஹாலே டியூன்ஸ் சலுகைகளும் வருகிறது. இந்த சலுகைகள் போக ஜியோஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவும் 90 நாட்களுக்கு பயன்படுத்தி கொள்ள கிடைக்கிறது.

அதிக வேலிடிட்டி வேண்டுமானால், ஏர்டெல் ரூ 1029 ப்ரீபெய்ட் திட்டத்தை (Airtel Rs 1029 Prepaid Plan) ரீசார்ஜ் செய்து கொள்ளுங்கள். இதில் ஜியோஹாட்ஸ்டார் மொபைல் சந்தா 3 மாதங்களுக்கு கிடைக்கிறது என்றால், டேட்டா, வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ்களுக்கு 84 நாட்கள் வேலிடிட்டி வருகிறது. அதேபோல அன்லிமிடெட் 5ஜி டேட்டாவும் இதில் கிடைக்கிறது.

இந்த ப்ரீபெய்ட் திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், வேலிடிட்டி முழுவதும் நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா, 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் சலுகை கிடைக்கிறது. மேலும், முந்தைய திட்டத்தில் பார்த்த 100 எஸ்எம்எஸ்கள், அப்பல்லோ 24/7 சர்க்கிள், ப்ரீ ஹாலே டியூன்ஸ் மற்றும் ஸ்பேம் வாய்ஸ், எஸ்எம்எஸ் அலெர்ட் சலுகையும் வருகிறது.

Best Mobiles in India

English summary
Airtel Rs 451 Plan With 50GB Data 30 Days Validity JioHotstar Mobile For 3 Months Check New Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X