Airtel போட்ட போடு.. மாதாந்திரம் ரூ.333 போதும்.. 1 வருடத்துக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால், டேட்டா, ஓடிடி சந்தா!
2026ஆம் ஆண்டுக்கு ஒரு மாதம் மட்டுமே இருக்கிறது, இந்த வருடமாவது 365 நாட்களுக்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும் என்று திட்டமிட்டிருக்கும் ஏர்டெல் (Airtel) கஸ்டமர்கள் மாதத்துக்கு ரூ.333 செலவில் கிடைக்கும் இந்த ஒரு வருட திட்டம் (One Year Validity) சரியாக இருக்கும். ஒட்டுமொத்த சலுகைகளும் ஒரே திட்டத்தில் கிடைத்துவிடுகிறது.
தினசரி டேட்டாவுடன் வருடம் முழுவதும் வேலிடிட்டி கொடுக்கும்படி ஏர்டெல்லில் 2 திட்டங்கள் மட்டுமே கிடைக்கின்றன. இதில் அதிக விலைக்கு கிடைக்கும் திட்டமாக ஏர்டெல் ரூ.3999 ரீசார்ஜ் இருக்கிறது. இந்த விலை அதிகம் போல தோன்றும். ஆனால், அதில் கிடைக்கும் சலுகைகள் மற்றும் அதற்காக மாதத்துக்கு ஏற்படும் செலவை பார்த்தால், இது லாபமான திட்டமாகவே இருக்கும்.

12 மாதங்கள் வேலிடிட்டி கொண்ட இந்த திட்டத்துக்கு மாத செலவு ரூ.333 ஆக இருக்கிறது. இந்த விலைக்கு தினசரிக்கு 2.5 ஜிபி டேட்டாவுடன் 30 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டம் இல்லை. ரூ.380 விலைக்கும் மேல் திட்டங்கள் செல்கின்றன. அதுவே வருடாந்திர திட்டத்தை ரீசார்ஜ் செய்யும்போது மாதத்துக்கு ரூ.333 செலவில் பெற்று கொள்ளலாம்.
ஏர்டெல் ரூ 3999 திட்டம் (Airtel Rs 3999 Plan): 365 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும் இந்த திட்டத்துக்கு அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) கொடுக்கப்படும். இந்த டேட்டாவை போலவே வருடம் முழுவதும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) கிடைக்கும். இந்த சலுகைகள் அன்லிமிடெட் சலுகைகளாகும்.
மேலும், நாளொன்றுக்கு 2.5 ஜிபி டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம். இந்த டேட்டா முடிந்து போனால், அதற்கு பிறகு 64 கேபிபிஎஸ் வேகத்தில் ஃபேர் யூசேஜ் பாலிசி டேட்டாவை பயன்படுத்தி கொள்ள முடியும். அதுவே 5ஜி டேட்டா சலுகைகளை பெறும் கஸ்டமர்களாக இருந்தால், இந்த 2.5 ஜிபி மற்றும் 64 கேபிபிஎஸ் ஃபேர் யூசேஜ் பாலிசி டேட்டா தேவைப்படாது.
இந்த சலுகைகளுடன் முக்கியமாக இருக்கும் எஸ்எம்எஸ் சலுகையானது நாளொன்றுக்கு 100 கணக்கில் கொடுக்கப்படும். இதை 365 நாட்களுக்கும் தினசரி வீதம் கஸ்டமர்கள் அனுப்பி கொள்ள முடியும். இந்த நான்கு சலுகைகளுக்கு அடுத்து பிரீமியம் ஓடிடி சந்தா இருக்கிறது. ஜியோஹாட்ஸ்டார் மொபைல் (JioHotstar Mobile) சந்தாவும் கொடுக்கப்படும். இதுவும் வருடாந்திர சந்தாவாகும்.
ஆகவே, இந்த திட்டத்துக்கு கிடைக்கும் 365 நாட்கள் முழுவதும் இந்த ஓடிடி சந்தாவும் கிடைக்கும். அன்லிமிடெட் 5ஜி டேட்டா இதில் கிடைப்பதால், ஓடிடிக்கு டேட்டா பற்றாக்குறை இருக்காது. அடுத்த சலுகைகளை பார்க்கையில், இலவச காலர் டியூன் சலுகை கிடைக்கிறது. இந்த டியூனை 30 நாட்களுக்கு ஒரு முறை கஸ்டமர்கள் மாற்றி கொள்ளலாம் .இதற்கு அடுத்து 2 சலுகைகள் இருக்கின்றன.
ஒன்று வழக்கமாக கிடைக்கும் ஸ்பேம் அலெர்ட் சலுகையாக இருக்கிறது. இந்த திட்டத்தை பெற்ற பிறகு ஏர்டெல் கஸ்டமர்களுக்கு வரும் வாய்ஸ் கால்களிலும், எஸ்எம்எஸ்களிலும் இருக்கும் ஸ்பேம்களை தெரிந்து கொள்ளும்படி இந்த சலுகை கொடுக்கப்படுகிறது. இதற்கு கூடுதலாக எந்த கட்டணமும் வசூலிக்கப்படவில்லை. இறுதி சலுகையாக பெர்ப்லெக்ஸிடி சலுகை கிடைக்கிறது.
இது ப்ரோ சலுகையாக இருக்கிறது. இதை 12 மாதங்கள் பயன்படுத்தலாம். ஆகவே, இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு கிடைக்கும் வேலிடிட்டி நாட்கள் முழுவதும் பெர்ப்லெக்ஸிடி ப்ரோ ஏஐ சலுகையை பயன்படுத்தி கொள்ளலாம். இந்த டேட்டா, வாய்ஸ் கால்கள், ஓடிடி, எஸ்எம்எஸ் சலுகைகளும், காலர் டியூன், ஸ்பேம் அலெர்ட் மற்றும் பெர்ப்லெக்ஸிடி சலுகைளுமே இதில் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








