அடிதூள்.. ஏர்டெல் ரூ.395 ப்ரீபெய்ட் திட்டம் அறிமுகம்.. எத்தனை நாள் வேலிடிட்டி? என்னென்ன நன்மைகள்?
ஏர்டெல் (Airtel) நிறுவனம் தொடர்ந்து அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக ஜியோ நிறுவனத்திற்குப் போட்டியாக அவ்வப்போது ப்ரீபெய்ட் திட்டங்களில் சலுகைகளும் வழங்குகிறது ஏர்டெல் நிறுவனம். இந்நிலையில் புதிய ப்ரீபெய்ட் திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது ஏர்டெல் நிறுவனம். இது குறித்து விரிவான தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
அதாவது ஏர்டெல் நிறுவனம் தற்போது ரூ 395 ப்ரீபெய்ட் திட்டத்தைத் தான் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த திட்டம் அதிக டேட்டா நன்மையை வழங்கவில்லை என்றாலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் அதிக நாள் வேலிடிட்டி வழங்குகிறது. இப்போது ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.395 ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மைகளைப் பார்க்கலாம்.

ஏர்டெல் ரூ 395 ப்ரீபெய்ட் திட்டம் ( Airtel Rs 395 Prepaid Plan) ஆனது மொத்தம் 6ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும். குறிப்பாக வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் 600 எஸ்எம்எஸ் நன்மைகள் இதில் உள்ளது. இதுதவிரவிங்க் மியூசிக் ( Wynk Music), ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes), அப்பல்லோ 24/7 சர்க்கிள் (apollo 24/7 circle) போன்ற நன்மைகளும் இதில் சேர்க்கப்பட்டுள்ளது.
அதாவது அழைப்பு நன்மைகளுடன் அதிக நாள் வேலிடிட்டி எதிர்பார்க்கும் பயனர்கள் இந்த ஏர்டெல் ரூ 395 திட்டத்தில் ரீசார்ஜ் செய்வது நல்லது. மேலும் ஏர்டெல் நிறுவனம் வழங்கும் சில அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை இப்போது பார்க்கலாம்.

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ 499 ப்ரீபெய்ட் திட்டத்தில் (airtel rs 499 plan Details) ரீசார்ஜ் செய்தால் மூன்று மாதங்களுக்கு டிஸ்னி+ ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar) இலவச சந்தா கிடைக்கும். அதேபோல் தினமும் 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது இந்த திட்டம். பின்பு ஏர்டெல் ரூ.499 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். எனவே இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 84ஜிபி டேட்டா கிடைக்கும்.
வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினமும் 100 எஸ்எம்எஸ், அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data), விங்க் மியூசிக் ( Wynk Music), ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes), அப்பல்லோ 24/7 சர்க்கிள் (apollo 24/7 circle) உள்ளிட்ட பல சலுகைகளை வழங்குகிறது ஏர்டெல் ரூ.499 ப்ரீபெய்ட் திட்டம்.
ஏர்டெல் நிறுவனத்தின் ரூ 699 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 699 Plan Details) 56 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் தினமும் 3ஜிபி டேட்டா கிடைக்கிறது. எனவே நீங்கள் இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 168ஜிபி டேட்டா கிடைக்கும். இதுதவிர 56 நாட்களுக்கு அமேசான் பிரைம் மெம்பர்ஷிப் (amazon prime membership) வழங்கும் இந்த ரூ 699 ப்ரீபெய்ட் திட்டம்.

அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினமும் 100 எஸ்எம்எஸ், ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே (Airtel Xstream Play) சந்தா, அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data), விங்க் மியூசிக் ( Wynk Music), ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes), அப்பல்லோ 24/7 சர்க்கிள் (apollo 24/7 circle)உள்ளிட்ட பல சலுகைகளை வழங்குகிறது ஏர்டெல் ரூ.699 ப்ரீபெய்ட் திட்டம்.
ஏர்டெல் நிறுவனத்தின் ரூ 999 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 999 Plan Details) 84 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் தினமும் 2.5ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினமும் 100 எஸ்எம்எஸ், 84 நாட்களுக்கு அமேசான் பிரைம் மெம்பர்ஷிப், ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே சந்தா, அன்லிமிடெட் 5ஜி டேட்டா, விங்க் மியூசிக், ப்ரீ ஹாலோடியூன்ஸ், அப்பல்லோ 24/7 சர்க்கிள், உள்ளிட்ட பல நன்மைகள் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








