Airtel சிம் யூஸ் பண்றீங்களா? 84 நாள் வேலிடிட்டி, OTT, தினமும் 3ஜிபி டேட்டா.. மிஸ் பண்ணக்கூடாத 3 திட்டங்கள்..
ஏர்டெல் (Airtel) நிறுவனம் இப்போதும் பட்ஜெட் விலையில் அதிக சலுகைகள் தரும் ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது. அதுவும் சில திட்டங்களில் ஜியோ நிறுவனத்தை விட அதிக பலன்களை வழங்குகிறது ஏர்டெல். எனவே தான் ஏர்டெல் நிறுவனத்தின் ப்ரீபெய்ட் திட்டங்களில் ரீசார்ஜ் செய்ய பலர் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது கம்மி பட்ஜெட்டில் அதிக டேட்டா மற்றும் அன்லிமிடெட் சலுகைகள் வழங்கும் மூன்று ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது ஏர்டெல். இங்கே அந்த திட்டங்களின் விலை மற்றும் நன்மைகளைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.979 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 979 prepaid plan) ஆனது தினசரி 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக 84 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம். எனவே நீங்கள் இந்த ஏர்டெல் ரூ.979 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 168ஜிபி டேட்டா கிடைக்கும். பின்பு ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே (airtel xstream play)சந்தா இந்த திட்டத்தில் கிடைக்கிறது.
இந்த ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே மூலம் 22 ஓடிடி ஆப்களை பயன்படுத்த முடியும். பின்பு தினமும் 100 எஸ்எம்எஸ், ரிவார்ட்ஸ்மினி சந்தா (Rewards Mini Subscription), ஹலோ டியூன்ஸ் (Hello Tunes), அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) உள்ளிட்ட நன்மைகள் இந்த திட்டம் மூலம் பெறமுடியும். மேலும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) & ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) நன்மையை வழங்குகிறது ஏர்டெல் ரூ.979 ப்ரீபெய்ட் திட்டம்.
ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.449 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel rs 449 prepaid Plan) தினமும் 3ஜிபி டேட்டா வழங்கும். மேலும் 28 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது இந்த திட்டம். எனவே நீங்கள் ரூ.449 ப்ரீபெய்ட் திட்டத்தை தேர்வு செய்தால் மொத்தம் 84ஜிபி டேட்டா கிடைக்கும். பின்பு அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை வழங்குகிறது இந்த திட்டம்.
இந்த ஏர்டெல் ரூ.449 ப்ரீபெய்ட் திட்டத்தில் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே (Airtel Xstream Play) சந்தா வழங்கப்படுகிறது. குறிப்பாக இதன் மூலம் சோனிலிவ் (SonyLIV), மனோரமா மேக்ஸ் (Manorama Max), லயன்ஸ்கேட் பிளே (Lionsgate Play) போன்ற 22 ஓடிடி ஆப்களை பயன்படுத்த முடியும்.
இதுதவிர தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது இந்த ஏர்டெல் ரூ.449 ப்ரீபெய்ட் திட்டம். மேலும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data), ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes), உள்ளிட்ட நன்மைகள் இந்த ஏர்டெல் திட்டத்தில் கிடைக்கிறது.
ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.398 ப்ரீபெய்ட் திட்டம் (airtel rs 398 Prepaid plan) தினமும் 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டம் 28 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. எனவே நீங்கள் ஏர்டெல் ரூ.398 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 56ஜிபி டேட்டா கிடைக்கும். பின்பு இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறையும்.
குறிப்பாக 28 நாட்களுக்கு டிஸ்னி+ ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar) இலவச சந்தா வழங்குகிறது ஏர்டெல் ரூ.398 ப்ரீபெய்ட் திட்டம். அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை இந்த திட்டத்தில் உள்ளது. இதுதவிர தினமும் 100 எஸ்எம்எஸ், அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data), ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes), உள்ளிட்ட பல சலுகைகளை வழங்குகிறது இந்த திட்டம்.


Click it and Unblock the Notifications








