அடிச்சு புடிச்சு ரீசார்ஜ்.. ரூ.399 க்கு இறக்கிய Airtel.. வாய்ஸ் கால்கள்.. 2.5 ஜிபி டேட்டா.. ஓடிடி சந்தா!
ஐபிஎல் போட்டிகளை நேரடி ஒளிப்பரப்பில் பார்க்க ஜியோஹாட்ஸ்டார் சந்தா இருக்கும் திட்டத்தை ரீசார்ஜ் செய்ய வேண்டும். ஏர்டெல்லில் தினசரி டேட்டா அதிகமாகவும், அன்லிமிடெட் 5ஜி டேட்டா கிடைக்கும்படியும் 2 பெஸ்ட் திட்டங்கள் இருக்கின்றன. இவற்றில் 28 நாட்களுக்கு ஜியோஹாட்ஸ்டார் மொபைல் சந்தா கொடுக்கப்படும்.
ஏர்டெல் ரூ.399 திட்ட விவரங்கள் (Airtel Rs 399 Plan Details): நாளொன்றுக்கு 2.5 ஜிபி டேட்டாவை இந்த திட்டம் கொடுத்து உள்ளது. 28 நாட்கள் வேலிடிட்டி கிடைப்பதால், மொத்தமாக 70 ஜிபி டேட்டா பயன்படுத்த கிடைக்கிறது. மேலும், அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை (Unlimited 5G Data) இந்த ப்ரீபெய்ட் திட்டம் கொடுத்து உள்ளது. 4ஜி மற்றும் 5ஜி கஸ்டமர்களுக்கு ஏற்றதாக இருக்கிறது.

64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டாவை இந்த திட்டம் கொடுத்து உள்ளது. இது 2.5 ஜிபி டேட்டா முடிந்த பிறகு பயன்படுத்த கிடைக்கும். டேட்டாவை போலவே நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களை பயன்படுத்தி கொள்ளலாம். அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் வாய்ஸ் கால்கள் (Unlimited Local, STD, Roaming Voice Calls) கொடுக்கப்பட்டு இருக்கிறது.
இந்த திட்டத்துக்கு கிடைக்கும் 28 நாட்கள் வேலிடிட்டி முழுவதும் ஜியோஹாட்ஸ்டார் மொபைல் (JioHotstar Mobile) சந்தாவை கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த ஓடிடி ஆப்பில் ஐபிஎல் போட்டிகள் நேரடி ஒளிப்பரப்பு செய்யப்படுகிறது. ஆகவே, இதற்காகவும் இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். அடோப் எக்ஸ்பிரஸ் பிரீமியம் (Adobe Express Premium) கிடைக்கிறது.
இந்த சந்தாவின் மதிப்பு ரூ.4,000 ஆக இருக்கிறது. இந்த திட்டத்துக்கு 28 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கிடைத்தாலும், அடோப் எக்ஸ்பிரஸ் பிரீமியம் சந்தாவை 12 மாதங்களுக்கு பயன்படுத்தலாம். மேலும், ப்ரீ ஹேலோ டியூன்ஸ் (Free Hello Tunes) சலுகையை கொடுத்து இருக்கிறது. 28 நாட்களுக்கு ஓடிடி மற்றும் அதிக டேட்டாவுக்கு சரியான தேர்வாக இருக்கிறது.
இதைவிட கம்மியான விலைக்கு ஜியோஹாட்ஸ்டார் மொபைல் சந்தா வேண்டுமானால், மற்றொரு திட்டம் இருக்கிறது. இது கிட்டத்தட்ட முந்தைய திட்டத்தின் சலுகைகள் மொத்தத்தையும் கொடுக்கும். ஆனால், தினசரி டேட்டா மட்டும் 500 எம்பி குறைவாக கிடைக்கும். இருப்பினும், விலையில் பெரிய மாற்றம் இருக்காது. இந்த திட்டத்தை பார்க்கலாம்.
ஏர்டெல் ரூ.398 திட்ட விவரங்கள் (Airtel Rs 398 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கும் முந்தைய திட்டத்தை போலவே 28 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. இந்த நாட்களில் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை கொடுத்து உள்ளது. மேலும், நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டாவையும் கொடுத்து உள்ளது. ஆகவே, வேலிடிட்டி முழுவதும் 56 ஜிபி டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம்.
64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டாவும் கிடைக்கிறது. மற்ற சலுகைகள் ஒரே மாதிரியாகவே இருக்கின்றன. அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் வாய்ஸ் கால்கள் மற்றும் நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களை கொடுத்து உள்ளது. அதேபோல முந்தைய திட்டத்தில் கிடைத்த ஜியோஹாட்ஸ்டார் மொபைல் சந்தா கொடுக்கப்பட்டு உள்ளது.
இந்த சந்தாவை 28 நாட்களுக்கு பயன்படுத்தி கொள்ளலாம். மேலும், அடோப் எக்ஸ்பிரஸ் பிரீமியம் சந்தாவை 12 மாதங்களுக்கு பயன்படுத்தலாம். ப்ரீ ஹெலோ டியூன்ஸ் சலுகையும் கொடுக்கப்பட்டு உள்ளது. கூடுதலாக ஸ்பேம் அலெர்ட் சலுகையும் கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த சலுகைகளுக்கு ஏற்ப விலையும் இருக்கிறது. ப்ரீபெய்ட் கஸ்டமர்கள் தேவைக்கு ஏற்ப ரீசார்ஜ் செய்யலாம்.


Click it and Unblock the Notifications








