Home
News

இனிமே இதான்.. Airtel-க்கு ரூ.379 ரீசார்ஜ்.. அன்லிமிடெட் வாய்ஸ்.. 2 ஜிபி டேட்டா.. அடிமட்ட விலையில் திட்டம்!

ஏர்டெல் (Airtel) சிம் கார்டு வைத்திருக்கும் கஸ்டமர்கள் தினசரிக்கு 2 ஜிபி டேட்டாவுடன் அன்லிமிடெட் வாய்ஸ் கால்களை கொடுக்கும் திட்டத்தை அடிமட்ட விலைக்கு ரீசார்ஜ் செய்ய வேண்டுமானால், அவர்களுக்கு ரூ.379 விலைக்கு கிடைக்கும் ப்ரீபெய்ட் திட்டமே பக்கா ஆப்ஷனாக இருக்கிறது. இந்த விலைக்கு வேறு பெஸ்ட் திட்டம் கிடையாது. ஆகவே, 2025 ஆம் ஆண்டில் 2 ஜிபி டேட்டா திட்டத்தில் கம்மியான விலைக்கு திட்டம் தேவைப்பட்டால், இதை ரீசார்ஜ் செய்து கொள்ளுங்கள்.

இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் 2 ஜிபி டேட்டா மட்டுமல்ல, அன்லிமிடெட் 5ஜி டேட்டாவும் (Unlimited 5G Data) கஸ்டமர்களுக்கு கிடைக்கிறது. சொல்லப்போனால், அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை பெறுவதற்கு ஆரம்ப விலை திட்டமாகவும் இது இருக்கிறது. ஆகவே, டேட்டாவுக்கு துளியும் குறையில்லாமல் இந்த திட்டம் உங்களுக்கு சலுகைகளை கொடுக்கும். மேலும், பல்வேறு சலுகைகள் இதில் இருக்கின்றன.

இனிமே இதான்.. Airtel-க்கு ரூ.379 ரீசார்ஜ்.. அன்லிமிடெட் வாய்ஸ்!

ஏர்டெல் ரூ 379 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 379 Prepaid Plan): இந்த ஏர்டெல் திட்டத்துக்கு 28 நாட்கள் அல்லது 30 நாட்கள் வேலிடிட்டி இல்லை. 1 மாதத்துக்கு கொடுக்கப்படுகிறது. ஆகவே, மாதத்துக்கு ஏற்ப 31 நாட்கள் வரையில் வேலிடிட்டி பெற்று கொள்ளலாம். இந்த நாட்கள் முழுவதும் உங்களுக்கு அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகைகள் கொடுக்கப்படும். அதேபோல 2 ஜிபி டேட்டாவும் கிடைக்கும்.

இந்த 2 ஜிபி டேட்டாவை தினசரிக்கு பயன்படுத்தலாம். இதற்கு பிறகும் 64 கேபிபிஎஸ் வேகத்தில் உங்களுக்கு டேட்டா சலுகை வழங்கப்படும். இந்த டேட்டாவுக்கு அடுத்தப்படியாக ஏர்டெல் கஸ்டமர்கள் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகையை மாதம் முழுவதும் பயன்படுத்தி கொள்ளலாம். மேலும், எஸ்எம்எஸ் சலுகை இருக்கிறது.

ஆகவே, 100 எஸ்எம்எஸ்கள் நாளொன்றுக்கு அனுப்பும்படி வழங்கப்படுகிறது. இந்த 5ஜி டேட்டா, வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ்கள் மட்டுமல்லாமல், ஓடிடி பிரியர்களை கவருவதற்காக ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஆப் (Airtel Xstream App) மூலம் பல்வேறு இலவச வீடியோக்களை கஸ்டமர்களுக்கு கொடுத்துள்ளது. இதுபோக இலவச ஸ்பேம் வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ்கள் அலெர்ட் சலுகையை பேக் செய்கிறது.

ஆகவே, கூடுதல் ஆப்கள் இல்லாமல், ஏஐ மூலம் ஸ்பேம் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் டிடெக்ட் செய்து கொள்ளலாம். இதர சலுகைகளை பொறுத்தவரையில், அப்பல்லோ 24/7 சர்க்கிள் (Apollo 24/7 Circle) சலுகை மூன்று மாதங்களுக்கு கூடுதல் கட்டணம் இல்லாமல் வழங்கப்படுகிறது. மேலும், இலவச ஹலோ டியூன்ஸ் (Free Hello Tunes) சலுகையானது, மாதத்துக்கு ஒன்று என்னும் கணக்கில் கஸ்டமர்களுக்கு கொடுக்கப்படுகிறது.

இப்படி ஏகப்பட்ட சலுகைகளை இந்த ஏர்டெல் ரூ.379 மதிப்பிலான திட்டம் கொடுக்கிறது. உங்களுக்கு அன்லிமிடெட் 5ஜி டேட்டாவுடன் அடிமட்ட விலையிலான திட்டம் வேண்டுமானால், இந்த 2 ஜிபி டேட்டா திட்டத்தை கண்ணை மூடிக்கொண்டு ரீசார்ஜ் செய்யலாம். இதற்கு அடுத்து அதிக வேலிடிட்டியில் அன்லிமிடெட் 5ஜி டேட்டா திட்டம் வேண்டுமானால், ரூ 649 மதிப்பிலான திட்டத்துக்கு செல்லலாம்.

இந்த ஏர்டெல் ரூ 649 ப்ரீபெய்ட் திட்டத்தில் கிட்டத்தட்ட முந்தைய திட்டத்தில் பார்த்த அனைத்து சலுகைகளும் கிடைக்கின்றன. ஆனால், வேலிடிட்டி மட்டும் 56 நாட்களுக்கு கிடைக்கிறது. ஆகவே, இந்த வேலிடிட்டியில் தினசரிக்கு 2 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், எக்ஸ்ஸ்ட்ரீம் ஆப், அப்பல்லோ 24/7 சர்க்கிள், இலவச ஹலோ டியூன்ஸ் மற்றும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகைகள் கொடுக்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Airtel Rs 379 Prepaid Plan With Unlimited Voice Calls Check Cheapest 2GB Data Plan For 2025
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X