ஏர்டெல்லின் ஆட்டம்.. ஒரே திட்டம்.. 1 ஜிபிபிஎஸ் வேகம்.. அன்லிமிடெட் டேட்டா.. 3 ஓடிடி சந்தா!
ஒரே திட்டத்தில் அமேசான் பிரைம், டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டார், நெட்பிளிக்ஸ் போன்ற ஓடிடி தளங்களின் சந்தா மட்டுமல்லாமல், 300 எம்பிபிஎஸ் முதல் 1 ஜிபிபிஎஸ் வரையிலான வேகம் மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் சலுகைகளை கொடுக்கும் ஏர்டெல் பிராட்பேண்ட் திட்டங்களை பற்றி இங்கே பார்க்கப்போகிறோம்.
ஏர்டெல் ரூ 3999 திட்ட விவரங்கள் (Airtel Rs 3999 Plan Details): ஏர்டெல் பிராட்பேண்ட் திட்டங்களிலேயே அதிகப்படியான சலுகைகளை இந்த திட்டம் கொண்டிருக்கிறது. ஏனென்றால், மொபைல் மட்டுமல்லாமல், லேப்டாப், டேப்லெட் போன்ற மல்டிபிள் டிவைஸ்களில் கனெக்ட் செய்து டேட்டாவை பயன்படுத்தும் அளவுக்கு இன்டர்நெட் ஸ்பீடு கொடுக்கப்படுகிறது.

இந்த பிராட்பேண்ட் திட்டத்தை பெற்றால், 1 ஜிபிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டா சலுகை வழங்கப்படுகிறது. அதிகபட்சமாக 3300 ஜிபி டேட்டாவை ஏர்டெல் கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். அதுமட்டுமல்லாமல், அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local) மற்றும் எஸ்டிடி (STD) வாய்ஸ் கால்களை செய்து கொள்ளலாம்.
இதற்காக லேண்ட்லைன் கனெக்சன் (Landline Connection) சலுகையும் கொடுக்கப்படுகிறது. இதுபோக ஏர்டெல் தேங்க்ஸ் (Airtel Thanks) சலுகை கிடைக்கிறது. இந்த பிராட்பேண்ட் திட்டத்தில் ஓடிடி (OTT) மற்றும் விஐபி சர்வீஸ் (VIP Service) சலுகைகள் வழங்கப்படுகின்றன. இந்த ஓடிடியில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar) சந்தா கிடைக்கிறது.
அதோடு அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video)சந்தாவும், நெட்பிளிக்ஸ் பிரீமியம் (Netflix Premium) சந்தாவும் கொடுக்கப்படுகிறது. இதுபோக எக்ஸ்ட்ரீம் பீரிமியம் பேக் (Xstream Premium Pack) சந்தா கொடுக்கப்படுகிறது. இந்த ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பீரிமியம் பேக் சந்தாவின் கீழ் ஈராஸ்நவ் (ErosNow), சோனிலிவ் (SonyLiv), லையன்ஸ்கேட்பிளே (LionsgatePlay) போன்ற சலுகைகள் கிடைக்கிறது.
அதோடு மனோரமா மேக்ஸ் (ManoramaMAX), டிவோ (Divo) மற்றும் ஹங்கமா பிளே (HungamaPlay) உள்ளிட்ட சலுகையையும் பயன்படுத்தி கொள்ளலாம். அதேபோல அப்பல்லோ 24/7 சர்கிள் (Apollo 24|7 Circle) மற்றும் வின்க் மியூசிக் பீரிமியம் (Wynk Music Premium) சந்தா கொடுக்கப்படுகிறது. இப்படி அதிகபட்ச சலுகைகள் இந்த திட்டத்தில் கிடைக்கிறது.
ஏர்டெல் ரூ 1498 திட்ட விவரங்கள் (Airtel Rs 1498 Plan Details): இந்த பிராட்பேண்ட் திட்டத்தில் 300 எம்பிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது. இந்த திட்டத்திலும் அதிகபட்சமாக 3300 ஜிபி டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம். முந்தைய திட்டத்தை போலவே, லேண்ட்லைன் கனெக்சன் கொடுக்கப்படுகிறது.
ஆகவே, அன்லிமிடெட் லோக்கல் மற்றும் எஸ்டிடி கால்கள் கிடைக்கிறது. இந்த பிராட்பேண்ட் திட்டத்தில் அமேசான் பிரைம் வீடியோ, நெட்பிளிக்ஸ் பேஸிக் (Netflix Basic), டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஆகிய ஓடிடி தளங்களின் சந்தா கொடுக்கப்படுகிறது. அதோடு எக்ஸ்ட்ரீம் பீரிமியம் பேக், விஐபி சர்வீஸ், அப்பல்லோ 24/7 சர்கிள் சந்தா கிடைக்கிறது.
அதோடு வின்க் மியூசிக் பீரிமியம் சந்தா கொடுக்கப்படுகிறது. ஒருவேளை ஓடிடி போன்ற பிரீமியம் சலுகைகள் தேவைப்படாமல், அன்லிமிடெட் டேட்டா மட்டும் தேவைப்படும் ஏர்டெல் கஸ்டமர்களுக்கு ரூ 799 விலையில் பக்காவான மற்றொரு பிராட்பேண்ட் திட்டம் இருக்கிறது. இந்த திட்டத்தின் சலுகைகளை இப்போது பார்ப்போம்.
ஏர்டெல் ரூ 799 திட்ட விவரங்கள் (Airtel Rs 799 Plan Details): இந்த திட்டத்தில் 100 எம்பிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது. இந்த திட்டத்தில் லேண்ட்லைன் கனெக்சன் மூலம் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி வாய்ஸ் கால் சலுகைகள் வழங்கப்படுகிறது. அதோடு எக்ஸ்ட்ரீம் பிரீமியம் சலுகை, அப்பல்லோ 24/7 சர்கிள் மற்றும் விங்க் மியூசிக் சலுகை கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








