Home
News

ஜியோவின் ரூ.399/- பயனர்கள் பாவம்; ஏர்டெல் ரூ.399/-ல் அதிரடி திருத்தம்.!

அதென்ன திருத்தம்.? ஏர்டெல் ரூ.399/-ன் தற்போதைய நன்மைகள் என்ன.? அதன் பழைய நன்மைகள் என்ன.? ஜியோவின் பிரபல மிட்-ரேன்ஜ் ரீசார்ஜ் திட்டங்களுடன் ஒப்பிடட்டால், எது சிறந்த சேவையை வழங்கும்.?

By Muthuraj

இந்தியாவின் மிகப்பெரிய டெலிகாம் நிறுவனமான பார்தி ஏர்டெல் மீண்டும் ரிலயன்ஸ் ஜியோவுக்கு எதிரான மேலுமொரு அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது. பெரும்பாலான பயனர்களின் மிட்-ரேன்ஜ் ரீசார்ஜ் தொகையாகிப்போன ரூ.399/- திட்டத்தில் ஏர்டெல் நிறுவனம் அட்டகாசமான திருத்தத்தை அறிவித்துள்ளது.

ஜியோவின் ரூ.399/- பயனர்கள் பாவம்;  ஏர்டெல் ரூ.399/-ல் அதிரடி திருத்தம்

அதென்ன திருத்தம்.? ஏர்டெல் ரூ.399/-ன் தற்போதைய நன்மைகள் என்ன.? அதன் பழைய நன்மைகள் என்ன.? ஜியோவின் பிரபல மிட்-ரேன்ஜ் ரீசார்ஜ் திட்டங்களுடன் ஒப்பிடட்டால், எது சிறந்த சேவையை வழங்கும்.? போன்ற பல கேள்விகளுக்கான பதில்கள் இதோ.!

84 நாட்களுக்கு செல்லுபடி

84 நாட்களுக்கு செல்லுபடி

நேற்றுவரை 70 நாட்கள் என்கிற செல்லுபடி காலத்தை வழங்கிய பார்தி ஏர்டெல் ரூ.399/- திட்டமானது இனி ரீசார்ஜ் செய்த தேதி முதல் 84 நாட்களுக்கு செல்லுபடியாகும் வண்ணம் அதன் நன்மைகளை வழங்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர், தேசிய, ரோமிங்

உள்ளூர், தேசிய, ரோமிங்

இதன் நன்மைகளை பற்றி தெரியாதோர்களுக்கு, ரூ.399/- கட்டணத் திட்டமானது ஒரு நாளைக்கு 1 ஜிபி அளவிலான டேட்டா, நாள் ஒன்றிற்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் உள்ளூர், தேசிய, ரோமிங் உட்பட வரம்பற்ற குரல் அழைப்புகள் ஆகிய நன்மைகளை வழங்குமென்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த இரண்டு நாட்களில்

அடுத்த இரண்டு நாட்களில்

ஏர்டெல் இந்த மாற்றத்தை, இப்போதுவரையிலாக சில வட்டாரங்களில் மட்டுமே செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. அதாவது இந்த திருத்தியமைக்கப்பட்ட சலுகையை தேர்ந்தெடுக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டுமர் கிடைக்குமென்று பொருள். எவ்வாறாயினும், அடுத்த இரண்டு நாட்களில் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் இந்த திட்டம் உருட்டப்படுமென நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

3ஜி / 4ஜி டேட்டா

3ஜி / 4ஜி டேட்டா

நேற்று ஏர்டெல் நிறுவனம் அதன் ரூ.149/-ஐ திருத்தியதையும் குறிப்பிட விரும்புகிறோம் இனி ஏர்டெல் ரூ.149/- ஆனது வரம்பற்ற குரல் அழைப்பு (ரோமிங் அழைப்பு உட்பட), ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் 1 ஜிபி அளவிலான 3ஜி / 4ஜி டேட்டாவை மொத்தம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் வண்ணம் வழங்கும்.

ஜியோ பாணியிலான திட்டங்கள்

ஜியோ பாணியிலான திட்டங்கள்

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோவின் திட்டங்களுடன் போட்டியிடும் கட்டணத்திட்டங்கள் தொடர்ச்சியான முறையில் களமிறக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக பார்தி ஏர்டெல், வோடபோன் மற்றும் ஐடியா செல்லுலார் ஆகிய நிறுவனங்களிடம் இருந்து ஜியோ பாணியிலான திட்டங்கள் அறிமுகம் அல்லது திருத்தங்களுக்கு உள்ளாகின்றன.

சமன்

சமன்

ஆனால் ஏர்டெல் நிறுவனமோ அதன் ரூ.399/- நிகழ்த்தியுள்ள சமீபத்திய திருத்தத்தால் ரிலையன்ஸ் ஜியோவிற்கு மிக எளிதாக சவாலிடுகிறது. ஏனெனில் திருத்தப்பட்ட பார்தி ஏர்டெல் ரூ.399/- ஆனது ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.399/- திட்டத்தின் நன்மைகளை சமன் செய்துள்ளது.

செல்லுபடி

செல்லுபடி

ரிலையன்ஸ் ஜியோவின் திருத்தப்பட்ட ரூ.399/- திட்டமானது, ஒரு நாளைக்கு 1ஜிபி அளவிலான டேட்டாவுடன், வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகிய நன்மைகளை வழங்குகிறது. இந்த திட்டம் ரிச்சார்ஜ் செய்யப்பட்ட தேதியிலிருந்து 84 நாட்களுக்கு செல்லுபடியாகும்.

ஜியோ ரூ.399

ஜியோ ரூ.399

ஒப்பீட்டில் ஜியோவின் ஒரு "தற்காலிக" சிறப்பு என்னவென்றால், அதன் ரூ.399/- ஆனது ஒரு திறந்தவெளி சந்தை திட்டமாக இருக்கிறது, அதாவது எந்தவொரு ஜியோ ப்ரீபெய்ட் வாடிக்கையாளரும் இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்யலாம். மேலும் பல டெலிகாம் அப்டேட்ஸ்களுக்கு தமிழ் கிஸ்பாட் வலைத்தளத்துடன் இணைந்திருங்கள்.

Best Mobiles in India

English summary
Airtel Rs 399 plan revised to now offer 1GB data, unlimited calls for 84 days to take on Jio. Read more about this in Tamil Gizbot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X