Home
News

Airtel போட்ட போடு.. மாதம் ரூ.333 போதும்.. 365 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ்.. 2.5 ஜிபி டேட்டா!

பார்தி ஏர்டெல் (Bharti Airtel) நிறுவனத்தின் ப்ரீபெய்ட் சிம் கார்டு வைத்து இருக்கும் கஸ்டமர்கள் அதிகப்படியான சலுகைகளை கம்மியான விலைக்கு பெற வேண்டுமானால், கண்ணை மூடிக்கொண்டு மாதத்துக்கு ரூ.333 செலவில் கிடைக்கும் இந்த வருடாந்திர ப்ரீபெய்ட் திட்டத்தை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.

வருடாந்திர திட்டங்கள்:

ஏர்டெல்லில் 4 வருடாந்திர திட்டங்கள் கிடைக்கின்றன. இதில் அதிக விலைக்கு ஏர்டெல் ரூ.3,999 திட்டம் கிடைக்கிறது. இவ்வளவு விலைக்கு கிடைப்பதால், வேறு எந்த திட்டத்திலும் கிடைக்காத சலுகைகளை இந்த ப்ரீபெய்ட் திட்டம் கொடுத்து உள்ளது. 12 மாதங்கள் வேலிடிட்டியை இந்த திட்டம் வழங்குகிறது. ஆகவே, மாத செலவை கணக்கிட்டால் ரூ.333ஆக மட்டுமே இருக்கிறது.

Airtel போட்ட போடு.. மாதம் ரூ.333 போதும்.. 365 நாட்கள் வேலிடிட்டி!

வருடாந்திர திட்டத்தை ரீசார்ஜ் செய்யும்போது, மாத செலவு கம்மியாக இருக்கிறது. வெறும் ஒரு மாதத்துக்கு ரீசார்ஜ் செய்தால், இதே சலுகைகளை ரூ.333 விலைக்கு பெற முடியாது. நாளொன்றுக்கு 2.5 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் 5ஜி டேட்டா போன்ற சலுகைகளும் கிடைக்காது. ஆகவே, எப்போதும் வருடத்துக்கு ரீசார்ஜ் செய்யும்போது, கஸ்டமர்களுக்கு லாபம் கிடைக்கும் என்பதை மறுக்க முடியாது.

ஏர்டெல் ரூ.3,999 திட்டம்:

இந்த ப்ரீபெய்ட் திட்டமானது 365 நாட்கள் வேலிடிட்டியை வழங்குகிறது. ஆகவே, வருடம் முழுவதும் வாய்ஸ் கால்கள், டேட்டா, எஸ்எம்எஸ், ப்ரீ ஹெலோ டியூன்ஸ், ஓடிடி சந்தா மற்றும் அடோப் எக்ஸ்பிரஸ் பிரீமியம் உள்ளிட்ட சலுகைகளை பெற்று கொள்ளலாம். முதலில் வருடம் முழுவதும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்களை (Unlimited Voice Calls) செய்து கொள்ளலாம்.

இதே நாட்களில் தினந்தோறும் 100 அவுட்கோயிங் எஸ்எம்எஸ்களை செய்து கொள்ளலாம். அதேபோல 2.5 ஜிபி டேட்டாவை தினமும் பயன்படுத்தி கொள்ள முடியும். 365 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்பட்டு இருப்பதால், 912 ஜிபி டேட்டா மொத்தமாக பயன்படுத்த முடியும். இந்த டேட்டாவானது 4ஜி வேகத்தில் கிடைக்கிறது. ஆகவே, போஸ்ட் டேட்டாவும் இதற்கு அடங்கும்.

2.5 ஜிபி டேட்டாவுக்கு பிறகு 64 கேபிபிஎஸ் வேகத்தில் டேட்டா தொடர்ந்து கொடுக்கப்படும். ஏர்டெல் நிறுவனத்தின் 5ஜி சேவைகளை பெறும் கஸ்டமர்களாக இருந்தால், அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) கிடைக்கிறது. ஆகவே, நாளொன்றுக்கு கிடைக்கும் 2.5 ஜிபி டேட்டாவை கணக்கில் எடுக்காமலேயே இலவமாக அன்லிமிடெட் 5ஜி டேட்டா கொடுக்கப்படும்.

கூடுதல் சலுகைகள்:

இந்த திட்டத்துக்கு கிடைக்கும் வருடாந்திர வேலிடிட்டி வரையிலும் ஜியோஹாட்ஸ்டார் மொபைல் (JioHotstar Mobile) சந்தா கொடுக்கப்படும். இந்த சந்தாவின் மதிப்பு ரூ.499ஆக இருக்கிறது. இருப்பினும், முற்றிலும் இலவமாக இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கிறது. இதேபோல ரூ.4 மதிப்புள்ள அடோப் எக்ஸ்பிரஸ் பிரீமியம் சந்தாவையும் இந்த வருடாந்திர திட்டம் வழங்கி உள்ளது.

இந்த சந்தாவையும் 12 மாதங்களுக்கு பயன்படுத்தி கொள்ள முடியும். அடுத்து, வழக்கமாக கிடைக்கும் ப்ரீ ஹெலோ டியூன்ஸ் சலுகை கிடைத்துள்ளது. இதைவிட மலிவான விலைக்கு ஏர்டெல் ரூ.3,599 திட்டம் கிடைக்கிறது. இதிலும் 2.5 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், 100 எஸ்எம்எஸ்கள், அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகை வழங்கப்பட்டு உள்ளது.

ஆனால், பிரீமியம் ஓடிடி ஆப்களின் சந்தா கிடைக்காது. இதை விடவும் மலிலான விலைக்கு வருடாந்திர திட்டம் உள்ளது. ஆனால், இதில் தினசரி டேட்டா, அன்லிமிடெட் 5ஜி டேட்டா கிடைக்காது. மொத்தமாகவே 30 ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் கிடைக்கும். இந்த திட்டத்தின் விலை ரூ.2,249ஆக இருக்கிறது. இதில் 3600 எஸ்எம்எஸ்களும் கிடைத்து உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Airtel Rs 3999 Plan With 365 Days Validity 2.5GB Data Unlimited Voice Calls Check Yearly Recharge
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X