Home
News

Airtel பக்கம் கூட்டம் கூடுது.. பட்ஜெட்ல ஒரு பிளான்.. ரூ.400 கூட இல்லை ஆனா ஓஹோனு நன்மை.. எந்த திட்டம்?

இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களில் (India's leading telecom industries) ஒரு டெல்கோ நிறுவனமான ஏர்டெல் (Airtel) நிறுவனம் தற்போது அதன் வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்கும் விதமாக புதிய ஏர்டெல் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை (Airtel new prepaid recharge plan) பட்ஜெட் செக்மென்ட் கீழ் அறிமுகம் செய்துள்ளது. ரூ. 400 விலைக்குள் இந்த புதிய திட்டத்தை அறிமுகம் (Airtel plan under Rs 400) செய்து, இத்திட்டத்துடன் வாய்ஸ் (voice), எஸ்எம்எஸ் (SMS), டேட்டா (data) மட்டுமின்றி OTT நன்மைகளையும் வழங்கியுள்ளது. இதனால் ஏர்டெல் பக்கம் கூட்டம் குவிய துவங்கியுள்ளது.

ஜியோ (Jio) நிறுவனத்துடன் நேருக்கு நேர் சமமான ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்து, டெலிகாம் துறையில் நடக்கும் போட்டியில் நீண்ட காலமாக நிலைத்து நிற்கும் மிகவும் உறுதியான ஒரு தொலைத்தொடர்பு நிறுவனம் என்றால் அது ஏர்டெல் என்று தாராளமாக கண்களை மூடிக்கொண்டு கூட நாம் கூறலாம். அத்தகைய உறுதியான நிறுவனம் தற்போது பட்ஜெட் பிரியர்களை குறிவைத்து புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

Airtel பக்கம் கூட்டம் கூடுது.. பட்ஜெட்ல ஒரு பிளான்.. ரூ.400 கூட இல்லை

Airtel பக்கம் கூட்டம் கூடுது.. பட்ஜெட்ல ஒரு பிளான்.. விலை ரூ.400 கூட இல்லை:

இந்த புதிய ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டமானது ரூ. 400 விலைக்குள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் யாருமே எதிர்பார்த்திடாத நன்மைகளை ஏர்டெல் நிறுவனம் பேக் செய்து, அள்ளி கொடுத்திருக்கிறது. நாம் இங்கு பேசிக்கொண்டிருக்கும் திட்டமானது, ஏர்டெல் ரூ. 398 திட்டம் (Airtel Rs 398 plan) என்ற அடையாளத்துடன் ஏர்டெல் தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த திட்டம் பட்ஜெட் விலையில் சிறந்த நன்மைகளை எதிர்பார்க்கும் வடிக்கையாளர்களுக்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஏர்டெல் ரூ. 398 பிளான் (Airtel Rs 398 plan) திட்டம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வருகிறது. இந்த திட்டம் தினசரி 2GB ஹை-ஸ்பீட் டேட்டா நன்மையை வழங்குகிறது. 28 நாட்களுக்கு 2GB டேட்டா என்ற விதத்தில் இந்த திட்டம் மொத்தமாக 56GB டேட்டா நன்மையை இந்த திட்டத்தின் பயனர்களுக்கு வழங்குகிறது. இந்த திட்டத்துடன் கிடைக்கும் தினசரி டேட்டா வரம்பு முடிந்த பிறகு இணைய வேகம் குறைக்கப்படும்.

ஏர்டெல் ரூ. 398 திட்டம் (Airtel Rs 398 plan):

இந்த திட்டத்துடன் கிடைக்கும் 2ஜிபி தினசரி டேட்டாவிற்கு பிறகு, உங்கள் இணைய சேவையின் வேகம் 64Kbps ஆக குறைக்கப்படும் என்று ஏர்டெல் தெரிவித்துள்ளது கவனிக்கத்தக்கது. இதுதவிர இந்த திட்டம் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மையை வழங்குகிறது. இதில் லோக்கல் (Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்ஸ் (Roaming Voice Calls) நன்மை ஆகியவை அடங்கும். இத்துடன் தினசரி 100 SMS நன்மையும் கிடைக்கிறது.

இந்த திட்டத்தின் சிறப்பு என்னவென்றால், இந்த திட்டம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar) சந்தாவை இலவசமாக வழங்குகிறது. இந்த திட்டம். ஏர்டெல்லின் இந்த திட்டம் 5ஜி நெட்வொர்க் கவரேஜ் ஏரியாவில் அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) நன்மையை வழங்குகிறது. இதுதவிர, ஏர்டெல் தேங்க்ஸ் (Airtel Thanks) நன்மையாக விங்க் மியூசிக் ( Wynk Music), ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes) போன்ற இலவச நன்மைகளும் கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Airtel Rs 398 Plan With 2GB Daily Data Unlimited Voice 100 SMS and Free Disney Plus Hotstar For 28 Days
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X