ஜியோ Vs ஏர்டெல்.. 365 நாட்கள் வேலிடிட்டி.. 1062ஜிபி டேட்டா.. OTT.. அன்லிமிடெட் சலுகைகள்.. எது சிறந்தது?
ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் தங்களது ஒரு வருட ப்ரீபெய்ட் திட்டங்களில் எக்ஸ்ட்ரா டேட்டா மற்றும் கூடுதல் சலுகைகளை வழங்கி உள்ளன. சமீபத்தில் தான் இந்த இரண்டு நிறுவனங்களும் கூடுதல் சலுகைகளை வழங்கியது. இப்போது எந்த நிறுவனத்தின் ஒரு வருட ப்ரீபெய்ட் திட்டத்தை தேர்வு செய்வது நல்லது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
ஏர்டெல் ரூ.3999 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 3999 prepaid plan) 365 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. இந்த திட்டத்தில் தினமும் 2.5ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இதுபோக தற்போது இந்த திட்டத்தில் இலவசமாக 150ஜிபி கூடுதல் டேட்டா வழங்கப்படுகிறது.

தற்போது வழங்கப்பட்டுள்ள 150ஜிபி கூடுதல் டேட்டா ஆனது 365 நாட்களுக்குச் செல்லுபடியாகும். எனவே இந்த திட்டத்தில் மொத்தமாக 1062.5ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர பல்வேறு அசத்தலான நன்மைகள் இந்த ஏர்டெல் ரூ.3999 ப்ரீபெய்ட் திட்டத்தில் உள்ளன.
அதாவது அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை ஏர்டெல் ரூ.3999 திட்டத்தில் வழங்கப்படுகிறது.
அதேபோல் ரூ.4000 மதிப்புள்ள adobe எக்ஸ்பிரஸ் பிரீமியம் (adobe express premium), இலவச ஹாலோ டியூன்ஸ் (Hellotunes), அன்லிமிடெட் 5ஜி டேட்டா(unlimited 5g data), தினமும் 100 எஸ்எம்எஸ் போன்ற சலுகைகளை இந்த திட்டம் மூலம் பெற முடியும்.
ஜியோ ரூ.3599 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 3599 prepaid plan) ஆனது தினமும் 2.5ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். அதேபோல் 120ஜிபி போனஸ் டேட்டாவும் இந்த திட்டத்தில் கிடைக்கிறது. குறிப்பாக 12 மாதங்களுக்கு ஒவ்வொரு மாதமும் 10ஜிபி டேட்டா வீதம் 120ஜிபி டேட்டா போனஸ் கிடைக்கும்.
ஆகவே நீங்கள் ஜியோ ரூ.3599 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 1032.5ஜிபி டேட்டாவை பயன்படுத்த முடியும். அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை ஜியோ ரூ.3599 ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கும்.
18 மாதங்களுக்கு கூகுள் ஜெமினி ப்ரோ சேவைக்கான சந்தா, நானோ பானானா ஏ.ஐ, 5000ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ் போன்ற சலுகைகள் ஜியோ ரூ.3599 ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கிறது. அதேபோல் இந்த திட்டம் மூலம் வருடம் முழுவதும் 1000+ லைவ் டிவி சேனல்களை பார்த்து கொள்ளலாம். அதுவும் ஜியோ டிவி வழியாக மட்டுமே இந்த லைவ் டிவி சேனல்களை பார்த்துக் கொள்ள முடியும்.

தினமும் 100 எஸ்எம்எஸ் ஜியோ ரூ.3599 ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கும். மேலும் ஜியோஹாட்ஸ்டார் மொபைல் சந்தா, EasemyTrip வழங்கும் விமானங்கள் மற்றும் ஓட்டல் புக்கிங்களில் ரூ.2200 வவுச்சர், Cinepolis திரையரங்குகளில் ரூ.150 தள்ளுபடி வவுச்சர், ரூ. 200 AJIO தள்ளுபடி வவுச்சர் போன்ற சலுகைகளும் ஜியோ ரூ.3599 ப்ரீபெய்ட் திட்டத்தில் வழங்கப்படுகின்றன.
எது சிறந்தது?
ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.3999 ப்ரீபெய்ட் திட்டத்தில் தான் அதிக டேட்டா கிடைக்கிறது. ஆனாலும் ஜியோ தனது ரூ.3599 ப்ரீபெய்ட் திட்டத்தில் டேட்டா நன்மையுடன் தற்போது கூடுதல் சலுகைகளை வழங்குகிறது. எனவே ஜியோ நிறுவனத்தின் ரூ.3599 ப்ரீபெய்ட் திட்டத்தை தேர்வு செய்வது நல்லது.


Click it and Unblock the Notifications
