Home
News

Airtel ரீசார்ஜ் பண்ண போறீங்களா? தினமும் 3GB டேட்டா, OTT, 84 நாள் வேலிடிட்டி.. அள்ளி தரும் மூன்று திட்டங்கள்..

ஜியோ (Jio) நிறுவனத்துக்குப் போட்டியாக அவ்வப்போது புதிய திட்டங்கள் மற்றும் சலுகைகளை அறிவித்து வருகிறது ஏர்டெல் (Airtel) நிறுவனம். குறிப்பாக ஜியோவை விட ஏர்டெல் நிறுவனம் சில ப்ரீபெய்ட் திட்டங்களில் கூடுதல் சலுகைகள் வழங்குகிறது. எனவே தான் ஏர்டெல் திட்டங்களில் ரீசார்ஜ் செய்ய பயனர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

சரி இப்போது சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது பட்ஜெட் விலையில் அதிக நன்மைகளைத் தரும் மூன்று ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது ஏர்டெல் நிறுவனம். இங்கே அந்த திட்டங்களைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

Airtel ரீசார்ஜ் பண்ண போறீங்களா? அள்ளி தரும் மூன்று திட்டங்கள்..

ஏர்டெல் ரூ.398 ப்ரீபெய்ட் திட்டம் (airtel rs 398 Prepaid plan) தினசரி 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. மேலும் 28 நாட்கள் வேலிடிட்டி இந்த திட்டத்தில் கிடைக்கிறது. எனவே நீங்கள் இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 56ஜிபி டேட்டா கிடைக்கும். பின்பு இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறையும். அதேபோல் 28 நாட்களுக்கு டிஸ்னி+ ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar) இலவச சந்தா வழங்குகிறது இந்த திட்டம்.

அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை இந்த ஏர்டெல் ரூ.398 ப்ரீபெய்ட் திட்டத்தில் உள்ளது. பின்பு தினமும் 100 எஸ்எம்எஸ், அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data), விங்க் மியூசிக் ( Wynk Music), ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes), உள்ளிட்ட நன்மைகளும் இந்த திட்டத்தில் உள்ளன.

ஏர்டெல் ரூ.838 ப்ரீபெய்ட்திட்டம் (Airtel Rs 838 Plan Details) தினமும் 3ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக 56 நாட்கள் வேலிடிட்டி இந்த திட்டத்தில் கிடைக்கிறது. எனவே நீங்கள் ஏர்டெல் ரூ.838 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 168ஜிபி டேட்டா கிடைக்கும் என்பது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் 56 நாட்களுக்கு அமேசான் பிரைம் மெம்பர்ஷிப் (amazon prime membership) சந்தா வழங்குகிறது ஏர்டெல் ரூ.838 திட்டம். இதுதவிர ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே (Airtel Xstream Play) சந்தாவும் இந்த திட்டத்தில் உள்ளது. குறிப்பாக இந்த எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே சந்தா மூலம் 22 ஓடிடி ஆப்ஸ்களை பயன்படுத்த முடியும். சுருக்கமாகக் கூறவேண்டும் என்றால் அதிக ஓடிடி நன்மைகளை வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம்.

மேலும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை ஏர்டெல் ரூ.838 திட்டத்தில் உள்ளது. பின்பு தினமும் 100 எஸ்எம்எஸ், அன்லிமிடெட் 5ஜி தரவு (Unlimited 5G Data), விங்க் மியூசிக் ( Wynk Music), ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes), அப்பல்லோ 24/7 சர்க்கிள் (apollo 24/7 circle) உள்ளிட்ட நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கும்.

Airtel ரீசார்ஜ் பண்ண போறீங்களா? அள்ளி தரும் மூன்று திட்டங்கள்..

ஏர்டெல் ரூ.979 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 979 prepaid plan) தினமும் 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. 84 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம். எனவே நீங்கள் இந்த ஏர்டெல் ரூ.979 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 168ஜிபி டேட்டா கிடைக்கும். பின்பு ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே (யுசைவநட ஓளவசநயஅ ீடயல) சந்தா இந்த திட்டத்தில் கிடைக்கிறது.

குறிப்பாக அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) & ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) நன்மையை வழங்குகிறது இந்த ஏர்டெல் ரூ.979 ப்ரீபெய்ட் திட்டம். மேலும் தினமும் 100 எஸ்எம்எஸ், அப்பல்லோ 24/7 சர்க்கிள் (apollo 24/7 circle), விங்க் மியூசிக் (Wynk Music), ஹலோ டியூன்ஸ் (Hello Tunes), அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) உள்ளிட்ட நன்மைகள் இந்த திட்டம் மூலம் பெறமுடியும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Airtel Rs 398, Rs 838 And Rs 979 prepaid plans offer more data and unlimited calls: check details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X