Airtel போட்ட போடு.. இனி மாதாந்திர கணக்கு.. 3 ஜிபி டேட்டா.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. இதுதான் ரீசார்ஜ்!
மாதாந்திரத்துக்கு ரீசார்ஜ் செய்யும் ஏர்டெல் (Airtel) கஸ்டமர்களை கண்ணை மூடிக்கொண்டு ரீசார்ஜ் செய்ய வைக்கும்படி டேட்டா, வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ், 5ஜி டேட்டா மற்றும் ஓடிடி போன்ற சலுகைகள் இரண்டு ப்ரீபெய்ட் திட்டங்களில் வாரி வழங்கப்பட்டு இருக்கின்றன. ஒரு திட்டம் டேட்டாவுக்கும் மற்றொரு திட்டம் ஓடிடிக்கும் அதிகப்படியான சலுகைகளை கொடுக்கிறது. இந்த ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டங்களி்ன் (Airtel Prepaid Plan) விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
ஏர்டெல் ரூ 429 திட்ட விவரங்கள் (Airtel Rs 429 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் வாய்ஸ் கால்கள், டேட்டா, எஸ்எம்எஸ், 5ஜி டேட்டா மட்டுமல்லாமல், டாக்டைம் சலுகையும் கொடுக்கப்படுகிறது. இதுபோக ஏர்டெல் கஸ்டமர்களுக்கு மட்டுமே கிடைக்கும் ஸ்பேம் அலெர்ட், எக்ஸ்ட்ரீம் பிளே போன்ற சலுகைகளும் கிடைக்கிறது.

ஆகவே, இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு ஒரு மாத வேலிடிட்டியில் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் கால்கள் (Roaming Calls) செய்ய கிடைக்கிறது. அதேபோல மாதம் முழுவதும் நாளொன்றுக்கு 2.5 ஜிபி டேட்டாவும் அந்த டேட்டாவுக்கு பிறகு 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டாவும் (Post Data) கிடைக்கிறது.
நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் மற்றும் ரூ.5 டாக்டைம் கிடைக்கிறது. இந்த சலுகைகள் போக கூடுதலாக 5 சலுகைகள் கொடுக்கப்படுகின்றன. அதில் முதலாவது அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) சலுகையாகும். இதற்கு பிறகு இன்கம்மிங் ஸ்பேம் வாய்ஸ் கால்கள் அலெர்ட் மற்றும் ஸ்பேம் எஸ்எம்எஸ்கள் அலெர்ட் சலுகை கிடைக்கிறது.
மேலும், ப்ரீ கன்டென்ட்களை மட்டுமே கொடுக்கும், ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிளே (Airtel Xstream App) சலுகை, அப்பல்லோ 24/7 சர்க்கிள் (Apollo 24|7 Circle) மெம்பர்ஷிப் மற்றும் ப்ரீ ஹலோ டியூன்ஸ் (Free Hello Tunes) சலுகைகள் கிடைக்கின்றன. இந்த திட்டத்தின் விலை கூடுதலாக இருந்தாலும், அதற்கு துளியும் குறையில்லாத சலுகைகளை கொடுக்கிறது.
ஏர்டெல் ரூ 449 திட்ட விவரங்கள் (Airtel Rs 449 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் முந்தைய திட்டத்தைவிட அதிகப்படியான டேட்டா மற்றும் ஓடிடி ஆப்களின் சலுகை கிடைக்கிறது. அதேபோல கூடுதல் சலுகைகளையும் வாரி வழங்கி இருக்கிறது. ஆகவே, இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு 28 நாட்கள் வேலிடிட்டியில் நாளொன்றுக்கு 3 ஜிபி டேட்டா வருகிறது.
அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், 100 எஸ்எம்எஸ் மற்றும் 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா கிடைக்கிறது. இந்த டேட்டா சலுகைகள் போக முந்தைய திட்டத்தில் கிடைத்த அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகை இந்த திட்டத்திலும் கிடைக்கிறது. ஆகவே, டேட்டாவில் இந்த திட்டத்தில் துளியும் கஸ்டமர்களுக்கு குறை இருக்காது. இதற்கு ஏற்ப ஓடிடி சந்தா கிடைக்கிறது.
அதாவது, ஒட்டுமொத்தமாக ஓடிடி பண்டில் சலுகையை கொடுக்கும் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிளே பிரீமியம் (Airtel Xstream Play Premium) சந்தா கிடைக்கிறது. இந்த சந்தா மூலம் சோனிலிவ் (SonyLIV), லயன்ஸ்கேட் பிளே (Lionsgate Play), மனோரமா மேக்ஸ் (Manorama Max), சோஷியல் ஸ்வாக் (Social Swag), எபிக் ஆன் (Epic On) மற்றும் கான்ச்சா லங்கா (Kanccha Lanka) கிடைக்கிறது.
ஹங்கமா (Hungama), கிளிக் (Klikk), ஈராஸ் நவ் (Eros Now), ஃபேன் கோட் (Fan Code), நம்ம ஃபிளிக்ஸ் (Namma Flix), டாலிவுட்பிளே (Dollywood Play), ஷார்ட்ஸ் டிவி (Shorts TV), ஹோய்சோய் (HoiChoi), டாகுபே (Docubay), ராஜ் டிஜிட்டல் டிவி (Raj Digital TV), டாலிவுட்பிளே (Dollywood Play) மற்றும் அல்ட்ரா (Ultra), சாவ்பால் (Chaupal) ஆகிய ஓடிடி ஆப்களின் சந்தாவையும் பெற முடிகிறது.


Click it and Unblock the Notifications