ஒரே Airtel ரீசார்ஜ்.. இனிமே 3 ஜிபி டேட்டா.. அன்லிமிடெட் வாய்ஸ்.. நாள்தோறும் 3 ஜிபி டேட்டா.. 22 ஓடிடி சந்தா!
அள்ள அள்ள குறையாத டேட்டா மற்றும் ஓடிடி சந்தா மட்டுமல்லாமல் கூடவே அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ்கள் போன்ற சலுகைகளும் வேண்டுமானால் ஏர்டெல் (Airtel) கஸ்டமர்களுக்கு கண்ணை மூடிக் கொண்டு ரீசார்ஜ் செய்யும்படி ஒரேவொரு ப்ரீபெய்ட் திட்டம் (Prepaid Plan) இருக்கிறது. ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிளே பிரீமியம் (Airtel Xstream Play Premium) சந்தாவுடன் கிடைக்கும் இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் முழு சலுகைகளை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
ஏர்டெல் ரூ 449 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 449 Prepaid Plan): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் 28 நாட்களுக்கு வேலிடிட்டி கிடைத்தாலும், அந்த நாட்களில் டேட்டா மற்றும் ஓடிடி சலுகைகள் துளியும் குறையில்லாமல் கிடைக்கிறது. டேட்டாவை பார்க்கையில் அன்லிமிடெட் 5ஜி (Unlimited 5G) கிடைக்கிறது. இதுபோக 3 ஜிபி தினசரி டேட்டா இருக்கிறது.

இந்த டேட்டா சலுகைகள் போக 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா (Post Data) கிடைக்கிறது. ஆகவே, 28 நாட்கள் முழுவதும் ஆன்லைன் கேமிங் மட்டுமல்ல, பல்வேறு ஓடிடி ஆப்களை பார்த்தாலும் டேட்டா போதுமானதாக இருக்கும். ஓடிடி சந்தாவை பார்க்கையில் முன்பே சொன்னதை போல ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிளே பிரீமியம் சலுகை வருகிறது.
இந்த ஒரேவொரு ஆப் மூலம் 22+ ஓடிடி ஆப்களை ஏர்டெல் கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். இதில் பிரீமியம் முதல் பிரத்யேக ஓடிடி ஆப்கள் வரையில் கிடைக்கிறது. ஆகவே, இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு சோனிலிவ் (SonyLIV), ராஜ் டிஜிட்டல் டிவி (Raj Digital TV), ஈராஸ் நவ் (Eros Now) மற்றும் ஃபேன் கோட் (Fan Code) கிடைக்கிறது.
மேலும், லயன்ஸ்கேட் பிளே (Lionsgate Play), எபிக் ஆன் (Epic On), டாலிவுட்பிளே (Dollywood Play), டாகுபே (Docubay), சாவ்பால் (Chaupal), டாலிவுட்பிளே (Dollywood Play), மனோரமா மேக்ஸ் (Manorama Max), சோஷியல் ஸ்வாக் (Social Swag), கான்ச்சா லங்கா (Kanccha Lanka), ஹங்கமா (Hungama), கிளிக் (Klikk), நம்ம ஃபிளிக்ஸ் (Namma Flix) மற்றும் ஷார்ட்ஸ் டிவி (Shorts TV) உள்ளது.
இதுபோக ஹோய்சோய் (HoiChoi) மற்றும் அல்ட்ரா (Ultra) ஆப்களின் சந்தாவை ஏர்டெஸ் கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த திட்டத்தில் டேட்டா மற்றும் ஓடிடி சலுகைகளே இவ்வளவு கிடைக்கிறது. அப்படி என்றால், வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகள் அவ்வளவாக கிடைக்காது என்று உங்களுக்கு தோன்றலாம். அப்படி இல்லை.
இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் வழக்கமாக கிடைக்கும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் கால்கள் (Roaming Calls) சலுகையும் இருக்கிறது. அதே நேரத்தில் 100 எஸ்எம்எஸ்களை நாளொன்றுக்கு செய்து கொள்ளவும் முடியும். இதுபோக அப்பல்லோ 24/7 சர்க்கிள் (Apollo 24|7 Circle) மெம்பர்ஷிப் கஸ்டமர்களுக்கு வருகிறது.
இந்த மெம்பர்ஷிப் 28 நாட்களுக்கு மேல் வருகிறது. அதாவது இந்த திட்டத்துக்கு 28 நாட்கள் வேலிடிட்டி கிடைத்தாலும், இந்த அப்பல்லோ 24/7 சர்க்கிள் மெம்பர்ஷிப்பை 3 மாதங்களுக்கு பெற்று கொள்ளலாம். மேலும், ப்ரீ ஹலோ டியூன்ஸ் (Free Hello Tunes) சலுகையும் ஸ்பேம் அலெர்ட் சலுகையும் இந்த ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டத்தில் கொடுக்கப்படுகிறது.
இந்த ஸ்பேம் அலெர்ட் சலுகை மூலம் ஏர்டெல் கஸ்டமர்களுக்கு வரும் ஸ்பேம் கால்கள் மற்றும் ஸ்பேம் எஸ்எம்எஸ்களை இலவசமாக டிடெக்ட் செய்து கொள்ளலாம். இவ்வளவு சலுகைகளையும் இந்த திட்டம் கொடுக்கிறது. 28 நாட்களுக்கு அதிகமாக டேட்டா மற்றும் ஓடிடி தேவைப்படும்பட்சத்தில் இந்த திட்டத்தை கண்ணை மூடிக்கொண்டு ரீசார்ஜ் செய்யலாம்.


Click it and Unblock the Notifications








