Jio, Airtel-க்கு ஒரே ரீசார்ஜ்.. ரூ.449-க்கு முடிச்சு விட்டாச்சு.. 3ஜிபி டேட்டா.. அன்லிமிடெட் வாய்ஸ்.. பெஸ்ட்?
இந்தியாவில் முக்கால்வாசி டெலிகாம் கஸ்டமர்களை கொண்டிருக்கும் ஏர்டெல் (Airtel) மற்றும் ஜியோ (Jio) நிறுவனங்களின் 2 ப்ரீபெய்ட் திட்டங்கள் ஒரே விலைக்கு கிடைக்கிறது. அதுவும் அதிகப்படியான டேட்டாவை கொடுக்கும் 3 ஜிபி திட்டங்களாக (3GB Plan) இவை இருக்கின்றன. இந்த திட்டங்களின் முழு சலுகைகளை பார்த்தால், எந்த நிறுவனம் கஸ்டமர்களுக்கு லாபத்தை கொடுக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம். ஒவ்வொரு ப்ரீபெய்ட் திட்டத்தின் (Prepaid Plan) முழு சலுகைகளையும் இப்போது தெரிந்து கொள்ளலாம்.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் 3ஜிபி தினசரி டேட்டா திட்டங்களில் ஆரம்ப விலைக்கு ரூ.449 மதிப்பிலான ப்ரீபெய்ட் திட்டம் கிடைக்கிறது. இந்த திட்டத்துக்கு அன்லிமிடெட் 5ஜி டேட்டாவும் (Unlimited 5G Data) கிடைக்கிறது. ஆகவே, தினசரி டேட்டா 3 ஜிபிக்கு பிறகும் அன்லிமிடெட் டேட்டா சலுகை பெற்று கொள்ளலாம். 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டாவும் கிடைக்கிறது.

இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு 28 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. உங்களுக்கு அன்லிமிடெட் 5ஜி டேட்டா கிடைக்கும்பட்சத்தில் வேலிடிட்டி முழுவதும் வேறு டேட்டா திட்டமே தேவைப்படாது. இந்த டேட்டா மட்டுமல்லாமல், ஜியோ கஸ்டமர்ககளுக்கு அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் கால்கள் (Roaming Calls) கிடைக்கிறது.
இதுபோக எஸ்எம்எஸ் சலுகையும் இந்த திட்டத்துக்கு கிடைக்கிறது. ஆகவே, 100 எஸ்எம்எஸ்களை ஒரு நாளுக்கு அனுப்பி கொள்ளலாம். மேலும் ஜியோ சினிமா (Jio Cinema), ஜியோ டிவி (Jio TV) ஆப்களின் சந்தா கிடைக்கிறது. ஆனால், இந்த சந்தா மூலம் பிரீமியம் சலுகைகளை பெற்று கொள்ள முடியாது. இப்போது ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டத்தின் சலுகைகளை தெரிந்து கொள்வோம்.
ஏர்டெல் நிறுவனமும் இதே விலையில் சலுகைகளை கொடுக்கிறது. ஆகவே, ரூ.449 விலையிலான திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு ஜியோவில் கிடைத்ததை போலவே அன்லிமிடெட் 5ஜி டேட்டா மற்றும் நாளொன்றுக்கு 3 ஜிபி டேட்டா கிடைக்கிறது. அதேபோல 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டாவும் இந்த திட்டத்துக்கும் ஒரே மாதிரியாக கிடைக்கிறது.
மேலும், ஜியோ கொடுத்ததை போலவே அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களும் நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களும் கிடைக்கின்றன. ஆனால், இந்த ஏர்டெல் திட்டத்தில் பிரீமியம் ஓடிடி சந்தா கிடைக்கிறது. அதாவது, ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிளே பிரீமியம் சலுகையை கொடுத்துள்ளது. இது ஜியோடிவி மற்றும் ஜியோ சினிமா ஆப்களைவிட அதிகமாகும்.
ஏனென்றால், இந்த ஒரே ஆப் மூலம் சோனிலிவ் (SonyLIV), மனோரமா மேக்ஸ் (Manorama Max), லயன்ஸ்கேட் பிளே (Lionsgate Play), எபிக் ஆன் (Epic On), சோஷியல் ஸ்வாக் (Social Swag) சந்தா, கான்ச்சா லங்கா (Kanccha Lanka) கிளிக் (Klikk), ஹங்கமா (Hungama), ஃபேன் கோட் (Fan Code), ஈராஸ் நவ் (Eros Now), ஷார்ட்ஸ் டிவி (Shorts TV), ஹோய்சோய் (HoiChoi) ஆகிய ஆப்களை பெற்று கொள்ளலாம்.
ராஜ் டிஜிட்டல் டிவி (Raj Digital TV), டாகுபே (Docubay), டாலிவுட்பிளே (Dollywood Play), அல்ட்ரா (Ultra), சாவ்பால் (Chaupal), டாலிவுட்பிளே (Dollywood Play), நம்ம ஃபிளிக்ஸ் (Namma Flix) போன்ற 22 ஓடிடி ஆப்களை பயன்படுத்தி கொள்ளலாம். இதோடு சலுகைகள் முடியவில்லை. ஏர்டெல் கஸ்டமர்களுக்கு பிரத்யேகமாகவும் இலவசமாகவும் கிடைக்கும் ஸ்பேம் கால், எஸ்எம்எஸ் அலெர்ட் வருகிறது.
அதேபோல அப்பல்லோ 24/7 சர்க்கிள் (Apollo 24|7 Circle) சந்தாவும் கூடுதலாக கிடைக்கிறது. ஆகவே, ரூ.449 விலையிலான திட்டத்தில் ஜியோவைவிட ஏர்டெல் நிறுவனமே அதிக சலுகைகளை கொடுக்கிறது. இந்த 2 திட்டங்களுக்கும் 28 நாட்கள் வேலிடிட்டி கிடைப்பதால், டேட்டாவில் எந்த மாற்றமும் இருக்காது. ஆனால், ஓடிடி சலுகையில் மாற்றம் இருக்கும்.


Click it and Unblock the Notifications








