Home
News

ஒரே Airtel ரீசார்ஜ்.. மாதம் ரூ.333 போதும்.. 365 நாட்கள் வேலிடிட்டி.. 1 வருட ஓடிடி.. வாய்ஸ் கால்கள்.. டேட்டா!

ஏர்டெல் (Airtel) கஸ்டமர்களுக்கு அதிக விலைக்கு கிடைக்கும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா மற்றும் பிரீமியம் ஓடிடி ஆப்களின் சந்தா கொண்ட 5 திட்டங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம். இதில் 84 நாட்கள் முதல் 365 நாட்கள் வரையில் வேலிடிட்டி மற்றும் ஓடிடி சந்தா கொடுக்கப்படும். இந்த திட்டங்களில் ஒரேவொரு வருடாந்திர திட்டமானது, மாதத்துக்கு ரூ.333 செலவில் தினசரி டேட்டா, வாய்ஸ், ஓடிடி, அன்லிமிடெட் 5ஜி போன்ற ஒட்டுமொத்த சலுகைகளையும் 365 நாட்கள் முழுவதும் கொடுக்கிறது. விவரம் இதோ.

ஏர்டெல் ரூ 3999 திட்ட விவரங்கள் (Airtel Rs 3999 Plan Details): இந்த வருடாந்திர திட்டமானது, மாதத்துக்கு ரூ.133 செலவில் கிடைக்கிறது. இந்த விலைக்கு 365 நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls), நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் மற்றும் 2.5 ஜிபி டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது. 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா மற்றும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா வருகிறது.

ஒரே Airtel ரீசார்ஜ்.. மாதம் ரூ.333 போதும்.. 365 நாட்கள் வேலிடிட்டி!

இந்த சலுகைகள் போக 1 வருடத்துக்கான ஜியோஹாட்ஸ்டார் மொபைல் (JioHotstar Mobile) சந்தாவை பெற்று கொள்ளலாம். ஆகவே, ஒரு வருடம் முழுவதும் ஓடிடி சந்தா மட்டுமல்லாமல், அந்த சந்தாவுக்கு ஏற்ப தினசரி டேட்டா மற்றும் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை இந்த ப்ரீபெய்ட் திட்டம் கொடுக்கிறது. இதற்கு அடுத்து வரும் திட்டங்கள் 84 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கொடுக்கின்றன.

ஏர்டெல் ரூ 1798 திட்ட விவரங்கள் (Airtel Rs 1798 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் 84 நாட்கள் வேலிடிட்டி கிடைத்தாலும், தினசரி கணக்கில் முந்தைய திட்டத்தைவிட அதிக டேட்டாவை பெறலாம். ஆகவே, நாளொன்றுக்கு 3 ஜிபி டேட்டா, 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா மற்றும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகைகள் கிடைக்கிறது. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் வருகிறது.

நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் சலுகைகள் கொடுக்கப்படுகிறது. இந்த 84 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டத்துக்கு அதே நாட்கள் வரையில் நெட்பிளிக்ஸ் பேசிக் (Netflix Basic) சந்தா கொடுக்கப்படுகிறது. இதைவிட அதிக ஓடிடி ஆப்கள் ஒரே திட்டத்தில் வேண்டுமானால், அடுத்து வரும் ஏர்டெல் திட்டம் பக்கா தேர்வாக இருக்கும். இதன் விவரங்களை இப்போது பார்க்கலாம்.

ஏர்டெல் ரூ 1729 திட்ட விவரங்கள் (Airtel Rs 1729 Plan Details): இந்த திட்டத்துக்கு 84 நாட்கள் வேலிடிட்டி, அன்லிமிடெட் வாய்ஸ், 100 எஸ்எம்எஸ், 2 ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா வருகிறது. ஓடிடி சந்தாவை பார்க்கையில், நெட்பிளிக்ஸ் பேசிக், ஜியோஹாட்ஸ்டார் சூப்பர், ஜீ5 பிரீமியம் மற்றும் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளே பிரீமியம் சலுகைகள் வருகின்றன.

ஏர்டெல் ரூ 1199 திட்ட விவரங்கள் (Airtel Rs 1199 Plan Details): இந்த திட்டத்துக்கும் 84 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. ஆனால், 2.5 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் 5ஜி டேட்டா வருகிறது. அன்லிமிடெட் வாய்ஸ், 100 எஸ்எம்எஸ் வருகிறது. அமேசான் பிரைம் லைட் (Amazon Prime Lite) சந்தா மற்றும் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளே பிரீமியம் சந்தாவை 84 நாட்களுக்கு இந்த திட்டம் கொடுக்கிறது.

ஏர்டெல் ரூ 1029 திட்ட விவரங்கள் (Airtel Rs 1029 Plan Details): இந்த திட்டத்துக்கு ஜியோஹாட்ஸ்டார் மொபைல் சந்தா மூன்று மாதங்களுக்கு கிடைக்கிறது. மற்ற சலுகைகளை பார்க்கையில், 2 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் 5ஜி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் 100 எஸ்எம்எஸ்கள் கிடைக்கின்றன. 84 நாட்கள் அல்லது அதற்கு மேல் வேலிடிட்டி கொண்ட ஓடிடி திட்டங்கள் இதுவே.

More from GizBot

Best Mobiles in India

English summary
Airtel Rs 3999 Plan With 365 Days Validity JioHotstar Mobile Check Top 5 Unlimited 5G And OTT Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X