Home
News

இறங்கி அடித்த Airtel.. மாசத்துக்கு ரூ.333 போதும்.. 365 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ், டேட்டா!

ஜியோ கஸ்டமர்களே மூக்கில் விரல் வைக்கும்படி போட்டி நிறுவனமான ஏர்டெல் (Airtel) மாதத்துக்கு ரூ.333 செலவில் கிடைத்துவந்த வருடாந்திர திட்டத்தில் ஜியோஹாஸ்டார் (JioHotstar) சந்தாவை கொடுக்கிறது. ரூ.499 மதிப்பிலான இந்த சலுகை முற்றிலும் இலவசமாக கிடைக்கிறது. இதுபோக அன்லிமிடெட் வாய்ஸ், தினசரி டேட்டா, 5ஜி டேட்டா போன்ற ஒட்டுமொத்த சலுகைகளும் வருடம் முழுவதும் பயன்படுத்த கிடைக்கின்றன. இந்த ஏர்டெல் ஒரு வருட திட்டத்தின் (Airtel One Year Plan) விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

ஐபிஎல் 2025 (IPL 2025) போட்டிகளை காண்பதற்கு ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா போன் முன்னணி டெலிகாம் நிறுவனங்கள் அதன் கஸ்டமர்களுக்கு அடிமட்ட விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை (Recharge Plan) கொடுக்கின்றன. ஜியோஹாட்ஸ்டார் சந்தாவுடன் கிடைக்கும் இந்த திட்டங்கள் ரூ.100 முதல் தொடங்குகின்றன. ஆனால், டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டார் மற்றும் ஜியோசினிமா இணைந்துவிட்டதால், எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது.

இறங்கி அடித்த Airtel.. மாசத்துக்கு ரூ.333 போதும்.. 365 நாட்கள் சேவை!

இதனால், இப்போதே ஒரு வருடத்துக்காக சந்தாவை பெறுவதற்கு டெலிகாம் கஸ்டமர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். ஏனென்றால், டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டார் மற்றும் ஜியோசினிமா இணைந்து ஓரிரு மாதங்கள் மட்டுமே முடிந்திருப்பதால், இப்போதைக்கு கம்மியான விலையில் சந்தா கிடைக்கும். சில மாதங்கள் கடந்த பிறகு சற்றுவிலையில் மாற்றங்கள் இருக்கலாம். இதனாலேயே வருடத்துக்கு பெற ஆர்வம் ஏற்பட்டுள்ளது.

ஆனால், ஏர்டெல் கஸ்டமர்களுக்கு அந்த தொல்லை இருக்காது. ஏனென்றால், ஏற்கனவே அன்லிமிடெட் 5ஜி டேட்டா, நாளொன்றுக்கு 2.5 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls) போன்ற சலுகைகளை வருடம் முழுவதும் கொடுத்துவந்த திட்டத்தில் இப்போது ஜியோஹாட்ஸ்டார் சந்தா ஒரு வருடத்துக்கு இணைக்கப்பட்டுள்ளது. அதுவும் இலவசமாக கிடைக்கிறது.

ஏர்டெல் ரூ 3999 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 3999 Prepaid Plan): இந்த வருடாந்திர திட்டத்தில் முன்பே சொன்னதை போல ரூ.499 மதிப்பிலான ஜியோஹாட்ஸ்டார் சந்தா கிடைக்கிறது. ஆகவே, மொபைல் சலுகையில் வருடம் முழுவதும் இந்த சந்தாவை பயன்படுத்தி கொள்ளலாம். ஐபிஎல் 2025 போட்டிகளும் இதில் லைவ் ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றன. கிரிக்கெட் ரசிகளுக்கு பக்கா தேர்வாக இருக்கும்.

இதுபோக 365 நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) மற்றும் நாளொன்றுக்கு 2.5 ஜிபி தினசரி டேட்டா (Daily Data) கிடைக்கிறது. ஆகவே, 5ஜி டேட்டா இல்லாமலேயே வருடம் முழுவதும் மொத்தமாக 912.5 ஜிபி டேட்டாவை பயன்படுத்தலாம். மேலும், 2.5 ஜிபி டேட்டாவுக்கு பிறகும் 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா கூடுதலாக கொடுக்கப்படுகிறது.

ஆகவே, இந்த ஏர்டெல் வருடாந்திர திட்டத்தில் ஜியோஹாட்ஸ்டார் சந்தாவுக்கு ஏற்ப குறையில்லாத டேட்டா சலுகை கிடைக்கிறது. இந்த அதிகப்படியான டேட்டாவை போலவே ஒரு வருடம் முழுவதும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகையை இந்த ப்ரீபெய்ட் திட்டம் கஸ்டமர்களுக்கு கொடுக்கிறது.

Take a Poll

மேலும், நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள், அப்பல்லோ 24/7 சர்க்கிள் (Apollo 24/7 Circle) சந்தா மற்றும் ஸ்பேம் கால்கள், ஸ்பேம் எஸ்எம்எஸ்கள் அலெர்ட் கிடைக்கிறது. ப்ரீ-ஹலே டியூன்ஸ் மட்டுமல்லாமல், ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஆப் சலுகையையும் இந்த திட்டம் கொடுக்கிறது. ஆகவே, எப்படி பார்த்தாலும் இந்த திட்டம் அதிகப்படியான சலுகைகளையே கொடுக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Airtel Rs 3999 Plan With 365 Days Validity Unlimited Voice Calls JioHotstar Subscription For 1 Year
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X