2026 ஆரம்பமே அள்ளி கொடுக்கும் Airtel.. கம்மி பட்ஜெட்ல தினமும் 4ஜிபி டேட்டா.. ஓடிடி.. வாய்ஸ் கால்கள்..
ஏர்டெல் நிறுவனம் இந்த 2026 இல் கூட பட்ஜெட் விலையில் அதிக டேட்டா மற்றும் அதிக சலுகைகள் வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்கி வருகிறது. அதாவது இந்நிறுவனம் இன்னும் ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையை உயர்த்தாமல் கம்மி பட்ஜெட்டில் திட்டங்களை வழங்குவதால் இதில் ரீசார்ஜ் செய்ய பலர் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது 2026 இல் பட்ஜெட் விலையில் தினமும் 4ஜிபி டேட்டா தரும் ஒரு ப்ரீபெய்ட் திட்டத்தை வைத்துள்ளது ஏர்டெல் நிறுவனம். இங்கே அந்த திட்டத்தின் விலை மற்றும் நன்மைகளைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ஏர்டெல் ரூ.449 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel rs 449 prepaid Plan) தான் தினமும் 4ஜிபி டேட்டா வழங்குகிறது. அதுவும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் ஏர்டெல் ரூ.449 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 112ஜிபி டேட்டா கிடைக்கும்.இந்த திட்டத்தில் தினசரி 4ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறையும்.
குறிப்பாக அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை வழங்குகிறது இந்த ஏர்டெல் ரூ.449 ப்ரீபெய்ட் திட்டம். தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது இந்த ஏர்டெல் ரூ.449 ப்ரீபெய்ட் திட்டம். அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data), ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes), ஆப்பிள் மியூசிக், பெர்ப்லெக்ஸிடி ப்ரோ ஏஐ (Perplexity Pro AI) உள்ளிட்ட நன்மைகள் இந்த ஏர்டெல் திட்டத்தில் கிடைக்கும்.
மேலும் ஏர்டெல் ரூ.449 ப்ரீபெய்ட் திட்டத்தில் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே (Airtel Xstream Play) சந்தா வழங்கப்படுகிறது. இதன் மூலம் சோனிலிவ் (SonyLIV), மனோரமா மேக்ஸ் (Manorama Max), லயன்ஸ்கேட் பிளே போன்ற 20 ஓடிடி சந்தா கிடைக்கிறது. அதேபோல் 28 நாட்களுக்கு ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) சந்தாவும் வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம்.
அதிக டேட்டா நன்மை, ஓடிடி சந்தா உள்ளிட்ட பல சிறப்பான நன்மைகள் இந்த ஏர்டெல் ரூ.449 ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைப்பதால் நம்பி ரீசார்ஜ் செய்யலாம். ஒருவேளை ஒருவருடம் வேலிடிட்டி, ஓடிடி மற்றும் அதிக டேட்டா விரும்பும் பயனர்கள் ஏர்டெல் ரூ.3999 ப்ரீபெய்ட் திட்டத்தைத் தேர்வு செய்வது நல்லது.
ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.3999 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 3999 prepaid plan) தான் ஒரு வருடம் வேலிடிட்டி வழங்குகிறது. அதாவது 365 நாட்கள் வேலிடிட்டி இந்த திட்டத்தில் கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தில் தினமும் 2.5ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. எனவே நீங்கள் இந்த ஏர்டெல் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 912.5ஜிபி டேட்டா கிடைக்கும்.

இந்த ரூ.3999 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 2.5 டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறையும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஏர்டெல் ரூ.3999 ப்ரீபெய்ட் திட்டம் ஒரு வருடத்திற்கு ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) சந்தாவை வழங்குகிறது இந்த திட்டம்.
குறிப்பாக அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை ஏர்டெல் ரூ.3999 திட்டத்தில் வழங்கப்படுகிறது. இதுதவிர பெர்ப்லெக்ஸிடி ப்ரோ ஏஐ (Perplexity Pro AI), இலவச ஹாலோ டியூன்ஸ் (Hellotunes), அன்லிமிடெட் 5ஜி டேட்டா(unlimited 5g data), தினமும் 100 எஸ்எம்எஸ் போன்ற சலுகைகளை இந்த திட்டம் மூலம் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








