Airtel: அப்படி போடு.. ரூ.399 ப்ரீபெய்ட் திட்டத்தில் ஆஃபரை வழங்கிய ஏர்டெல்.. உற்சாகத்தில் பயனர்கள்..
ஏர்டெல் நிறுவனம் அவ்வப்போது புதிய திட்டங்கள் மற்றும் சலுகைகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில வட்டங்களில் ரூ.399 ப்ரீபெய்ட் திட்டத்தை மீண்டும் அறிமுகம் செய்துள்ளது ஏர்டெல். அதாவது இந்த ஏர்டெல் திட்டம் ஒவ்வொரு வடத்துக்கும் வெவ்வேறு பலன்களுடன் வழங்கப்படுகிறது.
குறிப்பாக கடந்த மாதம் சில வடங்களில் இந்த திட்டம் அன்லிமிடெட் 4ஜி மற்றும் 5ஜி டேட்டாவுடன் அறிமுகமானது. அதுவும் இப்போது டெல்லி உள்ளிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட வட்டாரங்களில் மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்நிறுவனத்தின் ரூ.399 திட்டம் ஓடிடி பலனுடன் வழங்கப்படுகிறது. இந்த ஓடிடி ரீசார்ஜ் ஆனது ஐபிஎல் 2026 தொடருக்கு ஏற்றவாறு உருவாக்கப்பட்டுள்ளது. சரி இப்போது இந்த ஏர்டெல் திட்டத்தின் பலன்களை விரிவாகப் பார்க்கலாம்.

ஏர்டெல் ரூ.399 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs. 399 prepaid plan) ஆனது 28 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. குறிப்பாக இது நாள் ஒன்றுக்கு ரூ.14.25 என்ற விகிதத்தில் இது அமைந்துள்ளது. இத்துடன் தினமும் 2.5ஜிபி டேட்டா வழங்குகிறது இந்த ஏர்டெல் திட்டம். எனவே இந்த திட்டத்தில் மொத்தமாக 70ஜிபி டேட்டாவை பயன்படுத்த முடியும்.
அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை வழங்குகிறது ஏர்டெல் ரூ.399 ப்ரீபெய்ட் திட்டம். பின்பு இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ், அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data), ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes), ரூ.4000 மதிப்புள்ள adobe எக்ஸ்பிரஸ் பிரீமியம் (adobe express premium) போன்ற நன்மைகள் கிடைக்கின்றன.
இதுதவிர 28 நாட்களுக்கு ஜியோஹாட்ஸ்டார் நன்மையை வழங்குகிறது இந்த ஏர்டெல் ரூ.399 ப்ரீபெய்ட் திட்டம். ஆனால் இந்த திட்டத்தில் உள்ள பலன்கள் வட்டத்துக்கு வட்டம் வேறுபடும். சில வட்டங்களில் வரம்பற்ற தரவு கிடைக்கும் நிலையில், மற்றவற்றில் மேலே குறிப்பிட்ட பலன்களே வழங்கப்படும். மேலும் உங்கள் வட்டத்துக்கான சரியான பலன்களை அறிய ஏர்டெல் தேங்க்ஸ் ஆப் அல்லது ஏர்டெல் இணையதளத்தைப் பார்க்கவும். மேலும் ஏர்டெல் நிறுவனம் வைத்துள்ள ரூ.838 ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மைகளையும் பார்க்கலாம்.
ஏர்டெல் ரூ.838 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 838 prepaid Plan) தினசரி 3ஜிபி டேட்டாவை வழங்குகிறது. அதுவும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும். குறிப்பாக நீங்கள் இந்த ஏர்டெல் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 168ஜிபி டேட்டா கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஏர்டெல் ரூ.838 ப்ரீபெய்ட் திட்டத்தில் 56 நாட்களுக்கு அமேசான் பிரைம் லைட் சந்தா (Amazon Prime Lite Subscription) கிடைக்கும். இதுதவிர ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே (Airtel Xstream Play) சந்தாவும் இந்த திட்டத்தில் உள்ளது.
இந்த ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே சந்தா மூலம் சோனிலிவ் (SonyLIV), லயன்ஸ்கேட் பிளே (Liongates Play), ஈராஸ் நவ் (Eros Now) சன்நெக்ஸ்ட் (SunNXT), சாவ்பால் (Chaupal), ஆஹா (Aha), ஹோய்சோய் (Hoichoi), சோஷியல் ஸ்வாக் (Social Swag) போன்ற 20க்கும் மேற்பட்ட ஓடிடி சந்தாவை பெறமுடியும்.

இதுதவிர ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே சந்தா மூலம் சோனிலிவ் (SonyLIV), லயன்ஸ்கேட் பிளே (Liongates Play), ஈராஸ் நவ் (Eros Now) சன்நெக்ஸ்ட் (SunNXT), சாவ்பால் (Chaupal), ஆஹா (Aha), ஹோய்சோய் (Hoichoi), சோஷியல் ஸ்வாக் (Social Swag) போன்ற 20க்கும் மேற்பட்ட ஓடிடி சந்தாவை பெறமுடியும்.
அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) & ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) நன்மையை வழங்குகிறது இந்த ஏர்டெல் ரூ.838 ப்ரீபெய்ட் திட்டம். அதேபோல் இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ், அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data), ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes), ரூ.4000 மதிப்புள்ள adobe எக்ஸ்பிரஸ் பிரீமியம் (adobe express premium) போன்ற நன்மைகள் கிடைக்கின்றன.


Click it and Unblock the Notifications








