Airtel பயனர்களுக்கு செம ஆஃபர்..150ஜிபி இலவச டேட்டா.. 365 நாட்கள் வேலிடிட்டி.. வாய்ஸ் கால்கள்.. எந்த திட்டம்?
ஜியோ நிறுவனம் சமீபத்தில் ஓடிடி சந்தா மற்றும் 1000-க்கும் மேற்பட்ட லைவ் டிவி சேனல்கள் வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்தது. அதாவது ரூ.550, ரூ.2000 விலைகளில் ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்தது. குறிப்பாக இந்த ஜியோ ப்ரீபெய்ட் திட்டங்களுக்கு தற்போது நல்ல வரவேற்பு உள்ளது.
இந்நிலையில் ஜியோ நிறுவனத்துக்குப் போட்டி கொடுக்கும் வகையில் ஏர்டெல் நிறுவனம் ப்ரீபெய்ட் திட்டம் ஒன்றில் கூடுதல் சலுகைகளை வழங்கி உள்ளது. அதாவது தற்போது ஏர்டெல் நிறுவனம் ரூ.3999 ப்ரீபெய்ட் திட்டத்தில் தான் கூடுதல் டேட்டா சலுகையை வழங்கி உள்ளது. இப்போது இந்த திட்டத்தில் கிடைக்கும் நன்மைகள் மற்றும் வேலிடிட்டி குறித்த தகவல்களைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.3999 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 3999 prepaid plan)ஒரு வருடம் அதாவது 365 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. இந்த திட்டத்தில் தினமும் 2.5ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இதுபோக தற்போது இந்த திட்டத்தில் இலவசமாக 150ஜிபி கூடுதல் டேட்டா வழங்கப்படுகிறது.
தற்போது வழங்கப்பட்டுள்ள 150ஜிபி கூடுதல் டேட்டா ஆனது 365 நாட்களுக்குச் செல்லுபடியாகும். எனவே இந்த திட்டத்தில் மொத்தமாக 1062.5ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர பல்வேறு அசத்தலான நன்மைகள் இந்த ஏர்டெல் ரூ.3999 ப்ரீபெய்ட் திட்டத்தில் உள்ளன.
அதாவது அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை ஏர்டெல் ரூ.3999 திட்டத்தில் வழங்கப்படுகிறது.
அதேபோல் ரூ.4000 மதிப்புள்ள adobe எக்ஸ்பிரஸ் பிரீமியம் (adobe express premium), இலவச ஹாலோ டியூன்ஸ் (Hellotunes), அன்லிமிடெட் 5ஜி டேட்டா(unlimited 5g data), தினமும் 100 எஸ்எம்எஸ் போன்ற சலுகைகளை இந்த திட்டம் மூலம் பெற முடியும்.
குறிப்பாக ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.3999 ப்ரீபெய்ட் திட்டத்தில் அன்லிமிடெட் அழைப்பு நன்மைகள், அதிக டேட்டா, adobe எக்ஸ்பிரஸ் பிரீமியம் உள்ளிட்ட நன்மைகள் இருப்பதால் ஏர்டெல் பயனர்கள் நம்பி ரீசார்ஜ் செய்யலாம். மேலும் சமீபத்தில் ஜியோ நிறுவனமும் ரூ.3599 ப்ரீபெய்ட் திட்ட்டத்தில் கூடுதல் டேட்டா சலுகையை அறிவித்தது. இப்போது அந்த திட்டத்தின் நன்மைகளையும் பார்க்கலாம்.
ஜியோ ரூ.3599 ப்ரீபெய்ட் திட்டத்தில் வழங்கப்பட்ட சலுகைகள்:
365 நாட்கள் வேலிடிட்டி
தினமும் 2.5ஜிபி டேட்டா
அன்லிமிடெட் அழைப்புகள்
தினமும் 100 எஸ்எம்எஸ்
12 மாதங்களுக்கு ஒவ்வொரு மாதமும் 10ஜிபி டேட்டா வீதம் 120ஜிபி டேட்டா போனஸ்
18 மாதங்களுக்கு கூகுள் ஜெமினி ப்ரோ சேவைக்கான சந்தா
5000ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ்
நானோ பானானா ஏ.ஐ
ஜியோஹாட்ஸ்டார் மொபைல் சந்தா
வருடம் முழுவதும் 1000+ லைவ் டிவி சேனல்களை பார்த்து கொள்ளலாம்
ஜியோ டிவி வழியாக மட்டுமே இந்த லைவ் டிவி சேனல்களை பார்த்துக் கொள்ள முடியும்
EasemyTrip வழங்கும் விமானங்கள் மற்றும் ஓட்டல் புக்கிங்களில் ரூ.2200 வவுச்சர்.
Cinepolis திரையரங்குகளில் ரூ.150 தள்ளுபடி வவுச்சர்
ரூ. 200 AJIO தள்ளுபடி வவுச்சர்

ஜியோவின் ரூ.3599 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது 365 நாட்கள் வேலிடிட்டி உடன் கூடுதல் டேட்டா, ஓடிடி, லைவ் டிவி சேனல்கள், வவுச்சர் மற்றும் அன்லிமிடெட் அழைப்பு நன்மைகளை வழங்குவதால் நம்பி ரீசார்ஜ் செய்யலாம்.


Click it and Unblock the Notifications
