Home
News

Airtel SIM காட்டில் மழை.. மாதம் ரூ.333 போதும்.. 365 நாட்கள் வேலிடிட்டி.. 2.5 ஜிபி டேட்டா.. வாய்ஸ் கால்கள்!

ஏர்டெல் (Airtel) நிறுவனத்தின் ப்ரீபெய்ட் சிம் கார்டை (Prepaid SIM Card) வைத்திருக்கும் கஸ்டமர்களுக்கு வருடம் முழுவதும் டேட்டா மற்றும் வாய்ஸ் கால்களுக்கு துளியும் குறையிருக்கக்கூடாது என்றால், இப்போது பார்க்க இருக்கும் திட்டத்தை கண்ணை மூடிக்கொண்டு ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். இந்த வருடாந்திர திட்டத்தின் முழு சலுகைகளை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

இந்த திட்டத்தின் விலை ரூ.3999 ஆக இருக்கிறது. இந்த விலைக்கு 365 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கிறது. அதாவது, 12 மாதங்கள் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. ஆகவே, 1 மாதத்துக்கு ஏற்படும் செலவை கணக்கிட்டால், ரூ.333 ஆக மட்டுமே இருக்கிறது. இந்த விலைக்கு ஏற்ப சலுகைகள் வாரி வழங்கப்பட்டு இருக்கின்றன. டேட்டா (Data), வாய்ஸ் (Voice), எஸ்எம்எஸ் (SMS) போக சலுகைகள் உள்ளன.

Airtel SIM காட்டில் மழை! மாதம் ரூ.333 போதும்.. 365 நாட்கள் வேலிடிட்டி!

ஏர்டெல் ரூ.3999 திட்ட விவரங்கள் (Airtel Rs 3999 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தை ரீசார்ஜ் செய்த பிறகு 365 நாட்களுக்கு வேலிடிட்டி கொடுக்கப்பட்டுவிடும். இந்த நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை (Roaming Voice Calls) ப்ரீபெய்ட் கஸ்டமர்கள் செய்து கொள்ளலாம்.

அதேபோல நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் கொடுக்கப்படுகிறது. டேட்டா சலுகையை பார்க்கையில், 4ஜி கஸ்டமர்களாக இருந்தால் நாளொன்றுக்கு 2.5 ஜிபி டேட்டா கொடுக்கப்படும். ஆகவே, 365 நாட்கள் வேலிடிட்டி முழுவதும் மொத்தமாக 912.5 ஜிபி டேட்டாவை கஸ்டமர்கள் பயன்படுத்தி இருக்க முடியும். இதுபோக போஸ்ட் டேட்டாவும் (Post Data) கொடுக்கப்பட்டு உள்ளது.

அதாவது, நாளொன்றுக்கு ஒதுக்கப்பட்ட 2.5 ஜிபி டேட்டாவை அன்றைய நாள் முடிவதற்கு முன்னதாகவே பயன்படுத்தி முடித்துவிட்டால், அதற்கு பிறகு 64 கேபிபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா கொடுக்கப்படும். ஆகவே, எப்படி பார்த்தாலும் வருடம் முழுவதும் 4ஜி கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் டேட்டா கிடைக்கும். அதுவே 5ஜி கஸ்டமர்களாக இருந்தால், கவலையே இல்லை.

நாளொன்றுக்கு எந்த லிமிட்டும் இல்லாமல், வருடம் முழுதும் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை (Unlimited 5G Data) பயன்படுத்தி கொள்ளலாம். இந்த டேட்டா முற்றிலும் இலவசமாக கொடுக்கப்படும் டேட்டாவாக இருக்கிறது. ஆகவே, நாளொன்றுக்கு கிடைக்கும் 2.5 ஜிபி டேட்டாவை கணக்கில் எடுக்காமலேயே இந்த சலுகையை கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.

இந்த வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் மற்றும் டேட்டா சலுகைகளுக்கு அடுத்து கூடுதல் சலுகைகளையும் ஏர்டெல் ரூ.3999 திட்ட (Airtel Rs 3999 Plan) கொடுத்து இருக்கிறது. இதில் ரூ.4,000 மதிப்புள்ள அடோப் எக்ஸ்பிரஸ் பிரீமியம் (Adobe Express Premium) சந்தா கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த திட்டத்துக்கு கிடைப்பதை போலவே 12 மாதங்களுக்கான சந்தாவை இந்த அடோப் எக்ஸ்பிரஸ் பிரீமியம் கொடுக்கும்.

ப்ரீபெய்ட் கஸ்டமர்களுக்கு வரும் வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ்களில் இருக்கும் ஸ்பேம்களை ரியல் டைமில் டிடெக்ட் செய்து கொள்ளும்படி ஸ்பேம் அலெர்ட் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த சலுகைகளுக்கு அடுத்து வழக்கமாக கிடைக்கும் ப்ரீ ஹேலோ டியூன்ஸ் (Free Hello Tunes) சலுகைகள் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதை 30 நாட்களுக்கு ஒரு முறை மாற்றி கொள்ளலாம்.

Best Mobiles in India

English summary
Airtel Rs 3999 Plan With Unlimited Voice Calls 365 Days Validity Unlimited 5G Data 2.5 GB Data
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X