Airtel-க்கு கும்பிடு.. இந்த திட்டம் போதுங்க.. ரூ.449-க்கு அன்லிமிடெட் வாய்ஸ்.. 75 ஜிபி டேட்டா.. ஓடிடி சந்தா!
ஏர்டெல் (Airtel) ப்ரீபெய்ட் கஸ்டமர்கள் போஸ்ட்பெய்டுக்கு மாறிடலாமா என்று எண்ண வைக்கும்படி 2 திட்டங்கள் இருக்கின்றன. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் தொடங்கி டேட்டா, எஸ்எம்எஸ் மற்றும் ஓடிடி சலுகைகள் வரையில் குறையில்லாமல் கிடைக்கிறது. இந்த ஏர்டெல் போஸ்ட்பெய்ட் திட்டங்களின் (Airtel Postpaid Plans) முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
ஏர்டெல் ரூ 499 போஸ்ட்பெய்ட் திட்டம் (Airtel Rs 449 Postpaid Plan) மற்றும் ஏர்டெல் ரூ 549 போஸ்ட்பெய்ட் திட்டம் (Airtel Rs 549 Postpaid Plan) ஆகியவற்றின் சலுகைகளையே இப்போது நாம் பார்க்க இருக்கிறோம். ஏர்டெல் போஸ்ட்பெய்ட் திட்டங்களில் 2 சிம் கார்டுகளுக்கு ஒரே ரீசார்ஜில் சலுகை இருக்கிறது. ஆனால், இந்த திட்டங்கள் ஒரு சிம் கார்டுக்கு மட்டுமே சலுகைகளை கொடுக்கிறது.

ஏர்டெல் ரூ 499 போஸ்ட்பெய்ட் திட்டம்: இந்த போஸ்ட்பெய்ட் திட்டத்தில் அன்லிமிடெட் கால்கள் (Unlimited Calls) சலுகை கிடைக்கிறது. ஆகவே, லோக்கல் (Local) மற்றும் எஸ்டிடி ரோமிங் கால்களை (STD Roaming Calls) செய்து கொள்ளலாம். 100 எஸ்எம்எஸ் சலுகைகளையும் 75 ஜிபி டேட்டாவையும் கொடுக்கிறது. அதாவது, 75 ஜிபி டேட்டாவானது, மாதாந்திர வேலிட்டிக்கு பொருந்தும்.
இந்த சலுகைகளுக்கு அடுத்து பிரீமியமான ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிளே பிரீமியம் (Airtel Xstream Play) சலுகையின் கீழ் ஓடிடி ஆப்களின் சந்தா கிடைக்கிறது. இந்த சந்தாவின் மூலம் சோனிலிவ் (SonyLIV), ஈராஸ் நவ் (Eros Now), மனோரமா மேக்ஸ் (Manorama Max), ஃபேன் கோட் (Fan Code), எபிக் ஆன் (Epic On), ராஜ் டிஜிட்டல் டிவி (Raj Digital TV), கான்ச்சா லங்கா (Kanccha Lanka) ஆப்கள் வருகிறது.
மேலும், லயன்ஸ்கேட் பிளே (Lionsgate Play), கிளிக் (Klikk), டாலிவுட்பிளே (Dollywood Play), ஷார்ட்ஸ் டிவி (Shorts TV), டாகுபே (Docubay), டாலிவுட்பிளே (Dollywood Play), அல்ட்ரா (Ultra), சாவ்பால் (Chaupal) மற்றும் ஹங்கமா (Hungama) சந்தா கிடைக்கிறது. இதுபோக ஹோய்சோய் (HoiChoi), நம்ம ஃபிளிக்ஸ் (Namma Flix), சோஷியல் ஸ்வாக் (Social Swag) சந்தா கொடுக்கப்படுகிறது.
,அல்ட்ரா (Ultra) மற்றும் ஷீமாரூமீ (Shemaroome) ஆப்களின் சந்தாவும் இதில் கிடைக்கிறது. இந்த ஓடிடி சலுகைகள் மட்டுமல்லாமல், அமேசான் பிரைம் வீடியோ, டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டார் போன்ற பிரீமியம் ஓடிடி ஆப்கள் மற்றும் ஏர்டெல் தேங்க்ஸ் போன்ற சலுகைகள் வேண்டுமானால், அடுத்து வரும் போஸ்ட்பெய்ட் திட்டத்தை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.
ஏர்டெல் ரூ 549 போஸ்ட்பெய்ட் திட்டம்: இந்த போஸ்ட்பெய்ட் திட்டத்திலும் 1 சிம் கார்டுக்கு மட்டுமே சலுகைகள் கொடுக்கப்படும். இருப்பினும், அதிகப்படியான சலுகைகளாக இருக்கின்றன. ஆகவே, இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு முந்தைய திட்டத்தை போலவே 75 ஜிபி டேட்டா மற்றும் லோக்கல், எஸ்டிடி ரோமிங் கால்கள் கொடுக்கப்படுகிறது.
மேலும், 100 எஸ்எம்எஸ்கள் மற்றும் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே பிரீமியம் சந்தா கொடுக்கப்படுகிறது. ஆகவே, முந்தைய திட்டத்தில் பார்த்த ஓடிடி ஆப்களை பயன்படுத்தி கொள்ளலாம். இதுபோக 6 மாத சந்தாவில் அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video) கிடைக்கிறது. மேலும், டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar) மொபைல் சந்தா வருகிறது.
இதுமட்டுமல்ல, ப்ளூ ரிப்பன் பேக் (Blue Ribbon Bag) சலுகை மற்றும் அப்பல்லோ 24/7 சர்க்கிள் (Apollo 24|7 Circle) சலுகைகள் கொடுக்கப்படுகின்றன. மேலும், விஐபி சர்வீஸ் (VIP Service) மற்றும் விங்க் மியூக்கில் ஹாலே டியூன்ஸ் சலுகை கொடுக்கப்படுகிறது. இவ்வளவு சலுகைகளும் வெறும் ரூ.549 மதிப்பிலான திட்டத்தில் கொடுக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








