முடிச்சு விட்ட ஏர்டெல்.. இனிமே ரூ.398-க்கு ரீசார்ஜ்.. ஆனால், ஜியோவுக்கு ரூ.949 ரீசார்ஜ்.. JioHotstar சந்தா!
இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களான ஜியோ (Jio) மற்றும் ஏர்டெல் (Airtel) ஆகியவை ப்ரீபெய்ட் திட்டங்களில் போட்டிப்போட்டு சலுகைகளை கொடுக்கின்றன. இந்த போட்டி இப்போது ஓடிடி ஆப்களின் சந்தாவை கொடுப்பதிலும் இருக்கிறது. ஆனால், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) சந்தாவை ஏர்டெல் நிறுவனம் அடிமட்ட விலைக்கு கொடுத்து கஸ்டமர்களை தட்டி தூக்கி இருக்கிறது. ஆனால், ஜியோவில் அதிக விலைக்கு மட்டுமே கிடைக்கிறது. இந்த ப்ரீபெய்ட் திட்டங்களின் (Prepaid Plan) முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டார் மற்றும் ஜியோசினிமா ஆகிய ஓடிடி ஆப்கள் இப்போது ஜியோஹாட்ஸ்டார் சந்தாவாக கஸ்டமர்களுக்கு கிடைக்கிறது. இதனால், அந்த சந்தாவை கொடுக்கும் திட்டங்களின் பக்கம் டெலிகாம் கஸ்டமர்களின் கவனம் சென்றுள்ளது. இதில் ஏர்டெல் கஸ்டமர்கள் குஷியாக இருக்கின்றன. ஏனென்றால், அவர்களுக்கு ரூ.398 விலை கொண்ட திட்டத்தில் இந்த சந்தா வருகிறது.

ஆனால், ஜியோ கஸ்டமர்களுக்கு ரூ.949 விலை கொண்ட திட்டத்திலேயே ஜியோஹாட்ஸ்டார் சந்தா கிடைக்கிறது. இதற்கு ஏற்ப வேலிடிட்டி அதிகமாக கிடைத்தாலும், கையில் அதிக காசு இருந்தால் மட்டுமே ஜியோவில் அதை பெறும்படி திட்டம் கொடுக்கப்பட்டிருப்பதை மறுக்க முடியாது. இந்த ஜியோஹாட்ஸ்டார் திட்டங்களின் விவரங்களை பார்த்துவிட்டு நீங்களே முடிவெடுங்கள்.
ஏர்டெல் ரூ 398 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 398 Prepaid Plan): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் 28 நாட்களுக்கு வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் மற்றும் டேட்டா சலுகைகள் கிடைக்கிறது. அதேபோல ஜியோஹாட்ஸ்டார் சந்தாவும் 28 நாட்களுக்கு கிடைக்கிறது. இது மொபைல் (Mobile) சலுகைகளை மட்டுமே கொடுக்கும். நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா மற்றும் 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா உள்ளது.
ஆகவே, 28 நாட்களுக்கு 56 ஜிபி டேட்டாவை பெற்று கொள்ளலாம். இந்த டேட்டா மட்டுமல்லாமல், அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை (Unlimited 5G Data) இந்த திட்டம் கொடுக்கிறது. டேட்டாவை போலவே நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் மற்றும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களின் (Roaming Voice Calls) சலுகை கொடுக்கப்படுகிறது.
இந்த சலுகைகள் போக ஸ்பேம் வாய்ஸ் கால்கள் மற்றும் ஸ்பேம் எஸ்எம்எஸ்கள் அலெர்ட் கிடைக்கிறது. ப்ரீ ஹலோ டியூன்ஸ் சலுகையும் இந்த திட்டத்தில் கிடைக்கிறது. இந்த திட்டத்தில் கிடைக்கும் ஜியோஹாஸ்டார் சந்தாவை ஜியோவில் பெற வேண்டுமானால், 28 நாட்கள் சந்தா கிடைக்காது. மூன்று மாதங்களுக்கான சந்தாவுடன் மட்டுமே திட்டத்தை பெற்று கொள்ள முடியும். இதன் விவரங்கள் இதோ.
ஜியோ ரூ 949 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 949 Prepaid Plan): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் 84 நாட்கள் வேலிடிட்டியில் வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகை கிடைக்கிறது. ஆனால், ஜியோஹாட்ஸ்டார் சந்தாவை 90 நாட்களுக்கு பெற்று கொள்ளலாம். இந்த ஓடிடி சந்தாவும் மொபைல் சலுகையை மட்டுமே கொடுக்கிறது. மற்ற சலுகைகளை பார்க்கையில், அன்லிமிடெட் 5ஜி டேட்டா கிடைக்கிறது.
முந்தைய திட்டத்தில் கிடைத்ததை போலவே நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா மற்றும் 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா கிடைக்கிறது. ஆனால், 84 நாட்கள் வேலிடிட்டி கிடைப்பதால், 168 ஜிபி டேட்டாவை பயன்படுத்த முடிகிறது. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களை கஸ்டமர்கள் செய்து கொள்ளலாம். இதில் சலுகைகள் அதிகமாக இருந்தாலும், அதற்கு ஏற்ப விலையும் இருக்கிறது.


Click it and Unblock the Notifications








