ஒரே Airtel ரீசார்ஜ்.. 365 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. 2.5 ஜிபி டேட்டா.. 150 ஜிபி டேட்டா!
ஏர்டெல் (Airtel) நிறுவனத்தில் இருக்கும் ப்ரீபெய்ட் கஸ்டமர்களுக்கு அதிக விலை கொண்ட வருடாந்திர திட்டமாக ரூ.3999 திட்டம் இருக்கிறது. இந்த விலைக்கு ஏற்ப அன்லிமிடெட் 5ஜி டேட்டா முதல் 150 ஜிபி பல்க் டேட்டா வரையில் கிடைக்கிறது. வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ், தினசரி டேட்டா போன்ற வழக்கமாக சலுகைகளும் உள்ளன. இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் முழு சலுகைகளை தெரிந்து கொள்ளலாம்.
இந்த திட்டத்தில் அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) மற்றும் தினசரி டேட்டா சலுகைகள் மட்டுமே கிடைத்து வந்தன. ஆனால், இப்போது பல்க் டேட்டா சேர்க்கப்பட்டுள்ளது. இதனால், 4ஜி கஸ்டமர்களுக்கு அதிக டேட்டா கிடைக்கும். 5ஜி கஸ்டமர்களுக்கு இது தேவைப்படாது. வழக்கம்போல அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம்.

ஏர்டெல் ரூ.3999 திட்ட விவரங்கள் (Airtel Rs 3999 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் 5ஜி டேட்டா கொடுக்கப்படும். இதை 365 நாட்கள் முழுவதும் பயன்படுத்தி கொள்ளலாம். 4ஜி கஸ்டமர்களாக இருந்தால், நாளொன்றுக்கு 2.5 ஜிபி டேட்டா கொடுக்கப்படும். 912.5 ஜிபி டேட்டாவை பயன்படுத்த முடியும்.
இந்த டேட்டா மட்டுமல்லாமல், 150 ஜிபிக்கு பல்க் டேட்டா கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த டேட்டாவுக்கு லிமிட் கிடையாது. 4ஜி வேகத்தில் (4G Speed) முழு டேட்டாவையும் பயன்படுத்தி கொள்ளலாம். நாளொன்றுக்கு கிடைக்கும் 2.5 ஜிபி டேட்டா (2.5 GB Data) முடிந்த பிறகு இதை டேட்டா வவுச்சர் போல பயன்படுத்தி கொள்ளலாம். மேலும், 64 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா (Post Data) கிடைக்கும்.
இப்படி டேட்டா சலுகைகளை வாரி வழங்கப்பட்டு உள்ளது. மற்ற சலுகைகளை பார்க்கையில், வருடம் முழுவதும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) கிடைக்கும். மேலும், நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களை இந்த ஏர்டெல் ரூ.3999 திட்டம் கொடுத்து இருக்கிறது.
இந்த சலுகைகள் போக கூடுதலாக பல்வேறு சலுகைகளும் கிடைக்கின்றன. அடோப் எக்ஸ்பிரஸ் பிரீமியம் (Adobe Express Premium) சந்தா கிடைக்கிறது. இந்த சந்தாவை 12 மாதங்களுக்கு பயன்படுத்தி கொள்ளலாம். இந்த சந்தாவை தனியாக பெற்றால், ரூ.4,000 கொடுத்து பெற வேண்டி இருக்கும். ஆனால், இதில் இலவமாக கொடுக்கப்பட்டு உள்ளது.
மேலும், வழக்கமாக ஏர்டெல் கஸ்டமர்களுக்கு கிடைக்கும் ப்ரீ ஹேலோ டியூன்ஸ் (Free Hello Tunes) கிடைக்கிறது. 12 மாதங்கள் வேலிடிட்டி கிடைப்பதால், 30 நாட்களுக்கு ஒரு ஹேலோ டியூனை மாற்றி கொள்ளலாம். இதுபோக ஸ்பேம் கால் அலர்ட் (Spam Call Alert) கொடுக்கப்பட்டு உள்ளது. இதில் ஸ்பேம் எஸ்எம்எஸ் அலர்ட்டும் (SMS Spam Alert) கொடுக்கப்படுகிறது.
ஆகவே, ஏர்டெல் கஸ்டமர்களுக்கு வரும் இன்கம்மிங் கால்களிலும், எஸ்எம்எஸ்களிலும் இருக்கும் ஸ்பேம்கள் டிடெக்ட் செய்து காண்பிக்கப்படும். இந்த சலுகைகளே ஏர்டெல் ரூ.3999 திட்டத்தில் கொடுக்கப்படுகிறது. ஆனால், இதில் ஓடிடி சந்தா கிடைக்காதது கஸ்டமர்களிடையே அதிருப்தியாக இருக்கிறது. ஏனென்றால், ஜியோவில் (Jio) இதே விலையில் ஜியோ ஹாட்ஸ்டார் (JioHotstar) சந்தா கிடைக்கும்.


Click it and Unblock the Notifications
