Home
News

வெறும் 1 ரூபாய் கூடுதலாக செலுத்தினால் 14ஜிபி டேட்டா.. ஏர்டெல் ரீசார்ஜ் செய்யும் முன் இதை கவனிங்க..

கடந்த சில மாதங்களில் ஏர்டெல் நிறுவனம் பட்ஜெட் விலையில் அதிகமான ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. அதுவும் ஓடிடி சந்தாவுடன் கூடிய ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்வதில் ஏர்டெல் நிறுவனம் அதிக ஆர்வம் காட்டுகிறது. குறிப்பாக சில ப்ரீபெய்ட் திட்டங்களில் ஜியோவை விட அதிக நன்மைகளை வழங்குகிறது ஏர்டெல்.

சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது நேற்று ஏர்டெல் நிறுவனம் புதிய ரூ.399 ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்தது. அதேபோல் ஏர்டெல் நிறுவனத்திடம் ஏற்கனவே ரூ.398 ப்ரீபெய்ட் திட்டமும் உள்ளது. இப்போது இந்த இரண்டு ப்ரீபெய்ட் திட்டங்களில் உள்ள வித்தியாசம் என்ன? என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது? மற்றும் எதைத் தேர்வு செய்வது நல்லது என்பதை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

வெறும் 1 ரூபாய் கூடுதலாக செலுத்தினால் 14ஜிபி டேட்டா..

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.399 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 399 prepaid plan) தினசரி 2.5ஜிபி டேட்டாவை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் 28 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. எனவே ஏர்டெல் ரூ.399 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 70ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். குறிப்பாக இந்த திட்டத்தில் தினசரி 2.5ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறையும்.

அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) & ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) நன்மையை வழங்குகிறது ஏர்டெல் ரூ.399 ப்ரீபெய்ட் திட்டம். அதேபோல் 28 நாட்களுக்கு ஜியோ ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவும் (Jio Hotstar Mobile subscription) இந்த திட்டத்தில் கிடைக்கிறது

அதேபோல் தினமும் 100 எஸ்எம்எஸ், ஹலோ டியூன்ஸ் (Hello Tunes), பெர்ப்லெக்ஸிடி ப்ரோ ஏஐ (Perplexity Pro AI), அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) உள்ளிட்ட நன்மைகள் இந்த ஏர்டெல் ரூ.399 ப்ரீபெய்ட் திட்டம் மூலம் பெறமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏர்டெல் ரூ.398 ப்ரீபெய்ட் திட்டம் (airtel rs 398 Prepaid plan) தினசரி 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டம் 28 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. எனவே நீங்கள் ஏர்டெல் ரூ.398 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 56ஜிபி டேட்டா கிடைக்கும். பின்பு இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.

28 நாட்களுக்கு டிஸ்னி+ ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar) இலவச சந்தா வழங்குகிறது ஏர்டெல் ரூ.398 ப்ரீபெய்ட் திட்டம். அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை இந்த திட்டத்தில் கிடைக்கும்.

வெறும் 1 ரூபாய் கூடுதலாக செலுத்தினால் 14ஜிபி டேட்டா..

இதுதவிர பெர்ப்லெக்ஸிடி ப்ரோ ஏஐ (Perplexity Pro AI), தினமும் 100 எஸ்எம்எஸ், அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data), ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes), உள்ளிட்ட சலுகைகளை வழங்குகிறது ஏர்டெல் ரூ.398 ப்ரீபெய்ட் திட்டம்.

எதை தேர்வு செய்வது நல்லது? ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.399 மற்றும் ரூ.398 ப்ரீபெய்ட் திட்டங்கள் ஒரே மாதிரியான வேலிடிட்டி மற்றும் ஓடிடி நன்மைகளை வழங்குகின்றன. ஆனால் ரூ.399 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது அதிக டேட்டா நன்மையை வழங்குகிறது. அதாவது 1 ரூபாய் கூடுதலாகச் செலவு செய்தால் 14ஜிபி டேட்டா கிடைக்கிறது. எனவே ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.399 ப்ரீபெய்ட் திட்டத்தைத் தேர்வு செய்வது நல்லது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Airtel Rs.399 and Rs.398 prepaid plans benefits: Which one is better to choose?
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X