ஒரே ரீசார்ஜ்.. தினமும் 2.5GB டேட்டா.. OTT.. வாய்ஸ் கால்கள்.. 365 நாள் வேலிடிட்டி.. Airtel பெஸ்ட்..என்ன விலை?
சமீபத்தில் தான் ஏர்டெல் (Airtel), ஜியோ (Jio) நிறுவனங்கள் ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையை உயர்த்தியது. இந்த விலை உயர்வுக்கு சில அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். அதுவும் ஏர்டெல் நிறுவனத்தின் முக்கியமான ப்ரீபெய்ட் திட்டங்களின் கட்டணம் உயர்த்தப்பட்டதால் பயனர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
எனவே ஏர்டெல் வாடிக்கையாளர்கள் சிறிய சிறிய ப்ரீபெய்ட் திட்டங்களில் மாதம் ஒருமுறை அல்லது மூன்று மாதம் ஒருமுறை ரீசார்ஜ் செய்வதை விட ஒரு வருடம் வேலிடிட்டி, ஓடிடி சந்தா மற்றும் அதிக டேட்டா தரும் ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்வது நல்லது. அதாவது ஏர்டெல் ஒரு வருடம் வேலிடிட்டி மற்றும் ஒடிடி நன்மைகளும் தரும் ப்ரீபெய்ட் திட்டத்தை வைத்துள்ளது. அந்த ப்ரீபெய்ட் திட்டத்தை இப்போது பார்க்கலாம்.

ஏர்டெல் ரூ.3999 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 3999 prepaid plan) தான் ஒரு வருடம் அதாவது 365 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. அதேபோல் இந்த திட்டத்தில் தினமும் 2.5ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. எனவே நீங்கள் ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.365 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 912.5ஜிபி டேட்டா கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.3999 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது ஒரு வருடத்திற்கு டிஸ்னி+ ஹாட்ஸ்டார் (disney + Hotstar)சந்தாவை வழங்குகிறது. மேலும் இந்த அசத்தலான திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகின்றன. இதுதவிர பல்வேறு சலுகைகள் இதில் உள்ளது.

அதாவது ஏர்டெல் ரூ.3999 திட்டம் ஆனது அப்பல்லோ 24/7 சர்கிள் (Apollo 24|7 Circle) சந்தா, இலவச ஹாலோ டியூன்ஸ் (Hellotunes), விங்க் மியூசிக் (Wynk Music),அன்லிமிடெட் 5ஜி உள்ளிட்ட பல நன்மைகளை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் தினசரி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறைக்கப்படுகிறது.
அழைப்பு நன்மைகள், அதிக டேட்டா, OTT சந்தா உள்ளிட்ட அனைத்து சலுகைகளும் இந்த ஏர்டெல் ரூ.3999 ப்ரீபெய்ட் திட்டம் வழங்குவதால் நம்பி தேர்வு செய்யலாம். மேலும் இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் ஒரு வருடத்திற்கு எந்த கவலையும் இருக்காது. அதேபோல் ரூ.500-க்குள் நீங்கள் ரீசார்ஜ் செய்ய விரும்பினால் இரண்டு முக்கியமான திட்டங்கள் உள்ளது. அதை இங்கே பார்க்கலாம்.

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.449ப்ரீபெய்ட் திட்டம் (airtel rs 449 plan) ஆனது தினசரி 3ஜிபி டேட்டாவை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 மாதம் ஆகும். அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினமும் 100 எஸ்எம்எஸ், ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே (Airtel Xstream Play) சந்தா, அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data), விங்க் மியூசிக் ( Wynk Music), ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes), அப்பல்லோ 24/7 சர்க்கிள் (apollo 24/7 circle) உள்ளிட்ட நன்மைகள் இதில் கிடைக்கும்.
ஏர்டெல் நிறுவனத்தின் ரூரூ.429 ப்ரீபெய்ட் திட்டம் (airtel rs 429 plan) ஆனது தினசரி 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி ஒரு மாதம் ஆகும். அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினமும் 100 எஸ்எம்எஸ், அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data), விங்க் மியூசிக் ( Wynk Music), ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes), அப்பல்லோ 24/7 சர்க்கிள் (apollo 24/7 circle) உள்ளிட்ட நன்மைகள் இதில் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








