Home
News

ஏர்டெல் Vs ஜியோ.. ரூ.398 மற்றும் ரூ.399 ப்ரீபெய்ட் திட்டங்கள்.. எவ்வளவு நாள் வேலிடிட்டி? எது சிறந்தது?

ஏர்டெல் (Airtel) மற்றும் ஜியோ (Jio) நிறுவனங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு ப்ரீபெய்ட் திட்டங்கள் மற்றும் சலுகைகளை அறிவித்து வருகின்றன. அதன்படி சமீபத்தில் ஜியோவின் ரூ.399 ப்ரீபெய்ட் திட்டத்துக்குப் போட்டியாக ஏர்டெல் நிறுவனம் ரூ.398 திட்டத்தைக் கொண்டுவந்தது. இதில் எந்த திட்டம் சிறந்தது? எதில் ரீசார்ஜ் செய்வது நல்ல என்பதை இந்த திட்டத்தில் பார்க்கலாம்.

ஜியோ ரூ.399 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 399 prepaid plan) தினமும் 2.5ஜிபி டேட்டா வழங்கும். பின்பு 28 நாட்கள் வேலிடிட்டி இந்த திட்டத்தில் உள்ளது. எனவே நீங்கள் இந்த ஜியோ ரூ.399 திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 70ஜிபி டேட்டா வழங்கப்படும். மேலும் இந்த திட்டத்தில் தினமும் 2.5ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறையும் என்பதைக் கவனத்தில் கொள்க.

ஏர்டெல் Vs ஜியோ.. ரூ.398 மற்றும் ரூ.399 ப்ரீபெய்ட் திட்டங்கள்..

அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை ஜியோ ரூ.399 திட்டத்தில் கிடைக்கிறது. இதுதவிர தினமும் 100 எஸ்எம்எஸ், ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema), ஜியோ கிளவுட் (JioCloud) அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data), ஆகியவற்றை இந்த திட்டம் மூலம் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.398 ப்ரீபெய்ட் திட்டம் (airtel rs 398 Prepaid plan) ஆனது தினசரி 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. பின்பு 28 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது இந்த திட்டம். எனவே நீங்கள் ஏர்டெல் ரூ.398 திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 56ஜிபி டேட்டா கிடைக்கும். அதேபோல் இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறையும்.

மேலும் ஏர்டெல் ரூ.398 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது 28 நாட்களுக்கு டிஸ்னி+ ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar) இலவச சந்தா வழங்குகிறது. குறிப்பாக அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை இந்த திட்டத்தில் உள்ளது. இதுதவிர பல்வேறு சலுகைகள் இதில் உள்ளன.

அதன்படி தினமும் 100 எஸ்எம்எஸ் இந்த ஏர்டெல் ரூ.398 ப்ரீபெய்ட் திட்டத்தில் வழங்கப்படுகிறது. மேலும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data), விங்க் மியூசிக் ( Wynk Music), ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes), உள்ளிட்ட பல சலுகைகளை இந்த திட்டத்தில் கிடைக்கிறது
என்பது குறிப்பிடத்தக்கது.

ஏர்டெல் Vs ஜியோ.. ரூ.398 மற்றும் ரூ.399 ப்ரீபெய்ட் திட்டங்கள்..

எது சிறந்தது? ஜியோ நிறுவனம் தனது ரூ.399 ப்ரீபெய்ட் திட்டம் அதிக டேட்டாவை வழங்கினாலும் ஓடிடி சலுகைகளை வழங்கவில்லை. ஆனால் ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.398 திட்டம் ஆனது சற்று குறைவான டேட்டா நன்மையை வழங்கினாலும் ஓடிடி நன்மையை வழங்குகிறது, அதுவும் ஹாட்ஸ்டார் சந்தாவை மிகவும் கம்மி விலையில் கொடுக்கிறது ஏர்டெல். எனவே ஜியோ ரூ.399 திட்டத்தை தேர்வு செய்வதை விட ஏர்டெல் ரூ.398 ப்ரீபெய்ட் திட்டத்தை தேர்வு செய்வது மிகவும் நல்லது.

அதேபோல் ஜியோ நிறுவனம் சமீபத்தில் ரூ.2025 ப்ரீபெய்ட் திட்டத்தைக் கொண்டுவந்தது. இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் தினமும் 2.5ஜிபி டேட்டா கிடைக்கும். பின்பு இந்த திட்டத்தின் வேலிடிட்டி 200 நாட்கள் ஆகும். எனவே மொத்தமாக இந்த திட்டம் மூலம் 500ஜிபி டேட்டா பெறமுடியும். பின்பு வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினமும் 100 எஸ்எம்எஸ், ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema), ஜியோ கிளவுட் (JioCloud) அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data), உள்ளிட்ட சலுகைகள் இதில் உள்ளன.

More from GizBot

Best Mobiles in India

English summary
Airtel Rs 398 Plan Vs Jio Rs 399 Plan With Unlimited Voice Calls 28 days Validity Check best Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X