ஜியோ VS ஏர்டெல்.. ரூ.450 ப்ரீபெய்ட் திட்டம்.. இந்த மேட்டர் தெரியாம ரீசார்ஜ் பண்ணாதீங்க.. ஏன்?
ஜியோ (jio) மற்றும் ஏர்டெல் (airtel) நிறுவனங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு பட்ஜெட் விலையில் ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்து வருகின்றன. அதுவும் இந்நிறுவனங்கள் தற்போது ஓடிடி சந்தா தரும் ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்குவதில் தான் அதிக ஆர்வம் காட்டுகின்றன.
இந்நிலையில் ஏர்டெல் ரூ.449 ப்ரீபெய்ட் திட்டத்துக்குப் போட்டியாக ஜியோ நிறுவனம் ரூ.450 ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்தது. இந்த இரண்டு திட்டங்களில் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன மற்றும் எதை தேர்வு செய்வது நல்லது என்பதை இப்போது பார்க்கலாம்.

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.449 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel rs 449 prepaid Plan) தான் தினமும் 4ஜிபி டேட்டா வழங்குகிறது. அதுவும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் ஏர்டெல் ரூ.449 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 112ஜிபி டேட்டா கிடைக்கும்.இந்த திட்டத்தில் தினசரி 4ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறையும்.
அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை வழங்குகிறது இந்த ஏர்டெல் ரூ.449 ப்ரீபெய்ட் திட்டம். தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது இந்த ஏர்டெல் ரூ.449 ப்ரீபெய்ட் திட்டம். அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data), ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes), ஆப்பிள் மியூசிக், Google One (கூகுள் ஒன்) சந்தா உள்ளிட்ட நன்மைகள் இந்த ஏர்டெல் திட்டத்தில் கிடைக்கும்.
ஏர்டெல் ரூ.449 ப்ரீபெய்ட் திட்டத்தில் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே (Airtel Xstream Play) சந்தா வழங்கப்படுகிறது. இதன் மூலம் சோனிலிவ் (SonyLIV), மனோரமா மேக்ஸ் (Manorama Max), லயன்ஸ்கேட் பிளே போன்ற 20 ஓடிடி சந்தா கிடைக்கிறது. அதேபோல் 28 நாட்களுக்கு ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) சந்தாவும் வழங்குகிறது இந்த ஏர்டெல் திட்டம்.
ஜியோவின் ரூ.450 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 450 Prepaid Plan) தினமும் 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 36 நாட்கள் ஆகும். எனவே இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 72ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் 64 கேபிபிஎஸ் வேகத்தில் இன்டர்நெட் பயன்படுத்தலாம்.
அதேபோல் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை ஜியோ ரூ.450 ப்ரீபெய்ட் திட்டத்தில் கொடுக்கப்படுகிறது. மேலும் தினமும் 100 எஸ்எம்எஸ், கூகுள் ஜெமினி ப்ரோ, ஜியோ டிவி (JioTV), ஜியோ கிளவுட் (JioCloud) ஆகியவற்றை இந்த திட்டம் மூலம் பயன்படுத்திக்கொள்ள முடியும்.
ஜியோ ரூ.450 ப்ரீபெய்ட் திட்டத்தில் ஜியோஹாட்ஸ்டார் சந்தா (JioHotstar Subscription) மூன்று மாதங்களுக்குக் கிடைக்கும். குறிப்பாக மொபைல் மற்றும் ஸ்மார்ட் டிவிகளில் இந்த ஜியோஹாட்ஸ்டார் சந்தாவை பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் மூன்று மாதங்களுக்கு சந்தா கிடைப்பதால், இந்த திட்டத்துக்கு கிடைத்துள்ள 36 நாட்கள் வேலிடிட்டி முடிந்தவுடன் அடுத்த 48 மணி நேரத்துக்குள் புதிய ரீசார்ஜ் செய்ய வேண்டும். இதை செய்தால் மட்டுமே 36 நாட்களுக்கு பிறகும் வழக்கம் போல ஜியோஹாட்ஸ்டார் சந்தாவை பயன்படுத்த முடியும்.

ஜியோ திட்டத்தில் லைவ் டிவி சேனல்கள் மற்றும் பிரீமியம் ஓடிடி சந்தாவை தரும் ஜியோஹோம் (JioHome)சந்தா கிடைக்கிறது. ஆனால் இந்த சந்தா முதல் 2 மாதங்களுக்கு மட்டுமே இலவசமாக கிடைக்கும். இரண்டு மாதம் முடிந்த பிறகு கட்டணம் செலுத்தி திட்டத்தைத் தொடர்ந்து கொள்ளலாம். பின்பு இதில் வைஃபை டேட்டா (Wi-Fi Data) மற்றும் வைஃபை காலிங் (Wi-Fi Calling) சலுகைகளும் கிடைக்கும்.
எதை தேர்வு செய்வது நல்லது
ஜியோவின் ரூ.450 ப்ரீபெய்ட் திட்டத்தை விட ஏர்டெல் ரூ.449 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது அதிக டேட்டா மற்றும் அதிக ஓடிடி நன்மைகளை வழங்குகிறது. எனவே அதிக டேட்டா மற்றும் ஓடிடி சந்தா விரும்பும் பயனர்கள் ஏர்டெல் திட்டத்தில் ரீசார்ஜ் செய்வது நல்லது. ஆனால் அதிக நாட்கள் வேலிடிட்டி எதிர்பார்க்கும் பயனர்கள் ஜியோவின் ரூ.450 திட்டத்தில் ரீசார்ஜ் செய்வது நல்லது.


Click it and Unblock the Notifications








