இந்த விஷயம் தெரிந்தால் உடனே ரீசார்ஜ் பண்ணுவீங்க.. அள்ளி தரும் Airtel.. எந்த திட்டத்தில் தெரியுமா?
ஏர்டெல் நிறுவனம் தொடர்ந்து புதிய திட்டங்கள் மற்றும் சலுகைகளை வழங்கி வருகிறது. அதேபோல் ஏர்டெல் நிறுவனத்தின் ஒரு வருட ப்ரீபெய்ட் திட்டங்களில் ரீசார்ஜ் செய்ய தான் பலர் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். சரி இப்போது விஷயத்துக்கு வருவோம் ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.3999 ப்ரீபெய்ட் திட்டம் வழங்கும் புதிய நன்மைகள் குறித்து இந்த பதிவில் சற்று விரிவாகாப் பார்க்கலாம்.
ஏர்டெல் ரூ.3999 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 3999 prepaid plan) முன்பு பெர்ப்லெக்ஸிடி ப்ரோ ஏஐ (Perplexity Pro AI) சந்தாவை வழங்கியது. ஆனால் இனிமேல் பெர்ப்லெக்ஸிடி ப்ரோ ஏஐ இந்த திட்டத்தில் கிடைக்காது. இனி பெர்ப்லெக்ஸிடி ப்ரோ ஏஐ சந்தாவுக்கு பதிலாக ரூ.4000 மதிப்புள்ள adobe எக்ஸ்பிரஸ் பிரீமியம் (adobe express premium) வழங்கப்படும். அதுவும் அடோப் எக்ஸ்பிரஸ் பிரீமியம் வேலிடிட்டி 12 மாதங்கள் ஆகும்.

குறிப்பாக அடோப் எக்ஸ்பிரஸ் பிரீமியத்துடன், பயனர்கள் மாதத்திற்கு 250 ஜெனரேட்டிவ் கிரெடிட்கள், அனைத்து பிரீமியம் நிலையான மற்றும் வீடியோ டெம்ப்ளேட்களுக்கான அணுகல், 200 மில்லியனுக்கும் அதிகமான ராயல்டி இல்லாத அடோப் ஸ்டாக் புகைப்படங்கள், வீடியோக்கள், இசை டிராக்குகள், 30,000+ ஃபாண்ட்களுடன் முழுமையான அடோப் எழுத்துக்கள் சேகரிப்புக்கான அணுகல், வீடியோ பின்னணியை அகற்றுவது போன்ற வசதிகளை பயன்படுத்த முடியும்.
ஏர்டெல் ரூ.3999 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது 365 நாட்கள் அதாவது ஒரு வருடம் வேலிடிட்டி வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் தினமும் 2.5ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. எனவே நீங்கள் இந்த ஏர்டெல் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 912.5ஜிபி டேட்டா கிடைக்கும்.
அதேபோல் இந்த திட்டத்தில் தினசரி 2.5 டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறையும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஏர்டெல் ரூ.3999 ப்ரீபெய்ட் திட்டம் ஒரு வருடத்திற்கு ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) சந்தாவை வழங்குகிறது. குறிப்பாக இந்த ஓடிடி நன்மை மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும்.
மேலும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை ஏர்டெல் ரூ.3999 திட்டத்தில் வழங்கப்படுகிறது. இதுதவிர இலவச ஹாலோ டியூன்ஸ் (Hellotunes), அன்லிமிடெட் 5ஜி டேட்டா(unlimited 5g data), தினமும் 100 எஸ்எம்எஸ் போன்ற சலுகைகளை இந்த திட்டம் மூலம் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.3599 திட்டமும் ஒரு வருடம் வேலிடிட்டி வழங்குகிறது. இந்த திட்டத்தின் நன்மைகளையும் இப்போது பார்க்கலாம்.

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.3599 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 3599 prepaid plan) தினமும் 2ஜிபி டேட்டா வழங்குகிறது. 365 நாட்கள் வேலிடிட்டி இந்த திட்டத்தில் கிடைக்கிறது. எனவே நீங்கள் இந்த ஏர்டெல் திட்டத்தைத் தேர்வு செய்தால் மொத்தம் 730ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறைக்கப்படும்.
குறிப்பாக அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை ஏர்டெல் ரூ.3599 திட்டத்தில் வழங்கப்படுகிறது. தினமும் 100 எஸ்எம்எஸ், அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data), ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes), அடோப் எக்ஸ்பிரஸ் பிரீமியம் உள்ளிட்ட நன்மைகள் இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








