Airtel போட்ட போடு.. 365 நாட்களுக்கு ஒரே ரீசார்ஜ்.. அன்லிமிடெட் வாய்ஸ்.. 1.5 ஜிபி டேட்டா.. நேஷனலுடன் IR வருது!
ஏர்டெல் (Airtel) நிறுவனத்தின் ப்ரீபெய்ட் (Prepaid) மற்றும் போஸ்ட்பெய்ட் (Postpaid) திட்டங்கள் ஒட்டுமொத்தமாக மாற்றப்பட்டுள்ளன. இது இன்டர்நேஷனல் ரோமிங் சலுகைகளை பெறும் கஸ்டமர்களுக்கு மட்டுமே பொருந்தும். ஒரேவொரு ரீசார்ஜ் மூலம் 365 நாட்கள் வேலிடிட்டி மட்டுமல்லாமல், நேஷனல் மற்றும் இன்டர்நேஷன் ரோமிங் சலுகைகளை பெற்று கொள்ளலாம். இந்த சலுகைகளுடன் கிடைக்கும் திட்டங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம். 1 நாள் முதல் 365 நாட்கள் வரை வேலிடிட்டி கிடைக்கிறது.
ஏர்டெல் ரூ.648 ஐஆர் திட்டத்தில் 1 நாளுக்கு வேலிடிட்டி கிடைக்கிறது. இந்த நாட்களில் 1 ஜிபி டேட்டா, 100 நிமிடங்களுக்கான இன்கம்மிங் மற்றும் அவுட்கோயிங் கால்கள் கிடைக்கின்றன. 10 எஸ்எம்எஸ்கள் கிடைக்கின்றன. ஏர்டெல் ரூ 798 ஐஆர் திட்டத்தில் 5 நாட்களுக்கு வேலிடிட்டி கிடைக்கிறது. இதில் 2 ஜிபி டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம்.

150 நிமிடங்களுக்கான இன்கம்மிங், அவுட்கோயிங் கால்கள் கிடைக்கின்றன. 20 எஸ்எம்எஸ்களை அனுப்பி கொள்ளலாம். ஏர்டெல் ரூ 1098 ஐஆர் திட்டத்தில் 3 ஜிபி டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம். இதற்கு 200 நிமிடங்களுக்கு இன்கம்மிங், அவுட்கோயிங் கால்கள் கிடைக்கிறது. 20 எம்எம்எஸ்களை இந்த ஐஆர் திட்டத்தில் அனுப்பி கொள்ளலாம்.
ஏர்டெல் ரூ 2998 ஐஆர் திட்டத்தில் 10 ஜிபி டேட்டா கிடைக்கும். 300 நிமிடங்களுக்கான இன்கம்மிங் மற்றும் அவுட்கோயிங் கால்கள் வருகிறது. 20 எம்எம்எஸ்கள் கிடைக்கின்றன. இந்த இன்டர்நேஷன் ரோமிங் திட்டத்துக்கு 30 நாட்களுக்கு வேலிடிட்டி கிடைக்கிறது. ஏர்டெல் ரூ 4000 ஐஆர் திட்டத்தில் 365 நாட்களுக்கு வேலிடிட்டி கிடைக்கிறது.
ஆனால், இந்த ப்ரீபெய்ட் திட்டமானது, இன்டர்நேஷனல் சலுகைகள் மட்டுமல்லாமல், இந்தியாவிலும் சலுகைகளை கொடுக்கிறது. ஆகவே, ஒரே திட்டத்தில் டபுள் சலுகைகளை பெற்று கொள்ளலாம். இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு 365 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. இன்டர்நேஷனல் சலுகைகளை பார்க்கையில், 5 ஜிபி டேட்டா கிடைக்கிறது.
100 நிமிடங்களுக்கான இன்கம்மிங் மற்றும் அவுட்கோயிங் வாய்ஸ் கால்கள் கிடைக்கிறது. அதேபோல 100 எஸ்எம்எஸ் சலுகையும் கிடைக்கிறது. இதே திட்டத்தில் இந்தியாவுக்குள் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) & ரோமிங் கால்களை (Roaming Calls) செய்யலாம். இதுபோக நாளொன்றுக்கு 1.5 ஜிபி டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம்.
இதுபோக 100 எஸ்எம்எஸ்களை நாளொன்றுக்கு செய்து கொள்ளலாம். இப்போது, போஸ்ட்பெய்ட் கஸ்டமர்களுக்கு கிடைக்கும் இன்டர்நேஷனல் ரோமிங் திட்டங்களை தெரிந்து கொள்ளலாம். ஏர்டெல் ரூ 648 போஸ்ட்பெய்ட் திட்டத்தில் 1 நாளுக்கு வேலிடிட்டி மற்றும் 100 நிமிடங்களுக்கான வாய்ஸ் கால்கள் சலுகை கிடைக்கிறது. அன்லிமிடெட் டேட்டா கிடைக்கிறது.
10 எஸ்எம்எஸ் சலுகை வருகிறது. ஏர்டெல் ரூ 2999 போஸ்ட்பெய்ட் திட்டத்தில் 10 நாட்களுக்கு வேலிடிட்டி கிடைக்கிறது. இந்த நாட்களுக்கு நாளொன்றுக்கு 100 நிமிடங்கள் வாய்ஸ் கால்கள், அன்லிமிடெட் டேட்டா மற்றும் 10 எஸ்எம்எஸ்கள் கிடைக்கிறது. ஏர்டெல் ரூ 3999 போஸ்ட்பெய்ட் திட்டத்தில் 30 நாட்களுக்கு வேலிடிட்டி கிடைக்கிறது.
இந்த நாட்களில் நாளொன்றுக்கு 100 நிமிடங்களுக்கான வாய்ஸ் கால்கள், அன்லிமிடெட் டோட்டா மற்றும் 20 எஸ்எம்எஸ்கள் கிடைக்கிறது. ஏர்டெல் ரூ 5999 போஸ்ட்பெய்ட் திட்டத்தில் 90 நாட்களுக்கு வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. இந்த நாட்களில் 900 நிமிடங்களுக்கான வாய்ஸ் கால்கள், 100 எஸ்எம்எஸ்கள் மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் கிடைக்கிறது.
இதுபோக 250 எம்பி டேட்டா, 100 நிமிடங்கள் அவுட்கோயிங் கால்கள் மற்றும் 100 அவுட்கோயிங் எஸ்எம்எஸ் சலுகைகளானது, இன்-பிளைட்டில் கிடைக்கின்றன. ஆகவே, பிளைட்டில் டிராவல் செய்யும்போது, இந்த சலுகையை பயன்படுத்தி கொள்ளலாம். இப்படி ஏகப்பட்ட திட்டங்களை ஏர்டெல் நிறுவனம் கொண்டு வந்து இருக்கிறது.


Click it and Unblock the Notifications








