இனிமே Airtel ரீசார்ஜ்னா அது இந்த ரூ.450 பிளான் தான்.. டெய்லி 3ஜிபி, 22 OTT, ஸ்பேம் அலெர்ட், AI அம்சங்கள்!
மிகவும் போட்டி நிறைந்த ப்ரீபெய்ட் சந்தையில், ஏர்டெல்லின் ரூ.449 திட்டம் (Airtel Rs.499 Plan) வெறும் டால்க் டைம் மற்றும் டெய்லி டேட்டாவை விட.. சற்றே அதிகமாக வழங்குவதன் மூலம் தனித்து நிற்கிறது. 28 நாட்கள் என்கிற வேலிடிட்டி உடன் வரும் இந்த திட்டம் அதிவேக இண்டர்நெட், பொழுதுபோக்கு மற்றும் இன்டெலிஜென்ட் அம்சங்கள் (Intelligent features) என அனைத்தையும் வழங்கும் ஒரு முக்கியமான திட்டமாக இருப்பது எப்படி? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்!
இந்த திட்டம் ஒரு நாளைக்கு 3 ஜிபி டேட்டா (Daily 3GB Data), வரம்பற்ற உள்ளூர், எஸ்டிடி மற்றும் ரோமிங் அழைப்புகள், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்குகிறது. இது நிலையான தேவைகள் கொண்ட மற்றும் அதே சமயம் அதிக அளவு பயன்பாட்டை கோரும் பயனர்களுக்கும் ஏதுவான திட்டமாக உள்ளது. இருப்பினும் வழக்கமான ப்ரீபெய்ட் சலுகைகளுக்கு அப்பால் இந்தத் திட்டத்தை அடுத்த கட்டத்திற்கு உயர்த்தும் சில கூடுதல் நன்மைகளையும் இது வழங்குகிறது.

ரூ.449 திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் சந்தாதாரர்கள் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே பிரீமியத்திற்கான (Airtel Xstream Play Premium) முழு அணுகலை பெறுகிறார்கள். இதன்கீழ் சோனி எல்ஐவி, லயன்ஸ்கேட் ப்ளே, ஆஹா, ஹோய்சோய், சௌபால் மற்றும் சன்என்எக்ஸ்ட் உள்ளிட்ட 22 க்கும் மேற்பட்ட ஓடிடி தளங்களை 28 நாட்களுக்கு இலவசமாக ஸ்ட்ரீமிங் செய்யலாம்.
நீங்கள் 5ஜி கவரேஜ் கிடைக்கும் பகுதிகளில் இருந்தால், இந்த பேக்கின் கீழ் கிடைக்கும் தினசரி டேட்டா வரம்பை தாண்டி வரம்பற்ற 5ஜி டேட்டா நன்மையையும் (Unlimited 5G Data Benefit) பெறுவீர்கள். ஸ்ட்ரீமிங், கேமிங் அல்லது வேலை தொடர்பான பயன்பாட்டிற்கு அதிவேக இண்டர்நெட் தேவைப்படும் பயனர்களுக்கு இது ஒரு முக்கியமான நன்மையாகும்.
இதோடு இந்த திட்டத்தின் கீழ், பயனர் பாதுகாப்பு மற்றும் தனிப்பயனாக்கத்திற்காக வடிவமைக்கப்பட்ட அம்சங்களையும் ஏர்டெல் ஒருங்கிணைக்கிறது. இந்தியாவில் முதன்முதலில் உருவாக்கப்பட்ட அதன் ஸ்பேம் பைட்டிங் நெட்வொர்க் (Spam Fighting Network) ஆனது உள்வரும் அழைப்புகள் மற்றும் மோசடியானதாக குறிக்கப்பட்ட எஸ்எம்எஸ்-களுக்கு நிகழ்நேர எச்சரிக்கைகளை (Realtime Alert) வழங்குகிறது. கூடுதலாக, வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு 30 நாட்களுக்கும் இலவச ஹலோட்யூனையும் (Hello Tune) செட் செய்யலாம்.
இதெல்லாம் ஒருபக்கம் இருக்க இந்த திட்டத்தின் கீழ் கிடைக்கும் மிகவும் எதிர்பாராத சேர்க்கை - ரூ.17,000 மதிப்புள்ள பிரீமியம் ஏஐ சேர்ச் அசிஸ்டன்ட் ஆன பேரபிளெக்ஸ்சிட்டி ப்ரோ ஏஐ-க்கான (Perplexity Pro AI) ஒரு வருட இலவச சந்தாவாகும். இந்த சேர்க்கை பயனர்களின் உற்பத்தித்திறனை அதிகரிக்கிறது, ப்ரீபெய்ட் பயனர்களுக்கு கூடுதல் செலவு இல்லாமல் மேம்பட்ட ஏஐ டூல்களை (Advanced AI Tools) அணுக உதவுகிறது.
தினசரி டேட்டா வரம்புகளுக்கு அப்பால், ரூ.449 திட்டத்தின் டேட்டா ஸ்பீட் ஆனது 64Kbps ஆக குறையும். அதே நேரத்தில் ஒரு நாளைக்கு 100 என்கிற வரம்பிற்கு மேல் அனுப்பப்படும் எஸ்எம்எஸ்க்கு உள்ளூர்க்கு ரூ.1 மற்றும் எஸ்டிடிக்கு ரூ.1.5 வசூலிக்கப்படும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
5ஜி, ஸ்ட்ரீமிங் பொழுதுபோக்கு, ஏஐ மற்றும் ஸ்பேம் பாதுகாப்பு ஆகியவற்றை இறுக்கமாக ஒருங்கிணைப்பதன் மூலம், ஏர்டெல்லின் ரூ.449 திட்டம் இன்றைய டிஜிட்டல் வாழ்க்கை முறையுடன் இணைந்த ஒரு அனுபவத்தை வழங்குகிறது. எங்களை பொறுத்தவரை இப்போதைக்கு சந்தையில் ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் பெஸ்ட் மற்றும் மிகவும் புத்திசாலித்தனமாக வடிவமைக்கப்பட்ட ப்ரீபெய்ட் திட்டங்களில் இதுவும் ஒன்றாகும்.
இந்த திட்டம் யாருக்கானது? ஏர்டெல்லின் ரூ.449 ப்ரீபெய்ட் திட்டம், தினசரி டேட்டா மற்றும் அழைப்புகளை விட அதிகமாக விரும்பும் டிஜிட்டல் முறையில், இன்னும் அதிகம் செயல்படும் பயனர்களுக்கு மிகவும் பொருத்தமான திடமாக இருக்கும். நீங்கள் தொடர்ந்து கன்டென்ட்களை ஸ்ட்ரீம் செய்பவர் ஆக இருந்தால் , அதிவேக 5ஜி அணுகல் தேவைப்படும் நபராக இருந்தால், சிறந்த உற்பத்தித்திறனுக்கான ஏஐ டூல்களை மதிப்பவராக இருந்தால்.. ஸ்பேமிலிருந்து பாதுகாப்பை விரும்பினால்.. இது 100% உங்களுக்கான திட்டமாகும்!


Click it and Unblock the Notifications








