Home
News

Airtel சிம் இருக்கா? இதை மட்டும் ரீசார்ஜ் பண்ணுங்க.. தினமும் 2.5 ஜிபி டேட்டா.. அன்லிமிடெட் 5ஜி.. 20+ ஓடிடி!

ஏர்டெல் கஸ்டமர்கள் ஒரு மாதத்துக்கு அதிக டேட்டாவுடன் ப்ரீபெய்ட் திட்டத்தை ரீசார்ஜ் செய்ய விரும்பினால் இப்போது பார்க்க இருக்கும் திட்டத்துக்கு செல்லலாம். இதில் அதிகப்படியான தினசரி டேட்டா மட்டுமல்லாமல், அன்லிமிடெட் 5ஜி டேட்டாவும் கிடைக்கிறது. இந்த டேட்டாவுக்கு ஏற்ப 20+ ஓடிடி ஆப்களின் சந்தாவையும் பெற்று கொள்ளலாம். கூடுதல் சலுகைகளை எதிர்பார்க்கும் கஸ்டமர்களுக்கும் இது பக்காவாக இருக்கும்.

ஏர்டெல்லில் நாளொன்றுக்கு 2.5 ஜிபி டேட்டா (Daily 2GB Data) மற்றும் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கும் மலிவு விலை திட்டமாக ரூ.409 திட்டம் இருக்கிறது. இதில் கூடுதலாக அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) கிடைப்பதால், 28 நாட்களில் அதிகப்படியான டேட்டாவை பயன்படுத்த முடியும். 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா (Post Data) கிடைத்து உள்ளது.

Airtel சிம் இருக்கா? இதை மட்டும் ரீசார்ஜ் பண்ணுங்க.. தினமும் 2.5 ஜிபி!

ஏர்டெல் ரூ. 409 ரீசார்ஜ் திட்டம் (Airtel Rs 409 Recharge Plan): அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், தினசரி எஸ்எம்எஸ்கள் மற்றும் தினசரி டேட்டாவை 28 நாட்களுக்கு கொடுக்கிறது. ஆகவே, அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் வாய்ஸ் கால்கள் மற்றும் நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களை கஸ்டமர்கள் செய்து கொள்ளலாம். 2.5 ஜிபி டேட்டாவை தினமும் பயன்படுத்தி கொள்ளலாம்.

இந்த டேட்டாவுக்கு பிறகு 64 கேபிபிஎஸ் வேகத்தில் மட்டுமே டேட்டா கிடைக்கும். இந்த தினசரி டேட்டா மற்றும் போஸ்ட் டேட்டா கணக்கு இல்லாமலேயே அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை ப்ரீபெய்ட் கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த திட்டத்துக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் சலுகை மட்டுமல்லாமல், ரூ.5 டாக்டைம் வேல்யூ கொடுக்கப்பட்டு உள்ளது.

இந்த டேட்டா, வாய்ஸ கால்கள், எஸ்எம்எஸ், அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகைகள் போக கூடுதலாக 4 சலுகைகளை கஸ்டமர்கள் பெற்று கொள்ளலாம். முதலில் 20+ ஓடிடி ஆப்களின் சந்தா கொடுக்கப்படும். இது பிரீமியம் ஆப்களின் சந்தாவாக இருக்காது. இருப்பினும், சோனிலிவ், சன்நெக்ஸ்ட் உள்ளிட்ட ஓடிடி ஆப்களின் சந்தாவை கொண்டிருக்கும்.

அதாவது, ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிளே (Airtel Xstream Play) சந்தாவை இந்த திட்டம் கொடுத்து உள்ளது. இதை 28 நாட்களுக்கு பயன்படுத்தி கொள்ளலாம். பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஸ்டோரில் டவுன்லோட் செய்ய கிடைக்கிறது. இந்த ஒரே ஆப் வழியாக 20+ ஓடிடி ஆப்களின் அணுகல் கிடைக்கிறது. (SonyLIV), ஈராஸ் நவ் (Eros Now), சன்நெக்ஸ்ட் (SunNXT) கிடைக்கும்.

மேலும், சாவ்பால் (Chaupal), லயன்ஸ்கேட் பிளே (Liongates Play), ஆஹா (Aha), ஹோய்சோய் (Hoichoi) மற்றும் சோஷியல் ஸ்வாக் (Social Swag) உள்ளிட்ட ஆப்களின் சந்தாவும் கிடைக்கும். இரண்டாவது சலுகையாக அடோப் எக்ஸ்பிரஸ் பிரீமியம் (Adobe Express Premium) அணுகலை பெற்று கொள்ள முடியும். ரூ.4000 மதிப்புள்ள இந்த சலுகையை இலவமாக பெற்று கொள்ளலாம்.

ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes) சலுகையானது மூன்றாவதாக கிடைக்கிறது. மேலும், 4ஆவது சலுகையாக ஸ்பேம் அலெர்ட் சலுகை கொடுக்கப்பட்டு உள்ளது. இதில் ப்ரீபெய்ட் கஸ்டமர்களுக்கு வரும், இன்கம்மிங் கால்கள் மற்றும் இன்கம்மிங் மெசேஜ்களில் இருக்கும் ஸ்பேம்களை டிடெக்ட் செய்து காட்டும். இந்த சலுகை முற்றிலும் இலவமாக கிடைக்கிறது.

ஆகவே, 28 நாட்களுக்கு அதிக டேட்டா வேண்டுமானால், இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்யலாம். அதேபோல ஓடிடி சந்தாவும் அதிகமாக வேண்டுமானால், இதை ஆப்ஷனில் எடுக்கலாம். 5ஜி டேட்டா மட்டுமல்லாமல், 4ஜி டேட்டாவும் அதிகமாக இருப்பதால், ஒட்டுமொத்த கஸ்டமர்களுக்கும் இது பொருத்தமான திட்டமாக இருக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Airtel Rs 409 Recharge Plan 28 Days Validity 2.5 GB Daily Data Unlimited Calls 20 OTT Apps
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X