அடேங்கப்பா Airtel திட்டம்.. தினசரி ரூ.10 போதும்.. OTT சந்தாவுடன் 365 நாளுக்கு ஜமாய்க்கலாம்.. எந்த பிளான்?
ஏர்டெல் (Airtel) நிறுவனம் அதன் வடிக்கையாளர்களுக்கான புதிய நீண்ட நாள் ரீசார்ஜ் திட்டத்தை (long term recharge plan) அறிமுகம் செய்துள்ளது. ஏர்டெல் நிறுவனம் தினசரி வெறும் 10 ரூபாய் செலவில் 365 நாட்களுக்கு ஏகபோக நன்மைகளை வழங்கும் புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை (365 days validity plan) பயன்பாட்டிற்கு கொண்டுவந்துள்ளது. இதில் வாய்ஸ், டேட்டா, SMS போன்ற சேவையுடன் 1 வருட OTT சேனல் சந்தாவையும் வழங்கி மக்களின் கவனத்தை இந்த திட்டம் ஈர்த்து வருகிறது. இந்த புதிய ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டம் பற்றி விபரங்கள் இதோ.
இந்தியாவின் இரண்டாவது முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமாக (telecom company) ஏர்டெல் அதிக வாடிக்கையாளர்களை கொண்டு சேவை வழங்கி வருகிறது. ஜியோ (Jio) நிறுவனத்துடன் இந்திய டெலிகாம் துறையில் சரிக்கு சமமாக நின்று 38 கோடிக்கு அதிகமான வாடிக்கையாளர்களை வைத்து இயங்கிக்கொண்டிருக்கும் இந்தியாவின் மக்கள் விரும்பும் டெலிகாம் நிறுவனம் தான் ஏர்டெல். இத்தகைய நிறுவனம் புதிய 1 வருட ப்ரீபெய்ட் திட்டத்தை (Airtel new 1 year plan) அறிமுகம் செய்துள்ளது.

அடேங்கப்பா Airtel திட்டம்.. தினசரி ரூ.10 போதும்.. OTT சந்தாவுடன் 365 நாள்:
உங்களிடம் ஏர்டெல் சிம் கார்டு (Airtel SIM card) இருக்கிறது என்றால், கட்டாயம் இந்த புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை நீங்கள் கவனிக்க வேண்டும் மக்களே. குறைந்த தினசரி கட்டணத்துடன், 1 வருடம் முழுக்க செல்லுபடியாகும் வேலிடிட்டி கொண்ட திட்டத்தை நீங்கள் தேர்வு செய்ய விரும்பினால், ஏர்டெல் வழங்கும் ஏர்டெல் ரூ. 3999 திட்டம் தான் சிறந்த தேர்வாகும். இந்த திட்டத்தின் விலையை கேட்டதும், இது பெரும்தொகை என்று உங்கள் மனதில் எண்ணம் தோன்றலாம்.
ஆனால், இதனுடன் கிடைக்கும் நன்மைகளை அறிந்தபின்பு, இதன் தினசரி கட்டணத்தை (daily charges) கருத்தில் கொண்டால், இதை விட சிறந்த திட்டம் இந்த வருடம் முழுக்க உங்களுக்கு கிடைக்க வாய்ப்பில்லை என்று நாம் கூறும் (best Airtel plan) அளவிற்குள் Airtel இந்த திட்டத்தை தொகுத்து வழங்கியுள்ளது. ஏர்டெல் 3999 திட்டம் (Airtel 3999 Plan) 365 நாட்களுக்கு செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வருகிறது.
ஏர்டெல் ரூ. 3999 திட்டம் (Airtel Rs 3999 Plan):
இந்த திட்டம் அதன் செல்லுபடியாகும் காலமான 1 வருடம் முழுக்க அணைத்து நெட்வொர்க் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் (unlimited voice calls) நன்மையை வழங்குகிறது. இந்த திட்டம் தினசரி 2.5GB டேட்டா (data) நன்மையை வழங்குகிறது. இந்த ஏர்டெல் 3999 பிளான் (Airtel 3999 Plan) மொத்தமாக 365 நாட்களுக்கு 730GB டேட்டா (total data) நன்மையை தடையின்றி ஹை-ஸ்பீடில் (high speed data) வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த திட்டத்துடன் பயனர்கள் 365 நாட்களுக்கு தினமும் 100 எஸ்எம்எஸ் (SMS) நன்மையையும் பெறுகிறார்கள். இத்துடன் வருடம் முழுக்க 5ஜி வட்டத்தில் 5ஜி மொபைல் பயனர்களுக்கு (5G mobile users in 5G circle) அன்லிமிடெட் 5ஜி டேட்டா (unlimited 5G data) நன்மையையும் இந்த திட்டம் வழங்குகிறது. இந்த அடிப்படை நன்மைகள் தவிர, ஏர்டெல் நிறுவனம் இந்த திட்டத்துடன் 1 வருட OTT சந்தாவையும் வழங்குகிறது.
1 வருட Disney+ Hotstar சந்தா.. கூடுதலாக 12+ OTT சேனல்ஸ்:
ஏர்டேல் 3999 திட்டம் உங்களுக்கு 1 வருடம் செல்லுபடியாகும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar) சந்தாவை வழங்குகிறது. இது தவிர, கூடுதலாக ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் (Airtel Xstream) சேவைக்கான சந்தாவையும் இத்திட்டம் வழங்குகிறது. இதில் 12+ OTT சேனல்களுக்கு மேலான உள்ளடக்கங்களை நீங்கள் 1 வருடம் முழுக்க கண்டு மகிழலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
1 வருடம் முழுக்க இத்தனை நன்மைகளையும் நீங்கள் அனுபவிக்க, தினசரி வெறும் ரூ.10 செலவு செய்தால் போதும் என்பதே இந்த திட்டத்தின் சூப்பர் ஜமாய் அம்சமாகும்.


Click it and Unblock the Notifications








