Home
News

இப்படி இருக்கணும் போட்டி.. ஏர்டெல் Vs ஜியோ.. ரூ.499-க்கு அன்லிமிடெட் வாய்ஸ்.. டேட்டா, எஸ்எம்எஸ்.. ஓடிடி சந்தா!

ஏர்டெல் (Airtel) மற்றும் ஜியோ (Jio) நிறுவனங்களில் ஒரே விலைக்கு கிடைக்கும் போஸ்ட்பெய்ட் திட்டத்தின் (Postpaid Plan) சலுகைகளை இப்போது தெரிந்து கொள்ளலாம். இதில் டேட்டா, வாய்ஸ், எஸ்எம்எஸ் மட்டுமல்லாமல், ஓடிடி சந்தா, பேமிலி சிம் கனெக்டிவிட்டி மற்றும் கிளவுட் ஸ்டோரேஜ் போன்ற பல்வேறு சலுகைகள் இருக்கின்றன. எந்த திட்டத்தில் என்னென்ன சலுகைகள் கிடைக்கிறது என்பதை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

ஏர்டெல் ரூ 449 போஸ்ட்பெய்ட் திட்டம் (Airtel Rs 449 Postpaid Plan): இந்த திட்டத்தில் 1 சிம் கார்டுக்கு மட்டுமே சலுகைகள் கிடைக்கும். ஃபேமிலி சிம் கார்டுளை இணைக்க முடியாது. ஆகவே, அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை (Roaming Voice Calls) போஸ்ட்பெய்ட் கஸ்டமர்கள் செய்து கொள்ளலாம்.

இப்படி இருக்கணும் போட்டி.. ஏர்டெல் Vs ஜியோ.. ரூ.499-க்கு அன்லிமிடெட்!

நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் கிடைக்கின்றன. 50 ஜிபி டேட்டா மற்றும் கூகுள் ஒன் (Google One) சந்தா மூலம் 100 ஜிபிக்கான கிளவுட் ஸ்டோரேஜ் (100GB Cloud Storage) கொடுக்கப்படுகிறது. இந்த போஸ்ட்பெய்ட் திட்டத்துக்கு சோனிலிவ், சன்நெக்ஸ்ட், ஆஹா உள்ளிட்ட ஆப்களை கொண்ட ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளே பிரீமியம் (Airtel Xstream Play Premium) சந்தா கொடுக்கப்படுகிறது.

இப்போது, கூடுதல் சலுகைகளை தெரிந்து கொள்ளலாம். இதில் பெர்ப்லெக்ஸிடி ப்ரோ ஏஐ (Perplexity Pro AI) சந்தா கிடைக்கிறது. இதை 12 மாதங்களுக்கு கஸ்டமர்கள் பயன்படுத்த முடியும். ப்ளூ ரிப்பன் பேக் (Blue Ribbon Bag) சலுகையும் இந்த திட்டத்துக்கு கிடைக்கிறது. மேலும், ப்ராடு டிடெக்சன் மற்றும் ஸ்பேம் அலெர்ட் (Fraud Detection & Spam Alerts) சலுகையை பெற்று கொள்ளலாம்.

இதுபோக ப்ரீ ஹலே டியூன்ஸ் (Free Hello Tunes) சலுகை கொடுக்கப்படுகிறது. அதிக ஓடிடி ஆப்களை ஒரே திட்டத்தில் கொடுக்கிறது. ஆனால், பிரீமியம் ஓடிடி ஆப்கள் இதில் கொடுக்கப்படவில்லை. அதேபோல ஃபேமிலி சிம் கார்டு இணைப்பையும் இந்த திட்டம் கொடுக்கவில்லை. இப்போது, ஜியோ போஸ்பெய்ட் திட்டத்தின் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

ஜியோ ரூ 449 போஸ்ட்பெய்ட் திட்டம் (Jio Rs 449 Postpaid Plan): இந்த திட்டத்தில் ஃபேமிலி சிம் கார்டை இணைத்து கொள்ளலாம். அதிகபட்சம் 3 சிம் கார்டுகளை இணைக்க முடியும். 75 ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி & ரோமிங் வாய்ஸ் கால்களை கொடுக்கிறது. கூடுதலாக இணைக்கப்படும் சிம் கார்டுகளுக்கு 5 ஜிபி டேட்டா கிடைக்கும்.

அதேபோல அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களும் கொடுக்கப்படும். நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் சலுகையை பெற்று கொள்ளலாம். 75 ஜிபி டேட்டா மட்டுமல்லாமல், இந்த திட்டத்துக்கு அன்லிமிடெட் 5ஜி டேட்டாவும் (Unlimited 5G Data) இதில் கிடைக்கிறது. இப்போது கூடுதல் சலுகைகளை தெரிந்து கொள்ளலாம்.

இந்த போஸ்ட்பெய்ட் திட்டத்துக்கு ஜியோஹாட்ஸ்டார் மொபைல் (JioHotstar Mobile) சந்தா கிடைக்கிறது. இதை 3 மாதங்களுக்கு பார்த்து கொள்ளலாம். இந்த ஒரேவொரு ஓடிடி மட்டுமே கிடைக்கும். ஆனால், இது பிரீமியம் ஓடிடியாக இருக்கிறது. ஜியோடிவி (JioTV) ஆப் உள்ளது. ஆனால், அதில் பிரீமியம் சலுகை கிடைக்காது. ஜியோ ஏஐ கிளவுட் (Jio AI Cloud) கிடைக்கிறது.

இதில் 50 ஜிபிக்கான ஸ்டோரேஜ் கிடைக்கும். 2 மாதங்களுக்கு ட்ரையல் பார்த்துகொள்ளும்படி ஜியோஹோம் (JioHome) சலுகை கிடைக்கிறது. மேலும், 2 சதவீத ஜியோ கோல்டு கூடுதலாக கிடைக்கிறது. அதாவது, ஜியோஃபைனான்ஸ் ஆப் மூலம் வாங்கும் ஜியோ கோல்டில் கூடுதலாக 2 சதவீதம் பெற்று கொள்ளலாம். இந்த சலுகைகளையே இந்த திட்டம் கொடுக்கிறது.

அதிக ஓடிடி ஆப்களுக்கு ஏர்டெல் போஸ்ட்பெய்ட் திட்டத்தை தேர்ந்தெடுக்கலாம். அதேபோல அதிக டேட்டா மற்றும் ஃபேமிலி சிம் கார்டு இணைப்புக்கு ஜியோ போஸ்ட்பெய்ட் திட்டத்தை தேர்ந்தெடுக்கலாம். கூடுதல் சலுகைகளை பார்க்கையில், ஒவ்வொன்றும் பிரத்யேக சலுகைகளை கொடுப்பதால், தேவைக்கு ஏற்ப ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். அதில் பெஸ்ட் கிடையாது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Airtel Rs 449 Postpaid Plan Vs Jio Rs 449 Postpaid Plan With Voice Calls Family SIM Connections
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X