Home
News

Airtel-க்கு கும்பிடு.. இனி ஒரே ரீசார்ஜ்.. 365 நாட்கள் வேலிடிட்டி.. இந்தியா மட்டுமில்ல.. 189 நாடுகளில் ரோமிங்!

உலகம் முழுவதும் சுற்றும் இந்தியர்களுக்கும் சரி, வெளிநாடு-வாழ் இந்தியர்களுக்கும் (Non-Resident Indian) சரி, அவர்களை தட்டித்தூக்கும்படியான புதிய ஐஆர் திட்டத்தை (New IR Plan) ஏர்டெல் (Airtel) நிறுவனம் களமிறக்கி இருக்கிறது. இந்த திட்டம் இந்தியாவிலும் செல்லுபடியாகும், 189 நாட்களிலும் செல்லுப்படியாகும் என்பதால், ஒரே ரீசார்ஜ் மூலம் அதிக சலுகைகளை பெற்று கொள்ள முடியும். அதோடு நேரமும் மிஞ்சமாகிறது. இந்த புதிய இன்டர்நேஷனல் ரோமிங் திட்டத்தின் சலுகைகளையும், அதன் மூலம் கிடைக்கும் நன்மைகளையும் இப்போது தெரிந்து கொள்ளலாம்.

ஏர்டெல் நிறுவனம் பல்வேறு இன்டர்நேஷனல் ரோமிங் திட்டங்களை வைத்திருக்கிறது. ஆனால், அவை டேட்டா பேக்குகளை போல குறைவான சலுகைகளை மட்டுமே கொடுக்கும்படி இருந்தது. அதேபோல ஏற்கனவே உங்களிடம் ஆக்டிவ் திட்டமும் இருப்பதை அது உறுதி செய்தது. ஆனால், இப்போது வந்துள்ள புதிய திட்டம் அப்படியில்லை. ஒரே திட்டத்தில் அனைத்தும் அடங்குகிறது.

Airtel-க்கு கும்பிடு.. இனி ஒரே ரீசார்ஜ்.. 365 நாட்கள் வேலிடிட்டி!

ஏர்டெல் ரூ 4000 திட்ட விவரங்கள் (Airtel Rs 4000 Plan Details): இந்த ஏர்டெல் இன்டர்நேஷனல் ரோமிங் திட்டத்தை (Airtel International Roaming Plan) ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு 365 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. இந்த நாட்கள் முழுவதும் இந்தியாவில் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் நேஷனல் ரோமிங் கால்களை (National Roaming Calls) செய்துகொள்ள கொடுக்கிறது.

அதேபோல நாளொன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ்களையும் வருடம் முழுவதும் கொடுக்கிறது. இதே திட்டத்தில் 5 ஜிபி டேட்டா மற்றும் 100 நிமிடங்களுக்கான வாய்ஸ் கால்கள் (இன்கம்மிங் மற்றும் அவுட்கோயிங்) மற்றும் 100 எஸ்எம்எஸ் சலுகைகளை சர்வதேச அளவில் கொடுக்கிறது. ஆகவே, ஒரே திட்டத்தில் இந்தியா மற்றும் சர்வதேச கனெக்டிவிட்டி கிடைக்கிறது.

இந்த புதிய ஐஆர் திட்டத்தினால் என்னென்ன பயன்கள்? இந்த ஐஆர் திட்டம் மூலம் தனித்தனியே ரீசார்ஜ் செய்வது குறைக்கப்படுகிறது. அதேபோல என்ஆர்ஐ கஸ்டமர்களுக்கு இந்த திட்டம் புதிய சிம் கார்டு வாங்குவதற்காக ஏற்படும் நேரத்தையும் குறைக்கிறது. அதே நேரத்தில் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் பயணிகளுக்கு அங்கு புதிய சிம் கார்டு வாங்கும் நேரத்தை குறைக்கிறது.

மேலும், அதற்காக ஏற்படும் செலவையும் குறைக்கிறது. உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்தாலும் எப்போதும் தொடர்பில் இருப்பதை உறுதி செய்கிறது. உங்களது மொழியில் 24x7 கஸ்டமர் சப்போர்ட் பெற்று கொள்ளலாம். புதிய நாடுகளுக்கு சென்றாலும் ரீசார்ஜ் செய்ய வேண்டியது கிடையாது. அதேபோல சிம் கார்டு பில் செலுத்துவதில் குழப்பம் ஏற்படாது.

ஏனென்றால், வெளிநாட்டில் சிம் கார்டு வாங்கி அதில் பயன்படுத்தும் சலுகைகளுக்கு எவ்வளவு தொகை பிடிக்கப்படுகிறது என்பதை தெரிந்து கொள்வதில் குழப்பம் இருக்கும். ஆனால், உங்களுக்கு பழக்கமான ஏர்டெல் சிம் கார்டிலேயே சர்வதேச ரீசார்ஜ் கிடைப்பதால், இது கஸ்டமர்களுக்கு எளிதான மற்றும் தேவையான அனுகலை கொடுப்பதாகவும் இருக்கிறது.

இந்த சர்வதேச ரோமிங் திட்டம் மூலம் 189 நாடுகளில் சேவைகளை பெற்று கொள்ள முடியும் என்று டெலிகாம் மார்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த திட்டம் மட்டுமே 365 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கிறது. மற்ற இன்டர்நேஷனல் ரோமிங் திட்டத்தில் அதிகபட்சம் 30 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கொடுக்கிறது. அதுவும் உங்களிடம் ஆக்டிவ் திட்டம் இருக்க வேண்டும்.

இப்படியான சலுகைகளுடன் மற்றொரு ஏர்டெல் ரூ 2998 ஐஆர் திட்டம் கிடைக்கிறது. இதில் 30 நாட்கள் வேலிடிட்டி வருகிறது. இந்த நாட்களில் 10 ஜிபி டேட்டா, 300 நிமிடங்கள் வாய்ஸ் கால்கள் (இன்கம்மிங் + அவுட்கோயிங்) சலுகை கிடைக்கிறது. 20 எஸ்எம்எஸ்கள் மட்டுமே கிடைக்கிறது. யுஎஸ்ஏ, ஐரோப்பா நாடுகள், வளைகுடா நாடுகள், ஆசிய நாடுகள், ஆப்பிரிக்க நாடுகளில் சேவைகளை கொடுக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Airtel Rs 4000 IR Plan Offers Voice Calls Data 365 Days Validity For Both Overseas And India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X