Home
News

ஆடிப்போன அம்பானி.. 3 Airtel திட்டங்களில் இலவச JioHotstar சந்தா சேர்ப்பு.. அதுவும் 1 வருடம் வரை!

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் முக்கிய ஆன போட்டியாளர் ஆன பார்தி ஏர்டெல் (Airtel) நிறுவனமானது, தனது சேவையின் கீழ் கிடைக்கும் 3 திட்டங்களில் இலவச ஜியோஹாட்ஸ்டார் சந்தாவை சேர்த்துள்ளது. உடனே ஏன், எதற்கு, எப்படி என்று குழப்பம் அடைய வேண்டாம்!

முன்னதாக இந்த 3 திட்டங்களும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தாவை வழங்கின. இப்போது டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் இயங்குதளமானது ஜியோ ஹாட்ஸ்டாராக புதுப்பிக்கப்பட்டுள்ளது மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மற்றும் ஜியோ சினிமா ஆகிய இரண்டின் கன்டென்ட்களையும் ஒரே தளத்தின் கீழ் வழங்குகிறது.

3 Airtel திட்டங்களில் இலவச JioHotstar சந்தா சேர்ப்பு!

ஆகையால் ஏர்டெல் நிறுவனமானது வேறு வழி இல்லாமல், முன்னதாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தாவை வழங்கிய 3 திட்டங்களில் இப்போது ஜியோஹாட்ஸ்டார் சந்தாவை வழங்குகிறது. அதென்ன திட்டங்கள்? ஏர்டெல்லை போலவே ஜியோவும் அதன் திட்டங்களில் இலவச ஜியோஹாட்ஸ்டார் சந்தாவை சேர்த்திருக்க வேண்டுமே.. அது எந்தெந்த திட்டங்கள்? இதோ விவரங்கள்:

எந்தெந்த ஏர்டெல் திட்டங்களின் கீழ் ஜியோஹாட்ஸ்டார் சந்தா இலவசமாக கிடைக்கும்? இந்த பட்டியலில் முதலில் இருப்பது ரூ.3999 திட்டமாகும். இது ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் மிகவும் விலையுயர்ந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் ஆகும். தற்போது இந்த திட்டம் 365 நாட்களுக்கு இலவச ஜியோஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவுடன் வருகிறது

ரூ.3,999-ன் மற்ற நன்மைகளை பொறுத்தவரை இது அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், அன்லிமிடெட் 5ஜி டேட்டா, டெய்லி 2.5ஜிபி 4ஜி டேட்டா, தினமும் 100 இலவச எஸ்எம்எஸ்கள், ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே சந்தா, அப்பல்லோ 24|7 மற்றும் இலவச ஹெலோட்யூன்ஸ் ஆகியவைகளை 365 நாட்கள் என்கிற வேலிடிட்டியின் கீழ் வழங்கும்.

இந்த பட்டியலில் உள்ள இரண்டாவது திட்டம் ரூ.1029 ரீசார்ஜ் ஆகும். இது அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், அன்லிமிடெட் 5ஜி டேட்டா, டெய்லி 2ஜிபி 4ஜி டேட்டா, தினமும் 100 இலவச எஸ்எம்எஸ்கள், ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே சந்தா, ரிவார்ட்ஸ்மினி சந்தா, அப்பல்லோ 24|7 மற்றும் இலவச ஹெலோட்யூன்ஸ் ஆகியவைகளை 84 நாட்கள் என்கிற வேலிடிட்டியின் கீழ் வழங்கும். இதுவும் தற்போது 3 மாதங்களுக்கான ஜியோஹாட்ஸ்டார் மொபைல் சந்தா வுடன் வருகிறது.

கடைசியாக ரூ.398 ரீசார்ஜ் உள்ளது. இது அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், அன்லிமிடெட் 5ஜி டேட்டா, டெய்லி 2ஜிபி 4ஜி டேட்டா, தினமும் 100 இலவச எஸ்எம்எஸ்கள் மற்றும் இலவச ஹெலோட்யூன்ஸ் ஆகியவைகளை 28 நாட்கள் என்கிற வேலிடிட்டியின் கீழ் வழங்கும். இதன்கீழ் 28 நாட்களுக்கான ஜியோஹாட்ஸ்டார் மொபைல் சந்தா கிடைக்கிறது.

எந்தெந்த ஜியோ திட்டங்களின் கீழ் ஜியோஹாட்ஸ்டார் சந்தா இலவசமாக கிடைக்கும்? ஜியோவின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின் படி, 1 ப்ரீபெய்ட் திட்டம், 5 ஜியோ ஃபைபர் திட்டங்கள் மற்றும் 3 ஜியோ ஏர்ஃபைபர் திட்டங்கள் என மொத்தம் 9 ஜியோ ரீசார்ஜ்களுடன் ஜியோஹாட்ஸ்டார் சந்தா முற்றிலும் இலவசமாக கிடைக்கும்.

ரிலையன்ஸ் ஜியோ அதன் ரூ.949 ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மைகளில் ஜியோஹாட்ஸ்டார் சந்தாவையும் சேர்த்துள்ளது. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், டெய்லி 100 இலவச எஸ்எம்எஸ், அன்லிமிடெட் 5ஜி டேட்டா, ஒரு நாளைக்கு 2ஜிபி டேட்டா, ஜியோ டிவி, ஜியோ க்ளவுட் ஆகிய நன்மைகளுடன் சேர்த்து, இனிமேல் இது 3 மாதங்களுக்கான ஜியோஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவையும் வழங்கும். இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும்.

இதே போல 150 எம்பிபிஎஸ் இண்டர்நெட் ஸ்பீடின் கீழ் வரும் ஜியோஃபைபர் ரூ.999 திட்டம், 300 எம்பிபிஎஸ் இண்டர்நெட் ஸ்பீடின் கீழ் வரும் ஜியோஃபைபர் ரூ.1,499 திட்டம், 500 எம்பிபிஎஸ் இண்டர்நெட் ஸ்பீடின் கீழ் வரும் ஜியோஃபைபர் ரூ.2,499 திட்டம், 1ஜிபிபிஎஸ் இண்டர்நெட் ஸ்பீடின் கீழ் வரும் ஜியோஃபைபர் ரூ.3,999 மற்றும் ரூ.8,499 ஆகிய திட்டங்களிலும் ஜியோஹாட்ஸ்டார் சந்தாவும் இலவசமாக கிடைக்கும்.

மேலும் 1000ஜிபி டேட்டா, 30எம்பிபிஎஸ் ஸ்பீட் மற்றும் இலவச வாய்ஸ் கால்கள் மற்றும் 800 டிவி சேனல்கள் உடன் வரும் ஜியோ ஏர்ஃபைபர் ரூ.599 திட்டம் மற்றும் 100 எம்பிபிஎஸ் என்கிற அளவிலான இண்டர்நெட் ஸ்பீட்டின் கீழ் 1000 ஜிபி டேட்டா, இலவச வாய்ஸ் கால்கள், 800 டிவி சேனல்கள் உடன் வரும் ஜியோ ஏர்ஃபைபர் ரூ.899 மற்றும் ரூ.1199 திட்டங்களிலும் கூட ஜியோஹாட்ஸ்டார் சேர்க்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Airtel Rs 398 Rs 1029 Rs 3999 Recharge Plans Now Offer Free JioHotstar Subscription
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X