Home
News

சாய்ச்சு புட்டான் மச்சான்.. 50GB டேட்டா, 100GB க்ளவுட், OTT.. ஜியோ தராததை அசால்ட் ஆன விலைக்கு தரும் ஏர்டெல்!

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோவிற்கு (Jio) அடுத்தபடியாக நாட்டின் இரண்டாவது பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாக இருக்கும் பார்தி ஏர்டெல் (Airtel) ஆனது ஜியோ வழங்காத நன்மைகளை மிகவும் மலிவான விலைக்கு கொடுக்கும் ஒரு திட்டத்தை கொண்டுள்ளது என்பதை பற்றி உங்களுக்கு தெரியுமா?

ஏர்டெல் நிறுவனமானது அதன் மலிவான போஸ்ட்பெய்டு திட்டத்தின் கீழ் அதன் வாடிக்கையாளர்களுக்கு சில அற்புதமான நன்மைகளை வழங்குகிறது. நாம் இங்கே பேசும் திட்டத்தின் விலை ரூ.449 ஆகும். இது ஏர்டெல் நிறுவனத்தின் போஸ்ட்பெய்டு பயனர்களுக்கான என்ட்ரி லெவல் ரீசார்ஜ் பிளான் (Entry Level Recharge Plan) ஆகும்.

ஜியோ தராததை அசால்ட் ஆன விலைக்கு தரும் ஏர்டெல்!

பார்தி ஏர்டெல் ரூ.449 போஸ்ட்பெய்டு திட்டத்தின் கீழ் அப்படி என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது? வழக்கமான நன்மைகளை பொறுத்தவரை பார்தி ஏர்டெல்லின் ரூ.449 போஸ்ட்பெய்டு திட்டம் - வரம்பற்ற வாய்ஸ் கால்கள், 100 எஸ்எம்எஸ்கள் மற்றும் மொத்தமாக 50 ஜிபி டேட்டாவுடன் வருகிறது. இந்த திட்டம் ஒரு பயனருக்கு மட்டுமே வருகிறது. அதாவது இது பேமிலி போஸ்ட்பெய்டு பிளான் அல்ல!

கூடுதல் நன்மைகளை பொறுத்தவரை, இவைகள் தான் ஏர்டெல்லின் ரூ.449 திட்டத்தை அதன் போட்டியாளர்கள் இடையே தனித்து நிற்க வைக்கிறது. ஏர்டெல்லின் தொடக்க நிலை போஸ்ட்பெய்டு திட்டமாக இருந்தாலும் கூட இது இலவச ஆப்பிள் மியூசிக் சந்தா (Apple Music Subscription) உடன் வருகிறது

மேலும் பல ஓடிடி தளங்களுக்கான ஒருங்கிணைந்த அணுகல்களை வழங்கும் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே பிரீமியம் சந்தாவையும் (Airtel Xstream Play Premium Subscription) வழங்குகிறது. கூடவே பெர்ப்ளெக்ஸிட்டி ப்ரோ ஏஐ சந்தா (, Perplexity Pro AI Subscription), 100 ஜிபி கிளவுட் ஸ்டோரேஜை (100GB Cloud Storage) வழங்கும் கூகுள் ஒன் சந்தா (Google One Subscription) ஆகியவைகளையும் வழங்குகிறது.

இதோடு சேர்த்து - ப்ளூ ரிப்பன் பேக் சேவை (Blue Ribbon Bag service), இலவச ஹலோ ட்யூன்ஸ் (Free Hello Tunes) மற்றும் நெட்வொர்க் லேயரில் மோசடி கண்டறிதல் மற்றும் ஸ்பேம் எச்சரிக்கைகள் (Fraud detection and spam alerts) ஆகியவற்றையும் இலவசமாக வழங்குகிறது. மேற்கண்ட அனைத்து நன்மைகள், சந்தாக்கள் மற்றும் சேவைகள் எல்லாமே - வெறும் ரூ.449 க்கு கிடைக்கிறது.

ஒட்டுமொத்தமாக ரூ.449 ஆனது பார்தி ஏர்டெல் பயனர்களுக்கு கிடைக்கும் ஒரு மதிப்புமிக்க ரீசார்ஜ் திட்டமாகும். முன்னரே குறிப்பிட்டபடி ரூ.449 இன் கீழ் கிடைக்கும் இந்த நன்மைகள் தற்போது வேறு எந்த தொலைத்தொடர்பு ஆபரேட்டருடனும் கிடைக்கவில்லை. ஆப்பிள், கூகுள் மற்றும் பெர்ப்ளெக்ஸிட்டி உடனான ஏர்டெல்லின் பிரத்யேக கூட்டாண்மையே இதற்கு காரணம்.
இன்னும் சொல்லப்போனால், இந்திய டெலிகாம் துறையில் ஆப்பிள் மியூசிக்கை நுகர்வோருக்கு இலவசமாக வழங்கும் ஒரே நிறுவனம் ஏர்டெல் மட்டுமே ஆகும். ரிலையன்ஸ் ஜியோ தனது திட்டங்களுடன் பயனர்களுக்கு ஜியோசாவ்ன் என்ற சொந்த ம்யூசிக் சேவையை வழங்குவதில் மட்டுமே கவனம் செலுத்துகிறது. வோடபோன் ஐடியாயை பொறுத்தவரை, இது ம்யூசிக் சேவை எதையும் வழங்கவில்லை.

ஏர்டெல் தொடர்பான மற்ற சமீபத்திய செய்திகளை பொறுத்தவரை ஏர்டெல்லின் போஸ்ட்பெய்டு பயனர்களுக்கான என்ட்ரி லெவல் இன்டர்நேஷனல் ரோமிங் பேக் (Entry Level International Roaming Pack) ஆனது சத்தமின்றி நீக்கப்பட்டுள்ளது. அது ரூ.648 மதிப்பிலான ஐஆர் பேக் (Airtel Rs.648 IR Pack) ஆகும். இதன் மூலம் - 10 நாட்கள் என்கிற வேலிடிட்டி உடன் வரும் ரூ.2,999 ஐஆர் பேக் ஆனது புதிய என்ட்ரி லெவல் இன்டர்நேஷனல் ரோமிங் பேக் ஆக மாறியுள்ளது

இது பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. மேலும் ஏர்டெல் நிறுவனத்தின் தற்போதைய போக்கு ஆனது வரும் நாட்களில் அல்லது வரும் மாதங்களில் ஏர்டெல் சேவையின் கீழ் ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் இன்னும் சில முக்கியமான ரீசார்ஜ் திட்டங்களும் கட்டண திருத்தங்களை காணும் என்கிற சந்தேகம் / கேள்வி எழுந்துள்ளது.

Best Mobiles in India

English summary
Airtel Rs 449 Postpaid Plan is Industry Best Entry Level Recharge Why
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X