Home
News

ஏர்டெல் பேட்ட போடு.. மாசம் ரூ.333-க்கு இறக்கியாச்சு.. 365 நாட்கள் வேலிடிட்டி.. வாய்ஸ் கால்கள்.. 912GB டேட்டா!

இந்த ப்ரீபெய்ட் திட்டம் (Prepaid Plan) போதுமே, இனிமே எதுக்கு மாதத்துக்கு ரீசார்ஜ் பண்ணிக்கிட்டு, ஒரே அடியா 365 நாட்களுக்கு பண்ணிடலாமென்று ஏர்டெல் (Airtel) கஸ்டமர்கள் மூக்கில் விரல் வைக்கும்படியான சலுகைகள் வந்துள்ளது. மாதத்துக்கு ரூ.333 செலவில் வாய்ஸ் கால்கள் (Voice Calls), எஸ்எம்எஸ் (SMS), தினசரி டேட்டா (Daily Data), அன்லிமிடெட் 5ஜி (Unlimited 5G) மட்டுமல்லாமல், ஓடிடி (OTT) ஆப் சந்தாவையும் கொடுக்கிறது. இந்த ஏர்டெல் வருடாந்திர திட்டத்தின் (Airtel Yearly Recharge Plan) விவரங்கள் இதோ.

இந்த 356 நாட்கள் வேலிடிட்டி (365 Days Validity) திட்டத்தில் ஒட்டுமொத்த சலுகைகளும் கஸ்டமர்களுக்கு கிடைக்கிறது. ஏர்டெல் நிறுவனத்தின் கட்டண உயர்வுக்கு பிறகு இந்த திட்டம் களமிறக்கப்பட்டு இருக்கிறது. வருடாந்திர திட்டங்களில் அதிகப்படியான கஸ்டமர்கள் ரீசார்ஜ் செய்வதும், இந்த திட்டத்தைத்தான். முதலில் இந்த திட்டத்தின் சலுகைகளை பார்த்து விடுவோம்.

ஏர்டெல் பேட்ட போடு.. மாசம் ரூ.333-க்கு இறக்கிய 365 நாட்கள் வேலிடிட்டி!

ஏர்டெல் ரூ 3999 திட்ட விவரங்கள் (Airtel Rs 3999 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் டேட்டா சலுகையே கஸ்டமர்களை தூக்கி சாப்பிடும்படி இருக்கிறது. அதாவது, 365 நாட்களுக்கும் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். இதுபோக நாளொன்றுக்கு 2.5 ஜிபி டேட்டா வருடம் முழுவதும் கிடைக்கிறது. இந்த 2.5 ஜிபிக்கு பிறகு 64 கேபிபிஎஸ் டேட்டா கிடைக்கிறது.

ஆகவே, இந்த திட்டத்தில் டேட்டாவுக்கு பஞ்சமே கிடையாது. ஆன்லைன் கேமிங் மற்றும் ஓடிடி பிரியர்கள் எந்தவித டேட்டா வவுச்சர்களும் இல்லாமலேயே வருடம் முழுவதும், இந்த திட்டத்தின் டேட்டாவை மட்டுமே பயன்படுத்தி கொள்ளலாம். இந்த திட்டத்தில் ஓடிடி சலுகையும் கிடைக்கிறது. ஆகவே, டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டார் சந்தாவை (Disney+ Hotstar Subscription) பெறலாம்.

இந்த சந்தா மொபைல் சலுகைகளை கொடுக்கிறது. 365 நாட்களுக்கும் சந்தா கிடைக்கும். இந்த பிரீமியம் ஓடிடி ஆப் மட்டுமல்லாமல், ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஆப் (Airtel Xtream App) சந்தாவும் பேக் செய்யப்பட்டுள்ளது. இது பிரீமியம் சலுகைகளை கொடுக்காது. இருப்பினும், இலவசமாக கிடைக்கும் டிவி சேனல்கள், லைவ் ஷோக்கள் மற்றும் மூவிக்களை பார்த்து கொள்ள முடியும்.

ஆகவே, டேட்டாவும் ஓடிடியும் குறையில்லாமல் கிடைக்கிறது. இப்போது, வாய்ஸ் கால்களை பற்றி தெரிந்து கொள்வோம். இந்த ஏர்டெல் வருடாந்திர திட்டத்தை ரீசார்ஜ் செய்வோருக்கு அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை கிடைக்கிறது. 365 நாட்களுக்கும் எந்தவித கட்டுப்பாடுகளின்றி பயன்படுத்தலாம்.

டேட்டா சலுகையை போலவே தினசரி எஸ்எம்எஸ் சலுகையும் இந்த திட்டத்துக்கு பொருந்தும். ஆகவே, 100 எஸ்எம்எஸ்களை நாளொன்றுக்கு செய்து கொள்ளலாம். இப்போது, இதர சலுகைகளை பற்றி பார்க்கலாம். இந்த திட்டத்துக்கும் ஏர்டெல் கஸ்டமர்களுக்கு மட்டுமே கிடைக்கும் சில சலுகைகள் கிடைக்கின்றன. அதாவது, அப்பல்லோ 24/7 சர்கிள் (Apollo 24|7 Circle) மெம்பர்ஷிப் வருகிறது.

இந்த மெம்பர்ஷிப் 3 மாதங்களுக்கு மட்டுமே கிடைக்கிறது. மேலும், விங்க் மியூசிக் (Wynk Music) மற்றும் ஹாலோ டியூன்ஸ் (Hellotunes) சலுகையை பயன்படுத்த முடியும். இதைவிட மலிவான விலையில் திட்டம் வேண்டுமானால், ஏர்டெல் ரூ 3599 திட்டத்தை ரீசார்ஜ் செய்து கொள்ளுங்கள். இந்த திட்டத்துக்கும் 365 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். ஆனால், ஓடிடி சலுகைகளை எதிர்பார்க்க முடியாது.

இருப்பினும், ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஆப் சலுகை மட்டும் கிடைக்கிறது. மற்ற சலுகைகளை பார்க்கையில், 2 ஜிபி டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ்களை நாள்தோறும் செய்து கொள்ளலாம். அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், அப்பல்லோ 24/7 சர்கிள் சந்தா, விங்க் மியூசிக் மற்றும் ஹலோ டியூன்ஸ் சலுகைகள் கிடைக்கிறது. இந்த திட்டத்தில் டேட்டா குறைவாகும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Airtel Rs 3999 Plan With Unlimited Voice Calls 912GB Data 365 Days Validity Yearly Recharge Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X