Airtel சிம் இருக்கா? இந்த ஒத்த ரீசார்ஜ் போதும்.. டெய்லி 4 ஜிபி டேட்டா.. அன்லிமிடெட் வாய்ஸ்.. 20 ஓடிடி சந்தா!
ஏர்டெல் நிறுவனத்திலேயே தினசரி டேட்டா அதிகமாக கிடைக்கும் திட்டமாக ரூ.449 திட்டம் இருக்கிறது. இதில் கிடைக்காத சலுகைகளே இல்லையென்று சொல்லலாம். டேட்டா, வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் மட்டுமல்லாமல், இலவச 5ஜி டேட்டா, 20 ஓடிடி ஆப்களின் சந்தா, ஆப்பிள் மியூசிக், அடோப் எக்ஸ்பிரஸ் பிரீமியம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் கிடைக்கின்றன. இந்த 4 ஜிபி டேட்டா கொண்ட திட்டத்தின் சலுகைகளை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
நாளொன்றுக்கு 2.5 ஜிபி டேட்டா, 3 ஜிபி டேட்டா கொண்ட திட்டங்களே அதிக டேட்டாவை கொடுக்கும் திட்டங்கள் என்று டெலிகாம் கஸ்டமர்கள் நினைக்கின்றனர். ஆனால், ஏர்டெல் ரூ.449 திட்டத்தில் தினசரிக்கு 4 ஜிபி டேட்டா (Daily 4GB Data) கிடைக்கிறது. மேலும், 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா, அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) போன்ற சலுகைகளும் கொடுக்கப்பட்டு உள்ளன.

ஏர்டெல் ரூ.449 திட்ட விவரங்கள் (Airtel Rs 449 Plan Details): 28 நாட்கள் வேலிடிட்டியை இந்த ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Prepaid Plan) கொடுத்து உள்ளது. இந்த நாட்களில் தினசரிக்கு 4 ஜிபி டேட்டா வீதம் 112 ஜிபி டேட்டாவை கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். இது 4ஜி வேகத்தில் கொடுக்கப்படும் டேட்டாவாக இருக்கிறது. ஆகவே, இந்த டேட்டாவுக்கு பிறகு போஸ்ட் டேட்டா கிடைக்கும்.
இந்த போஸ்ட் டேட்டாவை 64 கேபிபிஎஸ் வேகத்தில் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த டேட்டாவே அதிகமாக இருக்கிறது. ஆனால், இதில் கூடுதலாக அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகையும் கொடுக்கப்பட்டு உள்ளது. ஆகவே, 4 ஜிபி டேட்டா கணக்கே இல்லாமல், அன்லிமிடெட் 5ஜி டேட்டாவையும் 28 நாட்கள் முழுவதும் கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.
டேட்டாவுக்கு அடுத்து அன்லிமிடெட் லோக்கல் கால்கள் (Unlimited Local Calls) மற்றும் எஸ்டிடி கால்கள் (STD Calls) கொடுக்கப்பட்டு உள்ளது. நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களையும் இந்த ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டத்தில் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த சலுகைகளுக்கு அடுத்து ஏகப்பட்ட கூடுதல் சலுகைகளை இந்த திட்டம் கொண்டுள்ளது. ஓடிடி சந்தா ஏராளமாக கிடைக்கிறது.
இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு ஜியோஹாட்ஸ்டார் மொபைல் (JioHotstar Mobile) சந்தா கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த திட்டத்துக்கு கிடைக்கும் 28 நாட்கள் வேலிடிட்டி முழுவதும் ஜியோஹாட்ஸ்டார் ஓடிடியை பயன்படுத்தி கொள்ளலாம். மேலும், ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளே (Airtel Xstream Play) சந்தாவும் இந்த திட்டத்துக்கு கொடுக்கப்பட்டு உள்ளது.
இதில் சோனிலிவ் (SonyLiv) உள்ளிட்ட 20 ஓடிடி ஆப்களின் சந்தா கொடுக்கப்பட்டு உள்ளது. லயன்ஸ்கேட் பிளே, ஆஹா, சாவ்பால், சன்நெக்ஸ் ஹோய்சோய் உள்ளிட்ட சலுகைகளையும் இந்த ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளே கொண்டுள்ளது. இந்த ஆப்களை 28 நாட்களுக்கு பயன்படுத்தி கொள்ளலாம். ஆப்பிள் மியூசிக் (Apple Music) சந்தாவை இந்த திட்டத்தில் பயன்படுத்தி கொள்ளலாம்.
மேலும், ப்ரீ ஹேலோ டியூன்ஸ் (Free Hello Tunes) சலுகையை இந்த திட்டம் கொடுத்து உள்ளது. 12 மாதங்களுக்கான அடோப் எக்ஸ்பிரஸ் பிரீமியம் (Adobe Express Premium) சந்தாவை இந்த திட்டம் கொடுத்து உள்ளது. இதுபோக கூகுள் ஒன் (Google One) அணுகல் வழியாக 30 ஜிபிக்கான கிளவுட் ஸ்டோரேஜ் கொடுக்கப்பட்டு உள்ளது. இவ்வளவு சலுகைகளும் ரூ.449 விலைக்கு கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








