Airtel ரூ.449 மற்றும் ரூ.429 ப்ரீபெய்ட் திட்டங்கள்.. ரீசார்ஜ் செய்யும் முன் இதை கவனிங்க.. ஏன்?
ஏர்டெல் நிறுவனம் அவ்வப்போது புதிய திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. அதுவும் பட்ஜெட் விலையில் அதிக டேட்டா தரும் திட்டங்களை அறிமுகம் செய்வதில் அதிக ஆர்வம் காட்டுகிறது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு திட்டங்களுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது.
சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது ஏர்டெல் நிறுவனத்திடம் ரூ.429 மற்றும் ரூ.449 ப்ரீபெய்ட் திட்டங்கள் உள்ளன. இதில் எந்த திட்டம் அதிக நன்மைகளை வழங்குகிறது மற்றும் எதை தேர்வு செய்வது நல்லது என்பதை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ஏர்டெல் ரூ.429 ப்ரீபெய்ட் திட்டம் (airtel rs 429 prepaid plan) ஆனது தினமும் 2.5ஜிபி டேட்டாவை கொடுக்கிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி ஒரு மாதம் ஆகும். எனவே ஏர்டெல் ரூ.429 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 77.5ஜிபி வரை டேட்டா கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தில் தினசரி 2.5ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறையும்.
அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை இந்த ஏர்டெல் ரூ.429 திட்டத்தில் கிடைக்கும். பின்பு தினமும் 100 எஸ்எம்எஸ், அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data), ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes), பெர்ப்லெக்ஸிடி ப்ரோ ஏஐ (Perplexity Pro AI) உள்ளிட்ட நன்மைகள் இதில் கிடைக்கும். பின்பு இந்த திட்டத்தில் ரூ.5 டாக்டைம் வழங்கப்படுகிறது.
ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.449 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel rs 449 prepaid Plan) தினமும் 4ஜிபி டேட்டா வழங்குகிறது. அதுவும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் ஏர்டெல் ரூ.449 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 112ஜிபி டேட்டா கிடைக்கும்.இந்த திட்டத்தில் தினசரி 4ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறையும்.
அதேபோல் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை வழங்குகிறது இந்த ஏர்டெல் ரூ.449 ப்ரீபெய்ட் திட்டம். குறிப்பாக இந்த திட்டம் அதிகமான ஓடிடி நன்மைகளை வழங்குகிறது.
அதாவது ஏர்டெல் ரூ.449 ப்ரீபெய்ட் திட்டத்தில் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே (Airtel Xstream Play) சந்தா வழங்கப்படுகிறது. இதன் மூலம் சோனிலிவ் (SonyLIV), மனோரமா மேக்ஸ் (Manorama Max), லயன்ஸ்கேட் பிளே போன்ற 22 ஓடிடி சந்தா கிடைக்கிறது. அதேபோல் 28 நாட்களுக்கு ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) சந்தாவும் வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம்.

மேலும் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது இந்த ஏர்டெல் ரூ.449 ப்ரீபெய்ட் திட்டம். பின்பு அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data), ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes), 30ஜிபி கூகுள் கிளவுட் ஸ்டோரேஜ், பெர்ப்லெக்ஸிடி ப்ரோ ஏஐ (Perplexity Pro AI) உள்ளிட்ட நன்மைகள் இந்த ஏர்டெல் திட்டத்தில் கிடைக்கும்.
எது சிறந்தது?
ஏர்டெல் ரூ.429 ப்ரீபெய்ட் திட்டத்தை விட ரூ.449 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது அதிக டேட்டா நன்மை மற்றும் ஓடிடி நன்மைகளை வழங்குகிறது. எனவே ஏர்டெல் ரூ.429 ப்ரீபெய்ட் திட்டத்தை தேர்வு செய்வது நல்லது.


Click it and Unblock the Notifications








