Airtel ஒரே போடு.. ரூ.449 ரெடியா வைங்க.. அன்லிமிடெட் 4ஜி, 5ஜி டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. பிரீமியம் ஓடிடி சந்தா!
ஏர்டெல் (Airtel) நிறுவனத்தின் போஸ்ட்பெய்ட் கஸ்டமர்களுக்கு ஆரம்ப விலையில் கிடைக்கும் போஸ்ட்பெய்ட் திட்டம் (Postpaid Plan) மற்றும் ஆரம்ப விலைக்கு 2 சிம் கார்டுகளுக்கு சலுகைகளை கொடுக்கும் போஸ்ட்பெய்ட் திட்டம் ஆகியவை அதிகமாக வரவேற்பை பெற்று வருகிறது. இந்த ஏர்டெல் போஸ்ட்பெய்ட் திட்டங்களின் சலுகைகளை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
ஏர்டெல் ரூ.449 போஸ்ட்பெய்ட் திட்டம் (Airtel Rs 449 Postpaid Plan): இந்த போஸ்ட்பெய்ட் திட்டத்தில் 1 சிம் கார்டுக்கு மட்டுமே சலுகைகள் கொடுக்கப்படும். சிம் ஆட் ஆன் சலுகை கிடைக்காது. இந்த 1 சிம் கார்டுக்கு பில் சைக்கிள் வரையில் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் கால்கள் (Unlimited Local, STD Roaming Calls) கிடைக்கிறது. அன்லிமிடெட் 4ஜி டேட்டா (Unlimited 4G Data) கொடுக்கப்படும்.

மேலும், அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) கிடைக்கிறது. ஆகவே, 4ஜி கஸ்டமர்களாக இருந்தாலும், 5ஜி கஸ்டமர்களாக இருந்தாலும் அன்லிமிடெட் டேட்டாவை பயன்படுத்தலாம். போஸ்ட் டேட்டா சலுகை இந்த திட்டத்துக்கு தேவைப்படாது. டேட்டாவானது அன்லிமிடெட் சலுகையில் கிடைப்பது மட்டுமல்லாமல், அதற்கு ஏற்ப ஓடிடி சந்தாவையும் இந்த போஸ்ட்பெய்ட் திட்டம் கொடுக்கிறது.
ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளே பிரீமியம் (Airtel Xstream Play Premium) சந்தா மற்றும் ஜியோஹாட்ஸ்டார் மொபைல் (JioHotstar Mobile) சந்தா கொடுக்கப்பட்டு உள்ளது. இதில் எக்ஸ்ட்ரீம் பிளே பிரீமியம் சந்தாவா பில் சைக்கிள் வரையில் மட்டுமே பயன்படுத்த முடியும். ஆனால், ஜியோஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவை 3 மாதங்களுக்கு பயன்படுத்தி கொள்ளலாம். கூடுதல் சலுகைகளும் இருக்கின்றன.
கூகுள் ஒன் (Google One) சந்தா வழியாக 100 ஜிபிக்கான கிளவுட் ஸ்டோரேஜ் (Cloud Storage) கொடுக்கப்பட்டு உள்ளது. அடோப் எக்ஸ்பிரஸ் பிரீமியம் (Adobe Express Premium) சந்தா கிடைக்கிறது. இந்த சந்தாவை 12 மாதங்களுக்கு பயன்படுத்தி கொள்ள முடியும். ஏர்டெல் கஸ்டமர்களுக்கு பிரத்யேகமாக கிடைக்கும், ப்ராடு டிடெக்சன் & ஸ்பேம் அலெர்ட் (Fraud Detection & Spam Alerts) சலுகை கிடைக்கிறது.
ப்ளூ ரிப்பன் பேக் (Blue Ribbon Bag) சலுகையை இந்த போஸ்ட்பெய்ட் திட்டம் கொடுத்து உள்ளது. மேலும், ப்ரீ ஹேலோ டியூன்ஸ் (Free Hello Tunes) மற்றும் நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களை கொடுத்து உள்ளது. ஆட் ஆன் சிம் சலுகைகளுடன் திட்டம் வேண்டுமானால், ரூ.699 விலை கொண்ட திட்டத்துக்கு செல்லலாம். இதற்கு கூடுதல் கட்டணமில்லாமல், 2 சிம் கார்டுகளுக்கு சலுகைகள் கொடுக்கப்படும்.
ஏர்டெல் ரூ.699 போஸ்ட்பெய்ட் திட்டம் (Airtel Rs 699 Postpaid Plan): இந்த போஸ்ட்பெய்ட் திட்டத்துக்கும் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் கால்கள் மட்டுமல்லாமல், அன்லிமிடெட் 4ஜி டேட்டா மற்றும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா கிடைக்கும். நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் கொடுக்கப்பட்டு உள்ளது .அமேசான் பிரைம் (Amazon Prime) ஓடிடி சந்தாவை 6 மாதங்களுக்கு பயன்படுத்தி கொள்ளலாம்.
ஜியோஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவை 1 வருடத்துக்கு பயன்படுத்தி கொள்ளலாம். மேலும், ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளே சந்தாவையும் இந்த போஸ்ட்பெய்ட் திட்டம் கொடுத்துள்ளது. முந்தைய திட்டத்தைவிட கூடுதல் ஓடிடி சலுகையை கொடுத்து இருக்கிறது. மற்ற சலுகைகளை பார்க்கையில், ப்ரீ ஹேலோ டியூன்ஸ், ப்ளூ ரிப்பன் பேக், அடோப் எக்ஸ்பிரஸ் பிரீமியம், கூகுள் ஒன், ப்ராடு டிடெக்சன் & ஸ்பேம் அலெர்ட் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








