Airtel அடிச்ச சிக்ஸ்.. மாதாந்திரம் ரூ.333-க்கு 365 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ்.. 2.5 ஜிபி டேட்டா!
ஏர்டெல் (Airtel) கஸ்டமர்களுக்கு மாதாந்திரம் ரூ.333 செலவில் 365 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கும் ப்ரீபெய்ட் திட்டத்தை (Prepaid Plan) பற்றி இப்போது தெரிந்து கொள்ள போகிறோம். கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமல்லாமல், ஓடிடி பிரியர்களையும் தட்டித்தூக்கும்படி இந்த திட்டத்தில் சலுகைகள் வாரி வழங்கப்பட்டுள்ளன. அன்லிமிடெட் வாய்ஸ கால்கள் (Unlimited Voice Calls) தொடங்கி 5ஜி டேட்டா (5G Data) வரையில் ஒட்டுமொத்த சலுகைகளும் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த வருடாந்திர ப்ரீபெய்ட் திட்டம் குறித்த முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
ஏர்டெல் ரூ 3999 திட்ட விவரங்கள் (Airtel Rs 3999 Plan Details): ஏர்டெல்லில் அதிகப்படியான சலுகைகள் மற்றும் விலை கொண்ட திட்டமாக இந்த ரூ.3999 திட்டம் இருக்கிறது. இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் இல்லாத சலுகைகளே கிடையாது என்றே சொல்ல வேண்டும். அவ்வளவு சலுகைகள் வாரி வழங்கப்பட்டுள்ளன. கிரிக்கெட் ரசிகர்களுக்கு இந்த திட்டம் டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டார் கொடுக்கிறது.

365 நாட்கள் வேலிடிட்டி வருவதால், ஆண்டு முழுவதும் ஓடிடி ஆப் கிடைக்கும். இதுபோக ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஆப் (Airtel Xtream App) சந்தாவை கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ள முடியும். இந்த ஆப் மூலம் ஓடிடி பிரியர்களுக்கு கூடுதலாக டிவி ஷோக்கள், மூவிக்கள் மற்றும் லைவ் டிவி சேனல்களின் சந்தா கொடுக்கப்படுகிறது. இதற்கான டேட்டாவுக்கு குறையில்லை.
ஏனென்றால், ஏர்டெல் 5ஜி சேவை கிடைக்கும் பகுதிகளில் இருக்கும் கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) சலுகைகளை கொடுக்கிறது. ஆகவே, வருடம் முழுவதும் ஓடிடி மற்றும் டேட்டாவை அன்லிமிடெட்டாக பயன்படுத்தலாம். இப்போது, வழக்கமான சலுகைகளை பற்றி தெரிந்து கொள்வோம். இந்த திட்டத்துக்கு தினந்தோறும் 2.5 ஜிபி டேட்டா கிடைக்கிறது.
இந்த 2.5 ஜிபிக்கு பிறகு 64 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது. அன்லிமிடெட் 5ஜி டேட்டா கிடைக்காத போதும், இந்த திட்டம் டேட்டா சலுகையில் பின்னிப்பெடல் எடுத்துள்ளது. அதேபோல அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகையை 365 நாட்களுக்கும் கொடுத்து இருக்கிறது.
இந்த வருடாந்திர ப்ரீபெய்ட் திட்டத்தில் நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் சலுகை கிடைக்கிறது. இந்த டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டார் சந்தாவை (Disney+ Hotstar Subscription) பொறுத்தவரையில் மொபைல் சலுகைகளை பெற்று கொள்ளலாம். மேலும், ஏர்டெல் கஸ்டமர்களுக்கு மட்டுமே கிடைக்கும் 3 மாதங்களுக்கான அப்பல்லோ 24/7 சர்கிள் (Apollo 24|7 Circle) மெம்பர்ஷிப் கொடுக்கப்பட்டுள்ளது.
இறுதியாக விங்க் மியூசிக் (Wynk Music) மற்றும் ஹாலோ டியூன்ஸ் (Hellotunes) சலுகைகளை பெற்று கொள்ளலாம். இதைவிட மலிவான விலையில் கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஏற்ற திட்டம் வேண்டுமானால், ரூ.549 மதிப்பிலான ப்ரீபெய்ட் திட்டத்தை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். இதில் கூடுதலாக ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிளே பிரீமியம் (Airtel Xstream Play Premium) சந்தா கொடுக்கப்படும்.
ஆகவே, 3 மாதங்களுக்கு டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டார் சந்தாவுடன் எக்ஸ்ஸ்ட்ரீம் பிளே பிரீமியம் சந்தாவின் கீழ் கிடைக்கும் 22 ஓடிடி ஆப்களை பயன்படுத்தி கொள்ள முடியும். இதில் சோனிலிவ் (SonyLIV), லயன்ஸ்கேட் பிளே (Lionsgate Play), ஈராஸ் நவ் (Eros Now), மனோரமா மேக்ஸ் (Manorama Max), கான்ச்சா லங்கா (Kanccha Lanka) மற்றும் அல்ட்ரா (Ultra) உள்ளிட்ட ஆப்களின் சந்தா கொடுக்கப்படும்.
இந்த திட்டத்தின் டேட்டாவை பார்க்கையில், நாளொன்றுக்கு 3 ஜிபி டேட்டா கிடைக்கிறது. அன்லிமிடெட் 5ஜி டேட்டா மற்றும் 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா கிடைக்கும். அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், 100 எஸ்எம்எஸ், அப்பல்லோ 24/7 சர்கிள் மெம்பர்ஷிப், ஹாலோ டியூன்ஸ் மற்றும் விங்க் மியூசிக் சலுகை கிடைக்கும். 56 நாட்கள் வேலிடிட்டி பெற்று கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








