ரூ.4000-ஐ யாரு விடுவா? அடுத்த 1 ஆண்டுக்கு FREE.. 2027 வரை Airtel அறிவித்துள்ள புதிய ஆபர்!
ஏர்டெல் (Airtel) நிறுவனம் சமீபத்தில், அதன் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் ரூ.4000 மதிப்புள்ள ஒரு இலவச சந்தா சலுகையை அறிவித்து இருந்தது. இது - ப்ரீபெய்டு அல்லது போஸ்ட்பெய்டு வாடிக்கையாளராக இருந்தாலும் சரி, பிராட்பேண்ட் வாடிக்கையாளராக இருந்தாலும் சரி, அனைவருக்கும் கிடைக்கும் என்றும் ஏர்டெல் அறிவித்து இருந்தது
அது அடோப் எக்ஸ்பிரஸ் பிரீமியம் சந்தா ஆகும். தற்போது இந்த இலவச சந்தா எப்போது வரை கிடைக்கும், அதாவது எப்போது முடியும் என்கிற சரியான தேதியை ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த சலுகையை மீட்டெடுக்கும் காலம் ஜனவரி 29, 2026 முதல் ஜனவரி 28, 2027 வரை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது இலவச அடோப் எக்ஸ்பிரஸ் பிரீமியம் சந்தா சலுகை ஒரு முழு ஆண்டுக்கும் கிடைக்கவுள்ளது. இருந்தாலும் பாரதி ஏர்டெல் நிறுவனம் எப்போது வேண்டுமானாலும் இந்த சலுகையை நீட்டிக்க, ரத்து செய்ய, நிறுத்த, இடைநிறுத்த அல்லது திரும்ப பெறும் உரிமையை கொண்டுள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
இந்த இலவச நன்மையை பெற விரும்பும் பயனர்கள், ஏர்டெல் தேங்க்ஸ் ஆப்பிற்கு சென்று ரிவர்ட்ஸ் பகுதியை பார்க்கலாம். நீங்கள் உரிமை கோரும் நாளிலிருந்து, இந்த சந்தா ஒரு வருடம் முழுவதும் உங்களுக்கு இலவசமாக அணுக கிடைக்கும். ஒரு வாடிக்கையாளருக்கு ஒரு முறை மட்டுமே ரிடீம் செய்ய முடியும்
இதற்கு முன்பு, ஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு ரூ.17,000 மதிப்புள்ள பெர்ப்ளெக்ஸிட்டி ப்ரோ (Perplexity Pro) சந்தாவை இலவசமாக வழங்கியது. இது ஏர்டெல் நிறுவனம் வழங்கிய மிகவும் மதிப்புமிக்க இலவச சலுகைகளில் ஒன்றாகும். சமீபத்தில் தான் பெர்ப்ளெக்ஸிட்டி ப்ரோ சலுகை நிறுத்தப்பட்டது. உடனே அடோப் எக்ஸ்பிரஸ் பிரீமியம் சந்தா அறிவிக்கப்பட்டுள்ளது.
பெர்ப்ளெக்ஸிட்டி ப்ரோ இலவச சலுகை ஏன் நிறுத்தப்பட்டது? இது அறிவிக்கப்பட்டபோது இது குறித்து (இந்த நிறுத்தம் குறித்து) பார்தி ஏர்டெல் நிறுவனம் ஏற்கனவே குறிப்பிட்டு இருந்தது. இப்போது அது நீக்கப்பட்டுள்ளது. நினைவூட்டும் வண்ணம் ஏர்டெல் நிறுவனத்தின் பெர்ப்ளெக்ஸிட்டி ப்ரோ சலுகை ஆனது கடந்த 2025 இல் அறிவிக்கப்பட்டது. அந்த நேரத்தில், இந்த சலுகை ஜனவரி 16, 2026 அன்று நீக்கப்படும் என்று விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளில் ஏர்டெல் குறிப்பிட்டிருந்தது.
அதாவது இது ஒரு குறிப்பிட்ட கால சலுகையாக கிடைத்தது. இதை இன்னமும் பெறாதவர்களுக்கு, துரதிர்ஷ்டவசமாக, இனிமேல் இந்த சலுகை கிடைக்காது. நீங்கள் இப்போது பழைய ஏர்டெல் வாடிக்கையாளராக இருந்தாலும் சரி அல்லது புதிய ஏர்டெல் வாடிக்கையாளராக இருந்தாலும் சரி, இந்த பலனை நீங்கள் இனிமேல் கோர முடியாது. பாரதி ஏர்டெல்லின் வலைத்தளத்தில் உள்ள ப்ரீபெய்ட் திட்டப் பட்டியல்களில் இருந்து இந்த இலவச நன்மை நீக்கப்பட்டுள்ளது.
அடோப் எக்ஸ்பிரஸ் பிரீமியமின் கீழ் என்னென்ன கிடைக்கும்? இதன்கீழ் மாதத்திற்கு 250 ஜெனரேட்டிவ் கிரெடிட்கள், அனைத்து பிரீமியம் நிலையான மற்றும் வீடியோ டெம்ப்ளேட்களுக்கான அணுகல், 200 மில்லியனுக்கும் அதிகமான ராயல்டி இல்லாத அடோப் ஸ்டாக் புகைப்படங்கள், வீடியோக்கள், இசை டிராக்குகள் மற்றும் வடிவமைப்பு கூறுகள், 30,000+ ஃபாண்ட்களுடன் முழுமையான அடோப் பாண்ட் சேகரிப்புக்கான அணுகல், வீடியோ பின்னணியை அகற்றுவது மற்றும் 100 ஜிபி கிளவுட் சேமிப்பு போன்ற டூல்கள் கிடைக்கும்
இந்தியா முழுவதும் மில்லியன் கணக்கான மக்களுக்கு அடோப் எக்ஸ்பிரஸ் பிரீமியத்தை இலவசமாக கொண்டு வர ஏர்டெல்லுடன் கூட்டு சேருவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், இது இந்தியாவின் துடிப்பான படைப்பாளி பொருளாதாரத்தின் வளர்ச்சியை துரிதப்படுத்துகிறது மற்றும் மக்கள் தங்கள் வாழ்க்கையை மேம்படுத்துவது, அவர்களின் வணிகங்களை வளர்ப்பது அல்லது அவர்களின் ஆர்வங்களை மேம்படுத்துவது என எதுவாக இருந்தாலும், தனித்துவமான உள்ளடக்கத்தை எளிதாக உருவாக்க உதவுகிறது என்று அடோப்பின் படைப்பாற்றல் மற்றும் உற்பத்தித்திறன் வணிகத் தலைவர் டேவிட் வாத்வானி கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications








