Home
News

Airtel ஒரே ரீசார்ஜ்.. 28 நாட்களுக்கு இனிமே இந்த ரீசார்ஜ் தான் பண்ணுவீங்க.. 2 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ்!

ஏர்டெல் நிறுவனத்தில் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கும் திட்டங்கள் நல்ல வரவேற்பு பெறுகின்றன. இதில் அன்லிமிடெட் 5ஜி டேட்டா மற்றும் ஓடிடி சந்தாவும் கொண்ட திட்டத்தை தேடிக் கொண்டிருக்கும் ப்ரீபெய்ட் கஸ்டமர்கள் இந்த திட்டத்தை கண்ணை மூடிக் கொண்டு ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.

ஏர்டெல் ரூ.398 திட்ட விவரங்கள் (Airtel Rs 398 Plan Details): 28 நாட்கள் வேலிடிட்டியுடன் அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) சலுகையை இந்த ப்ரீபெய்ட் திட்டம் கொடுக்கிறது. இந்த 5ஜி டேட்டா சலுகை மட்டுமல்லாமல், நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டாவை இந்த திட்டத்தில் பயன்படுத்தலாம். இந்த டேட்டா 4ஜி வேகத்தில் மட்டுமே கிடைக்கும். 56 ஜிபி டேட்டாவை பெறலாம்.

Airtel ஒரே ரீசார்ஜ்.. 28 நாட்களுக்கு இனி இந்த ரீசார்ஜ்தான் பண்ணுவீங்க!

இந்த 2 ஜிபி டேட்டாவுக்கு பிறகும் 64 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டாவை பெற்று கொள்ளலாம். இந்த டேட்டா சலுகைகளுக்கு ஏற்பவே ரூ.398 விலை இருக்கிறது. அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Unlimited Local, STD & Roaming Voice Calls) கிடைக்கிறது. நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் சலுகையும் இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு கிடைக்கிறது.

கூடுதல் சலுகைகளை பொறுத்தவரையில், இந்த ஏர்டெல் ரூ.398 திட்டத்தில் ஜியோஹாட்ஸ்டார் மொபைல் (JioHotstar Mobile) சந்தா கொடுக்கப்பட்டுள்ளது. இந்த சந்தாவை 28 நாட்களுக்கு ஏர்டெல் கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். இன்கம்மிங் வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ்களில் ஸ்பேம் அலெர்ட் கிடைக்கும். ப்ரீ ஹலோ டியூன்ஸ் சலுகையை பெற்று கொள்ளலாம்.

மேலும், பெர்ப்லெக்ஸிடி ஏஐ ப்ரோ சந்தாவை இந்த ஏர்டெல் ரூ.398 திட்டம் கொடுத்துள்ளது. இந்த 2 ஜிபி டேட்டாவை விட கூடுதல் டேட்டா வேண்டுமானால், ரூ.1 கூடுதலாக கொடுத்து ஏர்டெல் ரூ.399 ப்ரீபெய்ட் திட்டத்தை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். இதில் தினசரிக்கு 2.5 ஜிபி டேட்டா கிடைக்கும். அதேபோல அன்லிமிடெட் 5ஜி டேட்டாவையும் கஸ்டமர்கள் பெற்று கொள்ளலாம்.

ஏர்டெல் ரூ.399 திட்ட விவரங்கள் (Airtel Rs 399 Plan Details): 28 நாட்கள் வேலிடிட்டி மட்டுமே இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கும் கிடைக்கிறது. ரூ.1 மட்டுமே விலை அதிகமாக இருக்கிறது. ஆனால், தினசரி டேட்டாவில் 500 எம்பியை கூடுதலாக கொடுத்துள்ளது. அதாவது, முந்தைய திட்டத்துக்கு நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா கொடுக்கப்பட்டது. இதில் 2.5 ஜிபி டேட்டா கிடைக்கிறது.

28 நாட்களுக்கு 70 ஜிபி டேட்டா கொடுக்கிறது. இது முந்தைய ப்ரீபெய்ட் திட்டத்தைவிட 14 ஜிபி டேட்டா கூடுதலாக இருக்கிறது. மேலும், அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகையை இந்த ப்ரீபெய்ட் திட்டமும் கொடுத்துள்ளது. 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டாவும் இந்த திட்டத்துக்கு கிடைக்கிறது. வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ், ஓடிடி மற்றும் கூடுதல் சலுகைகள் ஒரே மாதிரி இருக்கின்றன.

அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் சலுகை கொண்டுள்ளது. நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் கொடுத்துள்ளது. ஜியோஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவும் கிடைக்கிறது. இந்த சந்தாவையும் 28 நாட்களுக்கு மட்டுமே கஸ்டமர்கள் பயன்படுத்த முடியும். ப்ரீ ஹலோ டியூன்ஸ் சலுகையை கஸ்டமர்கள் பெற்று கொள்ளலாம். ஸ்பேம் அலெர்ட் சலுகை வருகிறது.

இன்கம்மிங் வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ்களில் ஸ்பேம் அலெர்ட் கிடைக்கும். பெர்ப்லெக்ஸிடி ஏஐ ப்ரோ சந்தாவும் இந்த திட்டத்துக்கு கிடைக்கும். ஜியோஹாட்ஸ்டார் மற்றும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகை கொண் ப்ரீபெய்ட் திட்டம் வேண்டுமானால், இந்த இரண்டு திட்டங்களில் ஒரு திட்டத்தை கஸ்டமர்கள் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Airtel Rs 398 Plan 2GB Data Unlimited Voice 28 Days Validity JioHotstar App Check Unlimited 5G Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X