Home
News

ஏர்டெல் அதிரடி.. கம்மி விலையில் தினமும் 4ஜிபி டேட்டா.. OTT.. வாய்ஸ் கால்கள்.. எந்த திட்டம்?

ஏர்டெல் (Airtel) நிறுவனம் ஜியோ, வோடபோன் ஐடியா நிறுவனங்களுக்குப் போட்டியாக அவ்வப்போது புதிய புதிய திட்டங்கள் மற்றும் சலுகைகளை வழங்கி வருகிறது. குறிப்பாக ஏர்டெல் கொண்டுவரும் ஒவ்வொரு ப்ரீபெய்ட் திட்டங்களும் நல்ல வரவேற்பு உள்ளது. காரணம் என்னவென்றால் இந்நிறுவனம் ப்ரீபெய்ட் திட்டங்களில் கூடுதல் சலுகைகளை வழங்குகிறது.

எனவே தான் பலர் ஏர்டெல் திட்டங்களில் ரீசார்ஜ் செய்ய அதிக ஆர்வம் காட்டுகின்றர். சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது ஏர்டெல் ரூ.449 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது முன்பு தினமும் 3ஜிபி டேட்டா நன்மையைத் தான் வழங்கியது. ஆனால் தற்போது இந்த திட்டத்தில் கூடுதல் டேட்டா நன்மைகள் வழங்கப்படுகிறது. இது குறித்த தகவல்களைப் பார்க்கலாம்.

ஏர்டெல் அதிரடி.. கம்மி விலையில் தினமும் 4ஜிபி டேட்டா.. எந்த திட்டம்?

ஏர்டெல் ரூ.449 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel rs 449 prepaid Plan) ஆனது முன்பு தினமும் 3ஜிபி டேட்டா வழங்கியது. ஆனால் தற்போது இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் தினமும் 4ஜிபி டேட்டா நன்மை கிடைக்கிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் ஏர்டெல் ரூ.449 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 112ஜிபி டேட்டா கிடைக்கும்.

அதேபோல் இந்த திட்டத்தில் தினசரி 4GB டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறையும். அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை வழங்குகிறது இந்த ஏர்டெல் ரூ.449 ப்ரீபெய்ட் திட்டம். குறிப்பாக இந்த திட்டம் அதிகமான ஓடிடி நன்மைகளை வழங்குகிறது.

அதாவது ஏர்டெல் ரூ.449 ப்ரீபெய்ட் திட்டத்தில் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே (Airtel Xstream Play) சந்தா வழங்கப்படுகிறது. இதன் மூலம் சோனிலிவ் (SonyLIV), மனோரமா மேக்ஸ் (Manorama Max), லயன்ஸ்கேட் பிளே (Lionsgate Play), எபிக் ஆன் (Epic On), சோஷியல் ஸ்வாக் (Social Swag) சந்தா, கான்ச்சா லங்கா (Kanccha Lanka) கிளிக் (Klikk), ஹங்கமா (Hungama), ஃபேன் கோட் (Fan Code), ஈராஸ் நவ் (Eros Now), ஷார்ட்ஸ் டிவி (Shorts TV), ஹோய்சோய் (HoiChoi) போன்ற ஓடிடி ஆப்களை பெற்று கொள்ளலாம்.

இதுதவிர சன்நெக்ஸ்ட் (Sun NXT) டாகுபே (Docubay), டாலிவுட்பிளே (Dollywood Play), அல்ட்ரா (Ultra), சாவ்பால் (Chaupal), டாலிவுட்பிளே (Dollywood Play), நம்ம ஃபிளிக்ஸ் (Namma Flix) போன்ற ஓடிடி தளங்களை ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே சந்தா மூலம் பெறமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் 28 நாட்களுக்கு ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) சந்தாவும் வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம்.

மேலும் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது இந்த ஏர்டெல் ரூ.449 ப்ரீபெய்ட் திட்டம். அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data), ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes), பெர்ப்லெக்ஸிடி ப்ரோ ஏஐ (Perplexity Pro AI) உள்ளிட்ட நன்மைகள் இந்த ஏர்டெல் திட்டத்தில் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை தினமும் 2ஜிபி டேட்டா ஒரு மாதம் வேலிடிட்டி எதிர்பார்க்கும் பயனர்கள் ரூ.379 ப்ரீபெய்ட் திட்டத்தை தேர்வு செய்வது நல்லது.

ஏர்டெல் அதிரடி.. கம்மி விலையில் தினமும் 4ஜிபி டேட்டா.. எந்த திட்டம்?

ஏர்டெல் ரூ.379 ப்ரீபெய்ட் திட்டம் (airtel rs 379 prepaid plan) தினசரி 2ஜிபி டேட்டா வழங்குகிறது. பின்பு இந்த திட்டத்தின் வேலிடிட்டி ஒரு மாதம் ஆகும். நீங்கள் இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 62ஜிபி வரை டேட்டா கிடைக்கும். அதேபோல் இந்த திட்டத்தில் தினசரி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறையும்.

அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) & ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) நன்மையை வழங்குகிறது ஏர்டெல் ரூ.379 ப்ரீபெய்ட் திட்டம். தினமும் 100 எஸ்எம்எஸ், ஹலோ டியூன்ஸ் (Hello Tunes), பெர்ப்லெக்ஸிடி ப்ரோ ஏஐ (Perplexity Pro AI), அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) உள்ளிட்ட நன்மைகள் இந்த திட்டம் மூலம் பெறமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Airtel Rs 449 Prepaid Plan offers 4GB data per day and unlimited benefits: check details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X