ஏர்டெல் ரூ.429 மற்றும் ரூ.449 ப்ரீபெய்ட் திட்டங்கள்.. எத்தனை நாட்கள் வேலிடிட்டி.. என்னென்ன நன்மைகள்..
ஏர்டெல் (Airtel) நிறுவனம் தொடர்ந்து பட்ஜெட் விலையில் அதிக நன்மைகளை வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்கி வருகிறது. அதுவும் இந்நிறுவனம் ப்ரீபெய்ட் திட்டங்களுடன் ஓடிடி சந்தா நன்மையை வழங்குவதால் அதிக வரவேற்பு உள்ளது. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது ஏர்டெல் ரூ.429 மற்றும் ரூ.449 ப்ரீபெய்ட் திட்டங்களில் என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது மற்றும் வேலிடிட்டி எவ்வளவு நாட்கள் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
ஏர்டெல் ரூ.449 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel rs 449 prepaid Plan) தினமும் 4ஜிபி டேட்டா வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். ஆகவே நீங்கள் ஏர்டெல் ரூ.449 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 112ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தில் தினசரி 4ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறையும்.

அதுவும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை வழங்குகிறது இந்த ஏர்டெல் ரூ.449 ப்ரீபெய்ட் திட்டம். குறிப்பாக இந்த திட்டம் அதிகமான ஓடிடி நன்மைகளை வழங்குகிறது.
அதன்படி ஏர்டெல் ரூ.449 ப்ரீபெய்ட் திட்டத்தில் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே (Airtel Xstream Play) சந்தா வழங்கப்படுகிறது. இதன் மூலம் சோனிலிவ் (SonyLIV), மனோரமா மேக்ஸ் (Manorama Max), லயன்ஸ்கேட் பிளே போன்ற 20-க்கும் மேற்பட்ட ஓடிடி சந்தா கிடைக்கிறது. அதேபோல் 28 நாட்களுக்கு ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) சந்தாவும் வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம்.
மேலும் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது இந்த ஏர்டெல் ரூ.449 ப்ரீபெய்ட் திட்டம். பின்பு அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data), ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes), 30ஜிபி கூகுள் கிளவுட் ஸ்டோரேஜ், ஆப்பிள் மியூசிக், ரூ.4000 மதிப்புள்ள adobe எக்ஸ்பிரஸ் பிரீமியம் (adobe express premium) உள்ளிட்ட நன்மைகள் இந்த ஏர்டெல் திட்டத்தில் கிடைக்கும்.
ஏர்டெல் ரூ.429 ப்ரீபெய்ட் திட்டம் (airtel rs 429 prepaid plan) தினசரி 2.5ஜிபி டேட்டாவை கொடுக்கிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி ஒரு மாதம் ஆகும். எனவே நீங்கள் ஏர்டெல் ரூ.429 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 77.5ஜிபி வரை டேட்டா கிடைக்கும். அதுவும் இந்த திட்டத்தில் தினசரி 2.5ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறையும்.

அதேபோல் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை ஏர்டெல் ரூ.429 திட்டத்தில் கிடைக்கும். இதுதவிர பல அசத்தலான நன்மைகள் இந்த திட்டத்தில் உள்ளன.
அதாவது ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே (Airtel Xstream Play), ரூ.4000 மதிப்புள்ள adobe எக்ஸ்பிரஸ் பிரீமியம் (adobe express premium), தினமும் 100 எஸ்எம்எஸ், அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data), ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes) உள்ளிட்ட நன்மைகள் இதில் கிடைக்கும். பின்பு இந்த திட்டத்தில் ரூ.5 டாக்டைம் வழங்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications