ஒரே Airtel ரீசார்ஜ் வருடம் முழுதும் கவலை இல்லை.. ஓடிடி.. தினமும் 2.5ஜிபி டேட்டா.. வாய்ஸ் கால்கள்..
ஏர்டெல் (airtel) நிறுவனம் ஜியோ (jio) நிறுவனத்துக்குப் போட்டியாக அவ்வப்போது ஓடிடி நன்மைகளுடன் புதிய திட்டங்களை அறிமுகம் செய்கிறது. இதுதவிர ஏற்கனவே உள்ள திட்டங்களிலும் சலுகைகளை வழங்குகிறது. எனவே தான் ஜியோ திட்டங்களை விட ஏர்டெல் திட்டங்களில் ரீசார்ஜ் செய்ய பலர் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது அதிக டேட்டா, ஓடிடி நன்மைகள் மற்றும் ஒரு வருடம் வேலிடிட்டி தரும் ப்ரிபெய்ட் திட்டத்தை வைத்துள்ளது ஏர்டெல். இங்கே அந்த திட்டத்தின் வேலிடிட்டி மற்றும் நன்மைகள் குறித்த விரிவான தகலல்களை இப்போது பார்க்கலாம்.

ஏர்டெல் ரூ.3999 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 3999 prepaid plan) தான் ஒரு வருடம் வேலிடிட்டி வழங்குகிறது. அதாவது 365 நாட்கள் வேலிடிட்டி இந்த திட்டத்தில் கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தில் தினமும் 2.5ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. எனவே நீங்கள் இந்த ஏர்டெல் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 912.5ஜிபி டேட்டா கிடைக்கும்.
அதேபோல் இந்த திட்டத்தில் தினசரி 2.5 டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறையும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஏர்டெல் ரூ.3999 ப்ரீபெய்ட் திட்டம் ஒரு வருடத்திற்கு ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) சந்தாவை வழங்குகிறது இந்த திட்டம். குறிப்பாக இந்த ஓடிடி நன்மை மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும்.
அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகைஏர்டெல் ரூ.3999 திட்டத்தில் வழங்கப்படுகிறது. இதுதவிர பெர்ப்லெக்ஸிடி ப்ரோ ஏஐ (Perplexity Pro AI), இலவச ஹாலோ டியூன்ஸ் (Hellotunes), அன்லிமிடெட் 5ஜி டேட்டா(unlimited 5g data), தினமும் 100 எஸ்எம்எஸ் போன்ற சலுகைகளை இந்த திட்டம் மூலம் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.3599 திட்டமும் ஒரு வருடம் வேலிடிட்டி வழங்குகிறது. இப்போது இந்த திட்டத்தின் நன்மைகளும் பார்க்கலாம்.
ஏர்டெல் ரூ.3599 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 3599 prepaid plan) தினமும் 2ஜிபி டேட்டா வழங்குகிறது. குறிப்பாக 365 நாட்கள் வேலிடிட்டி இந்த திட்டத்தில் கிடைக்கிறது. எனவே நீங்கள் இந்த ஏர்டெல் திட்டத்தைத் தேர்வு செய்தால் மொத்தம் 730ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறைக்கப்படும்.

அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை ஏர்டெல் ரூ.3599 திட்டத்தில் வழங்கப்படுகிறது. ஆனால் இந்த திட்டத்தில் ஓடிடி நன்மைகள் மட்டும் வழங்கப்படவில்லை என்பத குறிப்பிடத்தக்கது.
இருந்தபோதிலும் தினமும் 100 எஸ்எம்எஸ், அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data), ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes), பெர்ப்லெக்ஸிடி ப்ரோ ஏஐ (Perplexity Pro AI) உள்ளிட்ட நன்மைகள் இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது. குறிப்பாக இந்த திட்டமும் பயனுள்ள வகையில் இருக்கும். அதேபோல் ஏர்டெல் நிறுவனம் விரைவில் பல அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
photo credit: successstory


Click it and Unblock the Notifications








