ஏர்டெல் Vs ஜியோ.. ரூ.449 ரீசார்ஜ்.. அன்லிமிடெட் வாய்ஸ்.. 75 ஜிபி டேட்டா.. ஓடிடி சந்தா.. என்னென்ன சலுகைகள்?
பார்தி ஏர்டெல் (Bharti Airtel) மற்றும் ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனங்களின் போஸ்ட்பெய்ட் கஸ்டமர்களுக்கு ரூ.449 விலையில் தலா ஒரு திட்டம் இருக்கிறது. ஆகவே, ஒரே விலையில் 2 நிறுவனங்களும் என்னென்ன சலுகைகளை கொடுக்கிறது? என்பதை இப்போது தெரிந்து கொள்ளலாம். இதில் எந்த போஸ்ட்பெய்ட் திட்டத்தில் (Postpaid Plan) அதிக சலுகைகள் கிடைக்கிறது என்பதை அந்தந்த கஸ்டமர்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
ஏர்டெல் ரூ 449 போஸ்ட்பெய்ட் திட்ட விவரங்கள் (Airtel Rs 449 Postpaid Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் 1 சிம் கார்டுக்கு மட்டுமே சலுகைகள் கிடைக்கிறது. இந்த சிம் கார்டுக்கு அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் (Roaming) வாய்ஸ் கால்கள் சலுகை மற்றும் 75 ஜிபி டேட்டா கிடைக்கிறது. மேலும், 100 ஜிபிக்கான கூகுள் ஒன் கிளவுட் ஸ்டோரேஜ் கிடைக்கிறது.

இதுபோக 100 எஸ்எம்எஸ்கள் மற்றும் பல்வேறு ஓடிடி ஆப்களை பண்டிலாக கொடுக்கும் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளே பிரீமியம் (Airtel Xstream Play Premium) சந்தா கிடைக்கிறது. மேலும், ப்ளூ ரிப்பன் பேக் (Blue Ribbon Bag) சலுகை மற்றும் அப்பல்லோ 24/7 சர்க்கிள் (Apollo 24/7 Circle) மெம்பர்ஷிப் கிடைக்கிறது. இதுபோக ப்ரீ ஹலேடியூன்ஸ் மற்றும் ப்ராவ்ட் டிடெக்சன் மற்றும் ஸ்பேம் அலெர்ட் வருகிறது.
ஜியோ ரூ 449 போஸ்ட்பெய்ட் திட்ட விவரங்கள் (Jio Rs 449 Postpaid Plan Details): இந்த போஸ்ட்பெய்ட் திட்டத்தில் வாய்ஸ் கால்கள், டேட்டா சலுகைகள் ஒரே மாதிரியாகவே கிடைக்கின்றன. இருப்பினும், இந்த திட்டத்தில் அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) சலுகையை பெற்று கொள்ளலாம். 75 ஜிபி டேட்டா இந்த திட்டத்தில் கிடைக்கிறது. அன்லிமிடெட் லோக்கல் வாய்ஸ் கிடைக்கிறது.
அதேபோல அன்லிமிடெட் எஸ்டிடி கால்கள் மற்றும் ரோமிங் கால்கள் வருகின்றன. 75 ஜிபி டேட்டாவுக்கு பிறகு ஒரு ஜிபி டேட்டாவுக்கு ரூ.10 கட்டணமாக செலுத்த வேண்டி இருக்கிறது. இந்த போஸ்ட்பெய்ட் திட்டம் ஃபேமிலி சலுகைகளை கொடுக்கிறது. ஆகவே, அதிகபட்சம் 3 கூடுதல் சிம் கார்டுகளை ஆட் செய்து அதற்கும் சலுகைகளை பெற்று கொள்ளலாம்.

ஆனால், கூடுதலாக ஆட் செய்யப்படும் சிம் கார்டுகளுக்கு மாதம் 5 ஜிபி டேட்டா மட்டுமே கிடைக்கும். ஆனால், வாய்ஸ் கால்களானது, அன்லிமிடெட் சலுகையில் கொடுக்கப்படுகிறது. இந்த போஸ்ட்பெய்ட் திட்டத்துக்கும் 100 எஸ்எம்எஸ்கள் தினசரிக்கு கிடைக்கின்றன. இதிலும் கிளவுட் டேட்டா சலுகை கிடைக்கிறது. ஆனால், ஜியோ ஏஐ கிளவுட் (Jio AI Cloud) மட்டுமே கிடைக்கிறது.
அதேபோல இதில் 50 ஜிபிக்கான கிளவுட் ஸ்டோரேஜ் மட்டுமே கிடைக்கிறது. ஓடிடி சந்தாவை பார்க்கையில், ஜியோஹாட்ஸ்டார் மொபைல்/டிவி (JioHotstar Mobile/TV) வருகிறது. இதற்கு 90 நாட்கள் சந்தா கொடுக்கப்படுகிறது. ஆகவே, ஒரு மாத பில் முடிந்தவுடன் அடுத்த பில்லை டியூ இல்லாமல் முடித்தால் மட்டுமே 90 நாட்களுக்கும் ஜியோஹாட்ஸ்டார் சந்தாவை பயன்படுத்தி கொள்ளலாம்.
மேலும், ஜியோ டிவி (Jio TV) சலுகை வருகிறது. கூடுதலாக ஆட் செய்யும் சிம் கார்டுக்கு ரூ.150 வசூலிக்கப்படுகிறது. இந்த சலுகைகளையே ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் ஒரே விலைக்கு கொடுக்கின்றன. இதில் எந்த திட்டத்தில் அதிக சலுகைகள் கிடைக்கிறது என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். இதுபோன்ற செய்திகளுக்கு கிஸ்பாட் தளத்தை பின்தொடருங்கள்.


Click it and Unblock the Notifications








